சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு நாள் நிச்சயம் நடக்கும்.. செய்தே தீருவேன்! திடீரென அழகுத் தமிழில் பேசி.. சபதம் போட்ட ஆளுநர் ரவி!

Google Oneindia Tamil News

சென்னை: இன்று வேலூரில் நடந்த சந்நியாசிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆளுநர் ரவி தமிழில் பேசி வியப்பளித்தார்.

வேலூரில் நடக்கும் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் இன்று ஆளுநர் ஆர் . என் ரவி பேசினார். 5 நாள் நடைபெறும் பாலாறு பெருவிழாவில் இன்று ஆளுநர் ஆர். என் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஆளுநர் ரவி பல்வேறு சந்நியாசிகள் முன்னிலையில் சனாதன தர்மம் பற்றி பேசினார். அதிசயமாக அவர் முழுக்க முழுக்க தமிழில் பேசினார்.

மகாராஷ்டிரா:உத்தவ் தாக்கரே அரசு நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அதிரடி உத்தரவு மகாராஷ்டிரா:உத்தவ் தாக்கரே அரசு நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அதிரடி உத்தரவு

 தமிழில் உரை

தமிழில் உரை

தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் எழுதி அதை பார்த்து பேசினாலும், பெரிதாக பிழை இன்றி.. சிறப்பான உச்சரிப்புகளோடு பேசினார். அதோடு பெரிதாக எழுதிய வார்த்தைகளை பார்க்காமல் நினைவில் இருந்ததை அப்படியே ஒப்புவித்தார். முக்கியமாக அவரின் சில உச்சரிப்புகள் ஆச்சர்யம் அடைய வைத்தது. இதுவரை தமிழில் பேசி பழக்கம் இல்லாதவர் சில வார்த்தைகளை சிறப்பாக உச்சரித்தார்.

நதிகள்

நதிகள்


ஆளுநர் ரவி தனது உரையில், நதிகளை வழிபடுவது இந்த பாரதம் முழுக்க இருக்கும் வழக்கம். நாடு முழுக்க இந்த பழக்கம் உள்ளது. சில நதிகளை நாம் தினமும் பிரார்த்தனை செய்கிறோம். இது ஒன்றும் புதிது அல்ல. இது பாரதத்தில் பழங்காலமாக இருக்கும் பாரம்பரியம்.

ஆளுநர் உரை

ஆளுநர் உரை

நண்பர்களே தமிழ் மிகவும் பழமையான மொழி. அழகான மொழி. தமிழ் மிகவும் சக்திவாய்ந்த மொழி. தமிழ் மக்கள் போல தமிழ் பேச வேண்டும் என்பது எனது விருப்பம் ஆகும். ஒருநாள் அவர்களை போல தமிழ் பேச வேண்டும். அவர்களை போல உச்சரிக்க வேண்டும்.

 ஆங்கிலம்

ஆங்கிலம்

அதுவரை மட்டும் நான் ஆங்கிலத்தில் பேசுவேன். தமிழ் முழுமையாக கற்ற பின் தமிழர்களை பேசுவேன், என்று ஆளுநர் ரவி குறிப்பிட்டார் . அதன்பின் ஆங்கிலத்தில் பேசிய ரவி, நாம் பாலாற்றை வணங்க இங்கே வந்து இருக்கிறோம். இந்தியா முழுக்க நதிகளை வணங்கும் வழக்கம் உள்ளது. அது இங்கும் உள்ளது. இதுதான் நம்முடைய கலாச்சாரம். இதுதான் சனாதன கலாச்சாரம், என்று ஆளுநர் ரவி தனது உரையில் குறிப்பிட்டார் .

English summary
Tamil Nadu Governor R N Ravi suddenly turns into Tamil and says promises he will talk more.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X