கிராம நத்தம்! 30 வருட புறம்போக்கு நிலத்திற்கு அரசின் பட்டா கிடைக்குமா? சின்ன தவறு தரும் பெரிய பாடம்
சென்னை: தமிழ்நாட்டில் பல தலைமுறைகளாக மக்கள் வசித்து வரும் பல இடங்கள் புறம்போக்கு நிலங்கள் என்றுதான் அழைக்கப்படுகின்றன. "30 வருஷமா இங்கேதான் குடியிருக்கோம், ஆனா இன்னும் பட்டா கிடைக்கலையே" என்ற ஆதங்கம் பல குடும்பங்களில் இன்னைக்கும் உண்டு. அரசு நிலத்தில் வசிப்பவர்கள் பட்டா பெற முடியுமா, அதற்கான நடைமுறைகள் என்ன என்பதை சாமானிய மக்களும் புரியும் வகையில் இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை எல்லா புறம்போக்கு நிலங்களும் ஒரே மாதிரி கிடையாது. அரசு நிலங்களை அதன் பயன்பாட்டைப் பொறுத்து ஆட்சேபனையற்றது மற்றும் ஆட்சேபனையுள்ளது என இரண்டு முக்கிய பிரிவுகளாக பிரிக்கிறது. உங்கள் நிலம் எந்த வகையை சார்ந்தது என்பதைப் பொறுத்தே உங்களுக்குப் பட்டா கிடைக்குமா என்பது முடிவாகும்.

எந்த நிலங்களுக்குப் பட்டா கிடைக்கும்?
கிராம நத்தம், தரிசு நிலங்கள், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத நஞ்சை, புஞ்சை என வகைப்படுத்தப்பட்ட அரசு நிலங்கள் ஆட்சேபனையற்றவை என்று சொல்வார்கள்.
அதாவது, அந்த நிலத்தை ஒரு தனிநபருக்கு கொடுப்பதால் மற்றவர்களுக்கோ அல்லது அரசு திட்டங்களுக்கோ எந்தப் பாதிப்பும் கிடையாது என்றால், அங்கு நீண்டகாலமாக வசிப்பவர்களுக்கு அரசு நிச்சயம் பட்டா வழங்கும். குறிப்பாக, 5 வருஷத்துக்கும் மேலாக ஒரு இடத்தில் குடியிருந்து, அதற்கான மின்சார கட்டணம், சொத்து வரி அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆதாரங்களை வைத்திருப்பவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் முறையாக விண்ணப்பிக்கலாம்.
யாரெல்லாம் பட்டா பெற முடியாது?
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பல வருடங்களுக்கு முன்பேயே ஒதுக்கப்பட்ட நிலங்களை அரசு ஒருபோதும் தனிநபருக்கு பட்டாவாக வழங்காது.,, உதாரணத்திற்குகுளம், ஏரி, கால்வாய் போன்ற நீர்நிலைகள், பொது சாலைகள், மயானங்கள், மந்தைவெளி என்று சொல்லக்கூடிய மேய்ச்சல் நிலங்கள், கோவில் நிலங்கள் இவைகள் எல்லாமே ஆட்சேபனையுள்ள நிலங்கள் ஆகும்.
இந்த இடங்களில் நீங்கள் எத்தனை தலைமுறைகளாக வசித்தாலும் சட்டப்படி பட்டா பெற முடியாது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளும் நீர்நிலைகளை எக்காரணம் கொண்டும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதில் மிகத் தீவிரமாக உள்ளன. அதனால் இதுபோன்ற இடங்களில் குடியிருப்பவர்கள் பட்டா கேட்பது கடினமான விஷயம்.
பட்டா பெறுவதற்கான நடைமுறை என்ன?
எப்போதுமே பட்டா கோரி விண்ணப்பிக்கும்போது, வருவாய்த் துறை அதிகாரிகள் அந்த நிலத்தை நேரில் வந்து ஆய்வு செய்வார்கள். அந்த நிலம் உண்மையில் யாருக்காவது இடையூறாக இருக்கிறதா? அது நீர்நிலை புறம்போக்கா? என்பதைத் தெளிவாக சரிபார்ப்பார்கள்.
இதற்கு அந்த நிலத்தில் குடியிருப்பதற்கான சரியான ஆதாரங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில், அரசு அவ்வப்போது கொண்டு வரும் வரன்முறைப்படுத்துதல் திட்டத்தின் கீழ் உங்களுக்குப் பட்டா வழங்க பரிந்துரைக்கப்படும்.
மக்கள் கவனிக்க வேண்டியவை
புறம்போக்கு நிலத்தில் இருப்பவர்கள் முதலில் செய்ய வேண்டியது, அந்த நிலத்தின் சர்வே நம்பரை வைத்து தமிழ்நிலம் என்ற அதிகாரப்பூர்வமாக வெப்சைட் மூலமாகவோ அல்லது கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டோ அந்த நிலம் எந்த வகைப்பாட்டில் உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அரசு வழங்கியுள்ள இலவச பட்டா திட்டங்கள் அல்லது சிறப்பு முகாம்களைப் பயன்படுத்திக் கொள்வது சிறந்தது.
சட்டபூர்வமான ஆதாரங்களை சரியாகச் சமர்ப்பித்து, அரசு விதிகளை பின்பற்றினாலே தகுதியுள்ள நபர்களுக்கு அவர்கள் வசிக்கும் நிலம் சொந்தமாவது நிச்சயம் சாத்தியம்...!!
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications