புதிய கொள்கை.. தமிழகத்தில் 16 லட்சம் வாகனங்கள்.. சென்னையில் மட்டும் 3லட்சம் வாகனங்களுக்கு சிக்கல்
சென்னை : மத்திய அரசின் புதிய வாகன கொள்கையின்படி, 15 வருடங்களுக்கு மேல் உள்ள வர்த்தக வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. இந்த கொள்கையின் காரணமாக தமிழகத்தில் 16 லட்சம் வாகனங்கள் பழைய இரும்பு கடைக்கு செல்ல போகின்றன. இதில் சென்னையில் மட்டும் 3 லட்சம் வாகனங்கள் பயன்படுத்த முடியாமல் போகும்.
Recommended Video
மத்திய அரசு புதிய வாகன ஒழிப்பு கொள்கையை. கடந்த வாரம் தொடங்கி உள்ளது. இந்த கொள்கையின்படி, 15 வருடங்களுக்கு மேல் உள்ள வர்த்தக வாகனங்கள். 20 வருடங்களுக்கு மேல் பயன்பாட்டில் இருந்த தனிநபர்களின் வாகனங்கள் ( தகுதி தேர்வில் தோல்வி அடைந்தவை) ஆகியவை இனி சாலைகளில் ஓடக்கூடாது.
இந்த புதிய கொள்கை வாகன உரிமையாளர்களுக்கு சிக்கலையும், ஆட்டோமொபைல் விற்பனையாளர்களுக்கு மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. ஒரு பக்கம் வரவேற்பும் மறுபக்கம் நெருக்கடியையும் அளித்துள்ளது அரசின் இந்தபுதிய கொள்கை.

தள்ளிப்போடுங்கள்
கொரோனா காரணமாக 18 மாதங்களாக முடக்கத்தில் உள்ள லாரி மற்றும் கார் உரிமையாளர்கள் புதிய கொள்கையை இன்னும் சிறிது காலத்திற்கு தள்ளிப்போட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். புதிய கொள்கை அமலுக்கு வந்தால் வாகன பற்றாக்குறை ஏற்படும் என்றும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்றும் கூறுகின்றனர்.

திட்டத்தால் மகிழ்ச்சி
அதேநேரம் இந்த திட்டத்தை ஆட்டோ மொபைல் தயாரிப்பாளர்கள் வரவேற்கிறார்கள். இத்திட்டத்தின் காரணமாக புதிய வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்றும். வாகன உற்பத்தி அதிகரித்து , மந்த கதியில் உள்ள ஆட்டோ மொபைல் துறை வளர்ச்சி அடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஏனெனில் கொரோனா பொது முடக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் ஆட்டோ மொபைல் துறையினர் தான். புதிய வாகன விற்பனை கடும் சரிவினை சந்தித்ததால் அரசு இத்திட்டத்தை ஊக்குவித்துள்ளது,

விலை பாதிக்கும்
இதனிடையே பழைய கார்களை விற்பனை செய்வோர், அரசின் பழைய வாகன ஒழிப்பு கொள்கை பற்றி கூறுகையில், 'நன்கு பராமரிக்கப்பட்ட கார் முந்தைய உரிமையாளர்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல் நல்ல விலைக்கு விற்பனையாகி வருகிறது. இந்த கொள்கை பயன்படுத்தப்பட்ட கார்களின் விலையை பாதிக்கும் என்று நினைக்கிறோம் என்றார்கள்.

முதலீடு
சென்னை ஆட்டோமொபைல் துறையைச் சேர்ந்தவர்கள் இதுபற்றிகூறும போது, அரசின் கொள்கை படி கை ஸ்கிராப்பிங் மையங்களை அமைப்பதில் அதிக தனியார் முதலீடுகள் இனி அதிகரிக்கும. தற்போது ஒரே ஒரு மையம் மட்டுமே சென்னையில் உள்ளது. கடந்த ஆண்டு நிறுத்தப்பட்ட மத்திய ஸ்டீல் அமைச்சகத்துடன் இனைத்து தனியார் நிறுவனம் நடத்தும் நிறுவனம் குறைந்தது 200 கார்களை ஒவ்வொரு மாதமும் மறுசுழற்சி செய்கிறது. இந்த கொள்கை நடைமுறைக்கு வந்தபிறகு மறுசுழற்சி அளவு அதிகரிக்கும் என்கிறார்கள்.

85 சதவீதம் பழையவை
லாரி உரிமையாளர்கள் கூறும் போது, 'பெரிய லாரிகள் நகரத்திற்குள் நுழைய முடிவது இல்லை. நடுத்தர மற்றும் சிறிய அளவிலான லாரிகள் மட்டுமே சரக்குகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகின்றன. இதில் 85 சதவீதம் பழைய வாகனங்கள் ஆகும். அரசின் புதிய கொள்கையின் காரணமாக வாகன பற்றாக்குறை ஏற்படும். அத்தியாவசிய பொருட்களின் விலையில் பெரும் உச்சம் ஏற்படும்.

வரியை உயர்த்தலாம்
தொற்றுநோய் காரணமாக கடந்த 18 மாதங்களாக நாங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளோம். எனவே இந்த திட்டத்தை அமல்படுத்துவதை சிறிது காலம் ஒத்திப்போட வேண்டும். அதற்குபதில் பழைய வாகனங்களில் இருந்து சேகரிக்கப்படும் பசுமை வரியை ஆண்டுக்கு ரூ.10,000 வரை அரசு அதிகரிக்கலாம் என்று கோரிக்கை வைத்தனர்.

மின்சார வாகனம்
இதுபற்றி அதிகாரிகள் கூறும் போது " தற்போதைய சூழலில் புதிய கொள்கை அவசியமானது. நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் நிலையை இலக்குகளை அடைய உதவும். இந்த கொள்கை காற்று மாசுபாட்டை குறைக்க உதவும். இந்தியாவில் மின்சார இயக்கத்தை ஊக்குவிக்கவும் புதிய கொள்கை உதவும்" என்றார்கள்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications