அரசு வங்கி கணக்கையே ஹேக் செய்த கும்பல்.. நாகையில் ரூ.11 லட்சம் திருட்டு! என்ன நடந்தது
நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அரசு வங்கிக் கணக்கையே மர்ம நபர்கள் ஹேக் செய்து ரூ.11 லட்சத்தைத் திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்த ஹேக்கர்கள் சிலரே இதற்கு காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்.
இந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட எல்லாமே இணைய வழியாகவே இருக்கிறது. இதனால் சைபர் பாதுகாப்பு என்பது நாளுக்கு நாள் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறி வருகிறது. எவ்வளவு பாதுகாப்பு வசதிகள் வந்தாலும் கூட அதையும் தாண்டி ஹேக்கர்கள் மோசடி செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.

தனி நபர்களை குறிவைத்து நடக்கும் மோசடி சம்பவங்களை நாம் பார்த்திருக்கிறோம். டிஜிட்டல் கைது தொடங்கி பல வகைகளில் மோசடிகள் நடந்து வருகிறது. இப்போது அதை தூக்கியே சாப்பிடும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. தனிநபர் கணக்குகளை தாண்டி அரசு கணக்குகளையே ஹேக்கர்கள் ஹேக் செய்து முடக்கியுள்ளனர்.
நாகை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அரசு வங்கிக் கணக்கையே மர்ம நபர்கள் ஹேக் செய்து ரூ.11 லட்சத்தைத் திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சைபர் கொள்ளையில் கேரளாவை சேர்ந்த ஹேக்கர்களுக்குத் தொடர்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சொந்தமான அரசு வங்கிக் கணக்கில்தான் இந்த திருட்டு நடந்துள்ளது. மர்ம நபர்கள் ஆன்லைன் வழியாக வங்கி கணக்குக்குள் ஊடுருவி, அதில் இருந்த ரூ.11 லட்சம் பணத்தை எடுத்துள்ளனர். அரசு அலுவலகத்தின் வங்கி கணக்கிலிருந்தே இவ்வளவு பெரிய தொகை திருடப்பட்டதை அறிந்த ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சம்பவம் குறித்து சைபர் கிரைம் காவல்துறையிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், இந்த இணையவழி சைபர் மோசடியில் கேரளாவை சேர்ந்த ஹேக்கர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஹேக்கர்களை கண்டறியும் முயற்சியிலும், பணத்தை மீட்கும் முயற்சியிலும் போலீசார் இப்போது இறங்கியுள்ளனர்.
அரசு துறையின் வங்கி கணக்கையே குறிவைத்து மர்ம நபர்கள் பணத்தைத் திருடியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணம் எவ்வாறு திருடப்பட்டது, இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட கோணங்களில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications
