சசிகலாவிற்கு கிடைத்த கிரீன் சிக்னல்..அதிரடி சந்தோஷத்திற்கும் காரணம் இதுதானாமே?
சசிகலா சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறார். அதன் காரணமாகவே அதிரடியாக அரசியல் பேச ஆரம்பித்து விட்டார்.
சென்னை: அ.தி.மு.க எனது தலைமையில் இயங்கும் என்பதில் உங்களுக்கு சந்தேகமே வேண்டாம் என்று சசிகலா கூறுவதற்கு காரணமே அவருக்கு கிடைத்த கிரீன் சிக்னல்தான் என்று சொல்லப்படுகிறது. அந்த அளவிற்கு மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்.
அரசியலுக்கு வருவேன் என்று சொன்ன சசிகலா பின்னர் வரமாட்டேன் என்று சொல்லி பின் வாங்கினார். ஆன்மீக பயணத்தை ஆரம்பித்து அரசியல் செய்து வருகிறார். கடந்த மாதங்களில் அமைதியாக இருந்த சசிகலா இப்போதய பயணத்தில் அதிரடியாக அரசியல் பேச ஆரம்பித்து விட்டார். அதற்கான காரணமே அவர் இப்போது மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பதுதானாம்.
சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் இளவரசி தம்பதியினருக்கு, கிருஷ்ணப்பிரியா மற்றும் ஷகிலா என இரு மகள்கள், மகன் விவேக் என்று மூன்று பிள்ளைகள். இவர்கள் மீது சசிகலாவிற்கு தனி பிரியம் உள்ளது.

போயஸ் தோட்டத்தில் இளவரசி
ஹைதராபாத்தில் உள்ள ஜெயலலிதாவின் திராட்சை தோட்டத்தில் கட்டிட வேலை நடந்தபோது அதை சூப்பர்வைஸ் செய்து கொண்டிருந்த ஜெயராமன் ஷாக்கடித்து இறந்துவிட்டார். சசி, இளவரசியை விட இந்த விஷயத்தில் அதிகம் துக்கப்பட்டது ஜெயலலிதாதான். அதன் பிறகு இளவரசியை போயஸ் கார்டனுக்கே வரவழைத்து தங்க வைத்தார் சசிகலா.

ஜெயலலிதா மீது தனி பாசம்
விவேக்கை ஜெயலலிதா 'பாய்' என்றுதான் அழைப்பார். ஜெயலலிதாவை விவேக் 'பெரியத்தை' என்று சொல்லித்தான் அழைப்பார். சசியை அத்தை அல்லது சின்னத்தை என்றுதான் அழைப்பாராம். விவேக் வளரவளர ஜெயலலிதாவின் நேரடி கவனத்தில் இருந்து நகர்ந்தார்.

ஜெயாடிவி குழும சிஇஒ
ஹாஸ்டலில் தங்கியிருந்தாலும் கூட விவேக்கின் மீது ஜெ.,வுக்கு ஒரு கண் எப்போதும் உண்டு. எம்.பி.ஏ. முடித்துவிட்டு வந்த விவேக்கிற்கு ஜாஸ் சினிமாஸ், ஜெயா டி.வி. குழுமம் ஆகியவற்றின் நிர்வாகத்தை ஜெயும், சசியும் கொடுத்து தைரியமாக களமிறக்கினர்.

விவேக் திருமணம்
விவேக்கின் திருமணத்துக்கு ஜெயலலிதா செல்வார் என்று அரசியல் அரங்கமே எதிர்பார்த்தது. ஆனால் சுதாகரன் திருமண விவகாரத்தில் பட்ட கஷ்டத்தால் முதல்வர் ஜெயலலிதா அங்கே செல்லவில்லை. ஆனால் தாலி கட்டிய கையோடு மனைவியை அழைத்துக் கொண்டு நேரடியாக கார்டன் வீடு வந்து ஆசீர்வாதம் வாங்கினார் விவேக்.
ஜெயலலிதாவின் இறப்பும், சசிகலாவின் சிறை வாழ்க்கையும் விவேக்கை பெரிய அளவில் பாதித்தன.

பெண் குழந்தை பிறந்தது
கடந்த 2019ஆம் ஆண்டு விவேக்கிற்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போது சசிகலா சிறையில் இருந்தார். சமீபத்தில் விவேக்கின் மனைவிக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. நேரடியாகவே போய் வாழ்த்திய சசிகலா முகம் முழுக்க பூரிப்பில் உற்சாகமாக இருக்கிறாராம்.

அதிர்ஷ்ட குழந்தை
விவேக்கின் மனைவி கர்ப்பமாக இருந்த போதே இரண்டாவது பெண் குழந்தைதான் பிறக்கும் என்று கூறினாராம் சசிகலா. அவர் சொன்னது போல நடந்து விட்டது என்று சசிகலா உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளார்களாம். அட்சய திருதியை நாளில் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமையில் பெண் குழந்தை பிறந்தது அதிர்ஷ்டம் என்றும் அதுவே தனது அரசியல் பயணத்திற்கு கிடைத்திற்கும் கிரீன் சிக்னல் என்றும் கூறி வருகிறாராம் சசிகலா.

அரசியல் பேச்சு
அதே வேகத்தோடு அடுத்த ஆன்மீக பயணத்தை ஆரம்பித்த சசிகலா இப்போது அதிரடியாக அரசியல் பேசி வருகிறார். ஜெயலலிதா ஆட்சி போல நல்லாட்சி தருவேன் என்றும் அ.தி.மு.கவின் எதிர்காலம் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும் எனவும் கூறி வருகிறார். அதிமுகவிற்கு தலைமை ஏற்பேன் என்றும் தொண்டர்கள் முடிவுதான் அ.தி.மு.கவில் எனவும் அடுத்த ஆட்சி ஜெயலலிதாவின் ஆட்சி என்றும் கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications