"கோட்டையில் ஓட்டை".. இந்த வேலைக்காரனோடு உறவாடி.. கொடுமை நாட்கள்.. பூங்குன்றன் நினைவுகள்.. தடதட டெல்டா
சென்னை: ஒரத்தநாடு வைத்திலிங்கம் அவர்களும், மாஜி அமைச்சர் காமராஜ் அவர்களும் பிள்ளைகளால் கொடுத்து வைத்தவர்கள் என்று பூங்குன்றன் நெகிழ்ந்து கூறியுள்ளார்.
அதிமுக விவகாரம் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.. அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலமே, மெல்ல மெல்ல திமுக பக்கம் சாய்ந்து கொண்டிருக்கிறது. இடைத்தேர்தலில் மண்ணை கவ்வியது இதற்கு சாட்சியாக விளங்கி கொண்டிருக்கிறது.
எனவே கொங்குவை சரிக்கட்ட எடப்பாடி பழனிசாமி நிறைய வியூகங்களை வகுத்து வருகிறார்.. அதேபோல, முக்குலத்தோர் வாக்குகளையும் பெற வேண்டிய நெருக்கடியும் கட்டாயமும் எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ளது.

வைத்திலிங்கம்
எனவே தென்மண்டலங்களிலும் தன்னுடைய செல்வாக்கை நிலைநிறுத்த முயன்று வருகிறார்.. டெல்டாவை பொறுத்தவரை மூத்த தலைவர் வைத்திலிங்கத்தை தாண்டி, அதிமுகவில் வேறு யாரும் அந்த அளவுக்கு பெரிதாக வளரவில்லை.. வைத்திலிங்கத்தின் கோட்டையாகவே டெல்டா விளங்குவதால்தான், திமுக பலே தந்திரத்தை கையில் எடுத்தது.. டெல்டாவில் உள்ள அச்சமூக வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அள்ள முயன்றது.. இப்போதைக்கு தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் போன்றோர்களுக்கு அமைச்சர் பதவி தந்து முன்னுரிமை தரப்பட்டாலும், டெல்டா புள்ளி வைத்திலிங்கமும் திமுக பக்கம் வந்தால் அதிமுக இன்னும் பலவீனமடையும், தென் மாவட்டங்களில் திமுகவின் வாக்கு வங்கியையும் பலப்படுத்தலாம் என்று திமுக திட்டமிடுவதாக தெரிகிறது.

கோட்டை ஓட்டை
இதனை மோப்பம்பிடித்துவிட்ட, எடப்பாடி பழனிசாமி தரப்பும், இதே டெல்டாவுக்கு குறி வைத்துள்ளது.. வைத்திலிங்கத்தின் செல்வாக்கை வீழ்த்தி, அந்த இடத்துக்கு மாஜி அமைச்சர் காமராஜை கொண்டுவர வேண்டும் என்ற வியூகத்தையும் கையில் எடுத்துள்ளாராம்.. அதனால்தான், வைத்திலிங்கத்தின் கோட்டைக்குள்ளேயே நுழைந்து, காமராஜ் மகன் திருமண விழாவில் கலந்து கொண்டு, எவனாலும் தொட முடியாது என்று பேசியிருக்கிறார்.. ஆனால், ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என்பதே பெரும்பாலான அதிமுகவின் உண்மைத்தொண்டர்களின் மனநிலைமையாக இருந்து வருகிறது.

காமராஜ் மகன்
அதிமுக தலைவர்கள் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற விருப்பத்தையும் பல புள்ளிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனும் அதில் ஒருவர் ஆவார்.. பகைமையை மறந்து அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தியவாறே உள்ளார்.. அந்தவகையில், காமராஜ் மகன் திருமணத்தில் பூங்குன்றன் கலந்து கொண்டுள்ளார்.. இதுகுறித்து மணமக்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. அதேசமயம், ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கத்தின் பெயரையும் சுட்டிக்காட்டி உள்ளார்.. முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மகன்கள் குறித்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் குறிப்பிட்டுள்ளதாவது:

கெட்ட பெயர்
திருவாரூர் மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் உணவுத்துறை அமைச்சருமான அன்பிற்குரிய இரா. காமராஜ் மகன் இன்பன் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன். காமராஜ் அவர்களுக்கு இறைவன் கொடுத்த இரண்டு பிள்ளைகளும் முத்துக்கள். தந்தைக்கு அரசியலில் எந்தவித கெட்ட பெயரும் ஏற்படுத்தாமல், தந்தை சொல்வதைக் கேட்டு அதன்படி நடக்கும் நல்ல பிள்ளைகள். மூத்தவர் இனியன் அற்புதமான பிள்ளை. புரட்சித்தலைவி அம்மா பெங்களூர் சிறையில் தவித்த போது வெளியில் தவித்துக் கொண்டிருந்த எங்களுக்கு கடைசிவரை துணையாக இருந்தவர். சிறைச்சாலை வாசலில் நான் தங்கிய போது என்னோடு தங்கியவர்.

வேலைக்காரன்
அமைச்சர் மகன் என்று பார்க்காமல் இந்த வேலைக்காரனோடு உறவாடி எங்களோடு அந்தக் கொடுமையான நாட்களில் கொடுமையை அனுபவித்தவர். ஒரத்தநாடு வைத்திலிங்கம் அவர்களும், காமராஜ் அவர்களும் பிள்ளைகளால் கொடுத்து வைத்தவர்கள். பல தலைவர்களுடைய பிள்ளைகளால் தந்தைக்கு கெட்ட பெயர் வருவது உண்டு. ஆனால், இவர்கள் அதற்கு விதிவிலக்காக இப்படி ஒரு பிள்ளைகளை பெற்றெடுத்ததற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று எல்லோரிடமும் நான் எப்போதும் பாராட்டுவதுண்டு.

இனிப்பானவர்கள்
இனியனும், இன்பனும் பெற்றோர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் எப்போதும் இனிப்பானவர்கள். இந்த பிள்ளைகளை நெறியோடு வளர்த்த தாயை வணங்குகிறேன். இரு பிள்ளைகளும் மருத்துவர்கள். இவர்களுக்கு மனைவியாக வந்தவர்களும் மருத்துவர்கள். நால்வரும் இணைந்து மகத்தான சேவையான மருத்துவ சேவையை ஒன்றுபட்ட தஞ்சை மக்களுக்கு உணர்வோடு வழங்க வேண்டும். அதற்கு இறைவன் துணை நிற்க வேண்டுகிறேன்.

மண்ணின் நிறம்
அன்பு தம்பி மணமகன் இன்பன் - மணமகள் ரத்னா தம்பதியினர் பதினாறு பேறுகளையும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும். "செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே' என்ற பாடலில் வருவது போல மண்ணில் பெய்த மழை நீர் மண்ணின் நிறத்தோடு கலந்து நீரின் தன்மையையும், மண்ணின் நிறத்தையும் பிரிக்க முடியாதபடி ஓடுவதைப் போல, உங்கள் உள்ளம் ஒன்றுபட்டு மகிழ்வோடு வாழ்க்கை பாதையில் நீங்கள் ஓட வேண்டும். இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இல்லறத்தை நல்லறமாக நடத்த வேண்டும். அதற்கு இறை அருளும், அம்மாவினுடைய ஆசியும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க மனமார பிரார்த்திக்கிறேன்" என்று நெகிழ்ந்து சொல்லி உள்ளார்.
-
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்?












Click it and Unblock the Notifications