அமைச்சர், முதல்வரிடம் போக கூடாது.. அரசு ஊழியர்களுக்கு புது ரூல்ஸ்! கண்டுகொள்ளாமல் இருக்கும் விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது இனி, இந்த ஊழியர்கள் தங்கள் பிரச்சனைகளை துறை தலைவர்களிடம் தீர்த்துக்கொள்ள வேண்டும். இவர்களை தாண்டி அமைச்சர்கள், முதலமைச்சரிடம் சென்றால்.. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய விதிமுறையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கூடுதல் இயக்குநர் ராஜசேகர் இந்த புதிய உத்தரவை பிறப்பிதிருக்கிறார். இந்த உத்தரவு தங்களின் அடிப்படை உரிமைகளையே பறிப்பதாக ஊழியர்கள் கொந்தளித்துள்ளனர்.

TVK

உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "இனிவரும் காலங்களில், அலுவலர்கள்/பணியாளர்கள் தங்களது பணி தொடர்பான எந்தவொரு கோரிக்கை அல்லது குறைகளுக்கும் தங்களது அலுவலகத் தலைவர் /துறைத் தலைமை வழியாக உரிய நிர்வாக நடைமுறையைப் பின்பற்றி மட்டுமே (Through Proper Official Channel) விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

துறைத் தலைவரின் முன் அனுமதியின்றி அல்லது உரிய வழியைப் பின்பற்றாமல் நேரடியாக மாண்புமிகு அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது முதலமைச்சரின் முகவரி போன்ற உயர் அமைப்புகளுக்கு மனு அனுப்புவதோ அல்லது வெளிச் செல்வாக்குகளைப் பயன்படுத்த முயற்சிப்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

இந்த அறிவுறுத்தலையும் தாண்டி, எவரேனும் இவ்வாறு அலுவலகத் தலைவர் /துறைத்தலைவர் வழியாக அல்லாமல் நேரடியாக மனுக்கள் சமர்ப்பிப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர்/பணியாளர் நடத்தை விதி 18-ஐ மீறியதாகக் கருதப்பட்டு அவர் மீது தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் கீழ் (INCS (D&A) Rules) உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

அனைத்து அலுவலகத் தலைவர்களும் இச்சுற்றறிக்கையினைத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்துப் பிரிவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி. அதற்கான ஒப்புதலினைப் பெற்றுப் பராமரிக்குமாறு மண்டல பயிற்சி இணை இயக்குநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலோட்டமாக பார்த்தால் இதெல்லாம் சரி என்பதை போலத்தான் இருக்கும். ஆனால், ஒரு துறைக்குள் இருக்கும் ஊழியர்களுக்கும், துறை தலைவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கிறது எனில், துறை தலைவர் எப்படி அந்த ஊழியர்களின் கோரிக்கையை மேலிடத்திற்கு கொண்டு செல்வார்? சம்பந்தப்பட்ட ஊழியரின் மனுவை நீண்ட காலத்திற்கு அப்படியே கிடப்பில் போட்டுவிடவும் வாய்ப்பு இருக்கிறது. தன் தரப்பு நியாயத்தை மேலதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை எனில், அதை உரிய இடத்தில் முறையீடு செய்ய ஊழியர்களுக்கு உரிமை இருக்கிறது.

ஆனால் இன்று பிறப்பிக்கப்பட்டிருக்கும் உத்தரவை பார்த்தால், அப்படியான எல்லா உரிமைகளையும் பறிப்பதை போல இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இதுபோன்ற உத்தரவுகளை எல்லாம் பிறப்பிப்பதற்கு முன்னர் முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்கு போகாதா? விஜய் இதை பார்க்க மாட்டாரா? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+