குரூப் 2, 2ஏ தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்... ஆண்களை விட பெண்களே அதிகம் - டிஎன்பிஎஸ்சி தலைவர்
குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு திட்டமிட்டபடி மே 21ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.
சென்னை: குரூப்-2 தேர்வு திட்டமிட்டபடி மே 21-ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்தார். மாநிலம் முழுவதும் மொத்தம் 11.78 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2022ம் ஆண்டு நடைபெற உள்ள குரூப் 2, 2ஏ தேர்வு, மே 21-ம் தேதி காலை 9.30 மணிக்குத் தொடங்கி நடைபெறும். மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற உள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஹால் டிக்கெட்டுகள் இணைய தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன. முதன்மைத் தேர்வுகள் தமிழ்நாட்டில் 32 மையங்களில், காலை 9 மணி முதல் 12:30 மணி வரை நடைபெற உள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன், மாநிலம் முழுவதும் 32 நகரங்களில் 117 மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறும். மாலையில் நடைபெறும் தேர்வில் எந்த நேர மாற்றமும் இல்லை என்றார். தேர்வில் ஜெல் பேனா, பால் பாயிண்ட் பேனாக்களைப் பயன்படுத்தலாம்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு முகக்கவசம் கட்டாயம்... என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா?
குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு திட்டமிட்டபடி மே 21ஆம் தேதி நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது என்றார்.
இதற்காகத் தேர்வர்கள் 8.30 மணிக்கு வர வேண்டும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 8.59 மணி வரை மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்வர்கள் 12.45 மணி வரை தேர்வறைக்குள் இருக்க வேண்டும். தேர்வுக்காக 333 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கு மொத்தம் 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆண் தேர்வர்கள் 4,96,247 பேரும், பெண் தேர்வர்கள் 6,81,089 பேரும் விண்ணப்பித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 48 பேர் விண்ணப்பித்துள்ளனர். 14,531 மாற்றுத் திறனாளிகளும் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ் வழியில் பயின்றதாக 79 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக 1, 15,843 பேர் தேர்வுஎழுத உள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன்தெரிவித்தார்.
இந்தத் தேர்வுகளுக்கான முடிவுகள், ஜூன் 5ஆம் தேதி வெளியாக உள்ளன. அதற்குப் பிறகு முதன்மைத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும். துறை ரீதியான பணி நியமனம் குறித்து மார்ச் 3ஆம் தேதி விரிவான அறிவிப்பு வெளியிடப்படும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications