சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போன்ல பேசியது "அவரா".. சட்டென கூட்டணி மாறும் எடப்பாடி பழனிசாமி? அப்படின்னா பாஜக? சொல்றது யார் பாருங்க

எடப்பாடி பழனிசாமி, காங்கிரசுடன் கூட்டணி வைக்கலாம் என்கிறார் பத்திரிகையாளர் லட்சுமி

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவை உள்ளுக்குள் வைத்து எதிர்ப்பது என்ற ரீதியில்தான் பாஜகவின் அரசியல் உள்ளது.. அதிமுக எதிர்ப்பு என்பது வெளிப்படையாக இல்லாவிட்டாலும், கூடவே வைத்து அக்கட்சியை கரைத்து கொண்டிருக்கிறது என்று பத்திரிகையாளர் லட்சுமி கருத்து தெரிவித்துள்ளார்.

Recommended Video

    OPS விரைவில் பாஜகவிற்கு போவார்- லஷ்மி சுப்ரமணியன், மூத்த பத்திரிகையாளர்

    விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில் தேசிய கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன.. அதேபோல நம் தமிழகத்திலும் தேர்தலுக்கான முனைப்புகள் காட்டப்படுகின்றன. கூட்டணி பேச்சுக்களும் மெல்ல எட்டிப்பார்க்க துவங்கி உள்ளன.

    திமுகவை பொறுத்தவரை, கூட்டணி உடையாது என்கிறார்கள்.. முக்கியமாக 2 இடதுசாரிகளும் திமுகவை விட்டு போக வாய்ப்பில்லை, அதேபோல, விசிக, மதிமுக, வேல்முருகன் மாதிரியான கட்சிகளும் நிச்சயம் போகாது என்று வலுவாக நம்பப்பட்டு வருகிறது.. அந்தவகையில் திமுக வலுவாகவே உள்ளது.

     7 பார்ட்டிகள்

    7 பார்ட்டிகள்

    கடந்த வாரம் நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, மெகா கூட்டணி அதிமுக தலைமையில் தேர்தலை சந்திக்கும் என்றார்.. எந்த கட்சிகளை மனதில் வைத்துக்கொண்டு எடப்பாடி இப்படி பேசினார் என்பதே பலரது ஆர்வமாக எழுந்து வருகிறது.. பாஜக + அதிமுக + பாமக + தேமுதிக + அமமுக + புதிய தமிழகம், ஐஜேகே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய 7 கட்சிகளும் ஒரே அணியில் நின்று திமுகவை எதிர்க்கும், இதைதவிர மேலும் பல அமைப்புகளும் அதிமுக + பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் மனதில் வைத்தே எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி என்ற வியூகத்தை வகுத்துள்ளார் என்கிறார்கள்..

     13 + 26

    13 + 26

    இப்படிப்பட்ட சூழலில் முக்கிய தகவல் ஒன்று கசிந்தது.. பாஜக + அதிமுக தரப்பில் தொகுதி பேரத்தை முடித்து விட்டதாக சொல்கிறார்கள்.. அதாவது, அதிமுக தரப்புக்கு 26 இடங்களும், பாஜக தரப்புக்கு 13 இடங்களும் என முடிவாகிவிட்டதாக ஒரு தகவல் பரபரத்து வருகிறது.. சீட்கள் முடிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில், தொகுதிகள் குறித்து மட்டுமே முடிவு செய்ய வேண்டி உள்ளதாகவும், அநேகமாக அமித்ஷா, மோடி சென்னை வரும்நிலையில், இதற்கான ஆலோசனைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் நம்பப்படுகிறது.. எனினும், பாஜகவுடன் அதிமுகவுக்கான கூட்டணி எப்படி இருக்கும் என்பது குறித்து, மூத்த பத்திரிகையாளர் லட்சுமி கருத்து தெரிவித்துள்ளார்.

     2016, 2019, 2021

    2016, 2019, 2021

    நம் ஒன் இந்தியா தமிழுக்காக சிறப்பு பேட்டி ஒன்றையும் தந்துள்ளார். நாம் முன்வைத்த கேள்விகளுக்கு லட்சுமி தந்த பதில்தான் இது: "2016, 2019, 2021 ம் ஆண்டு தேர்தல்களில் உள்ளதை போன்ற, பாஜக எதிர்ப்பு மனநிலை எந்த அளவுக்கு இப்போது உள்ளது என்பதை பார்க்க வேண்டும்.. அந்த சதவீதத்தின் அளவு என்பது மாறுபட்டிருக்குமே தவிர, பாஜக வெறுப்பு மனோபாவம் மக்களிடம் முழுமையாக குறைந்திருக்க வாய்ப்பில்லை.. அதனால், பாஜகவுடன் அதிமுக கூட்டடணி வைத்தாலோ, அல்லது அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தாலோ, அது சறுக்கலைதான் தரும்..

     மாஸ் கூட்டணி

    மாஸ் கூட்டணி

    மெகா கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி சொல்வது, பாஜக அல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்கும் திட்டத்தைகூட அவர் கையில் வைத்திருக்கலாம்.. காரணம், இன்றைக்கு அதிமுகவுக்குள்ளேயே பெரும்பாலானவவர்கள், பாஜக இல்லாத ஒரு கூட்டணியைத்தான் விரும்புகிறார்கள். வாய்ப்புகளும் அதற்கு நிறையவே உண்டு.. எடப்பாடி பழனிசாமி இதற்கான முன்னெடுப்புகளை தீவிரமாக எடுத்தால், அது சாத்தியமாகலாம்.. தேர்தல் நெருங்க நெருங்கத்தான் அவர் சொன்ன அநத் மெகா கூட்டணி பற்றி நமக்கு தெரியவரும்.. இந்த நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும்..

     செ கு தமிழரசன்

    செ கு தமிழரசன்

    மூத்த தலைவர் செ.கு.தமிழரசன் மற்றும் சிவகாமி ஐஏஎஸ் போன்றோரெல்லாம் ஒரு புது மாதிரியான காரியங்களில் கடந்த சில நாட்களாக இறங்கி உள்ளனர்.. அதாவது, தலித் அமைப்புகளை ஒருங்கிணைக்கிறோம் என்று சொல்லி, ஒவ்வொரு மாவட்ட அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகளுடன் நடத்தி வருகிறார்கள்.. இதை ஒரு சாதாரண நிகழ்வாக எடுத்துகொள்ள முடியாது.. இதை நாம் எங்கே பொருத்தி பார்க்க வேண்டும் என்றால், தலித் ஓட்டுக்களுடன் பொருத்த வேண்டிஉள்ளது.. தற்சமயம், தமிழகத்தில் தலித் ஐகானாக பார்க்கப்படும் தலைவர் திருமாவளவன்தான்..

    திருமாவளவன்

    திருமாவளவன்

    கிட்டத்தட்ட 7-லிருந்து 9சதவீதம் வரை தலித் ஓட்டுக்கள் திருமாவுக்கு கிடைக்ககூடிய சூழல் உள்ளது.. ஆனால், செ.கு. தமிழரசன் போன்றோர் கையில் எடுக்கும் புது யுக்திகளால், அந்த தலித் வாக்குகளை பிரிக்கலாம்... அப்படி பிரிக்கும்போது இது கூட்டணியை பாதிக்கலாம்.. இதுபோன்ற சின்ன சின்ன வேலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்றாலும், இதற்கு பின்னால் எந்த பெரிய சக்தி இயங்குகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.. எனவே, 2024-ம் ஆண்டு தேர்தலையொட்டி, அதிமுக சின்ன சின்ன கட்சிகைளை இணைத்து, வேலைகளை தொடங்கலாம்..

     போன்ல ராகுல்

    போன்ல ராகுல்

    இன்னொன்றையும் இங்கு கவனிக்க வேண்டி உள்ளது.. பொதுக்குழுவை எடப்பாடி பழனிசாமி கூட்டுவதற்கு முன்பு, காங்கிரஸடன் அதாவது ராகுலுடன் போனிலல் பேசியதாகவும், அக்கட்சியுடன் நெருங்கி வருவதாகவும் கூட செய்திகள் வந்தன.. அந்தவகையில், தன்னுடைய கூட்டணியை காங்கிரஸ் பக்கம் திருப்பினால், பாஜக பலமாக அடிவாங்கும்.. அல்லது பாஜகவை உள்ளடக்கிய கூட்டணி என்றால், அது நிச்சயம் அதிமுகவின் வெற்றி வாய்ப்பினை குறைக்கவே செய்யும்..

     சிவகாமி IAS

    சிவகாமி IAS

    கோவை சம்பவத்தைகூட, அதிமுகவில் யாருமே பெரிதாக பேசவில்லை.. கோவை தொகுதியில் அத்தனை அதிமுக இருந்தபோதும்கூட, வானதி சீனிவாசன் மட்டுமே பேசி வருகிறார்.. இதையும் கவனிக்க வேண்டும்.,. எப்படி பார்த்தாலும் பாஜக தமிழகத்தை எப்படி அணுகுகிறது என்றால், திமுகவை நேரடியாக எதிர்ப்பது, அதேசமயம், அதிமுகவை உள்ளுக்குள் வைத்து எதிர்ப்பது என்ற ரீதியில்தான் அதன் அரசியல் உள்ளது.. அதிமுக எதிர்ப்பு என்பது வெளிப்படையாக இல்லாவிட்டாலும், கூடவே வைத்து அக்கட்சியை கரைத்து கொண்டிருக்கிறது" என்றார்.

    English summary
    Great change: Has the seat sharing talks between AIADMK and Congress, says Sr Journalist Lakshmi: Specials Interview
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X