சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை மக்களே உஷார்.. பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ 1 லட்சம் வரை அபராதம்.. அமலுக்கு வந்தது

Google Oneindia Tamil News

Recommended Video

    Penalty Ror Plastic : இன்று முதல் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ 1 லட்சம் வரை அபராதம்

    சென்னை: தமிழகத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்ற விதிமுறை அமலுக்கு வந்தது.

    தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கும் விற்பதற்கும் அரசு தடை விதித்தது. இந்த பிளாஸ்டிக் தடை விவகாரத்தை வியாபாரிகளும் பொதுமக்களும் சிறிது நாட்கள் மட்டுமே கடை பிடித்தனர்.

    அபராதம்

    அபராதம்

    கொஞ்ச நாட்கள் கழித்து மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு தலைத்தூக்கத் தொடங்கியது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பதாக புகார் எழுந்தது. இதனால் இன்று முதல் பிளாஸ்டிக்கை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோரிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்ற விதிமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது.

    பொதுமக்கள்

    பொதுமக்கள்

    இதற்காக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள், சேமித்து வைப்பவர்கள், வணிக ரீதியாக பயன்படுத்தும் பெரிய கடைக்காரர்கள், சிறிய கடைக்காரர்கள், பொதுமக்கள் என ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

    உரிமம் ரத்து

    உரிமம் ரத்து

    முதல் முறை பிடிப்பட்டால் ரூ25 ஆயிரமும், இரண்டாவது முறை பிடிப்பட்டால் ரூ ஐம்பதாயிரமும், மூன்றாவது முறை சிக்கினால் ரூ. 1 லட்ச ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட உள்ளது. நான்காவது முறையாக பிடிபட்டால், விற்பவரின் கடை உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சோதனை

    சோதனை

    பொதுமக்களை பொருத்தமட்டில், அதிகாரிகள் வீடுகளில் சோதனை செய்யும்போது பிளாஸ்டிக் பொருட்களை வைத்து இருப்பது கண்டறியப்பட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து அவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து வைத்தால் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Tamilnadu Government imposes penalty for plastic in Tamilnadu from today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X