ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி.. படேல் பிறந்த நாளில்.. தமிழிலிருந்து பிறந்த புதிய மொழி.. வாவ்!!!!
Recommended Video

சென்னை: உலகிலேயே சிறந்த மொழி தமிழ் என்று சொல்வார்கள். அது உண்மைதான்.. இல்லாவிட்டால் புதிது புதிதாக அதை வைத்து பல மொழிகளை உருவாக்குவோமோ.. இதோ இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளிலும் கூட தமிழிலிருந்து புதிதாக ஒரு மொழி பிறந்துள்ளது!!!!!!.
இந்த பாஷைக்கு என்ன பெயர் என்று தெரியவில்லை. ஆனால் படு ஜாலியாக இருக்கிறது இதன் உச்சரிப்பு. இப்படித்தான் சோஷியல் மீடியாவில் வளைத்து வளைத்து விமர்சித்து வருகின்றனர்.
ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி.. தலைகீழாக படித்துப் பார்த்தாலும் இதன் அர்த்தம் தெரியாது, புரியாது. கொஞ்சம் வேகமாக படித்துப் பார்த்தால் கெட்ட வார்த்தை போலவும் வருகிறது. அந்த லட்சணத்தில் இருக்கிறது நமது சொந்த நாட்டினரின் மொழிபெயர்ப்பு அறிவு. சொந்த நாட்டு மொழியையே ஒழுங்காக எழுத முடியவில்லையே என்று அனைவரும் பகடி செய்யும் நிலைக்குப் போய் விட்டார்கள் குஜராத் சுற்றுலாத்துறையினர்.
[படேல் சிலை: குஜராத்தில் ஒரு தமிழ்க் கொலை.. நீட் டிரான்ஸ்லேஷனை மிஞ்சிய கேவலமான மொழிபெயர்ப்பு!]
|
உலகின் முதுபெரும் மொழி
உலகின் முதுபெரும் மொழி. மொழிகளின் மூலம் என எத்தனை பெருமைகள் இருந்தாலும், குஜராத்தில் தமிழ் சந்தித்துள்ள அவமரியாதை வரலாறு காணாதது, வரலாற்றில் மன்னிக்க முடியாதது.
|
இது தேவையா
உலகிலேயே மிகப் பெரிய சிலை என்ற பெருமையுடன் கூடிய சர்தார் வல்லபாய் படேல் சிலையின் பெயர்ப் பலகையில்தான் இப்படி ஒரு அசிங்கத்தை செய்து வைத்துள்ளனர். கொஞ்சம் கூட ஞானமோ, வெட்கமோ இல்லாமல் இதை டிஸ்பிளேவுக்கு வைத்திருப்பது அதிர வைப்பதாக உள்ளது. மற்ற மொழியையெல்லாம் சரியாக போட்டு விட்ட இவர்களால் சொந்த நாட்டு மொழி, தமிழை சரியாக போட முடியாமல் போயிருப்பது அவர்களது அலட்சியத்தின் உச்சத்தைத்தான் காட்டுகிறது.

ஒரு தமிழர் கூடவா இல்லை
பெயர்களை சரி பார்க்க ஒரு தமிழர் கூடவா இவர்களுக்குக் கிடைக்காமல் போய் விட்டார் என்று வசை பாடுகிறார்கள். இதற்கு வக்காலத்து வாங்க மட்டும் சிலர் ஓடி வந்து விடுகிறார்கள். தெரியாமல் செய்த பிழை.. இதை பெரிதாக்கலாமா என்று கேட்டு. இதுவா பிழை.. இது தெரிந்தே செய்த தவறு போலத்தான் தெரிகிறது. அத்தனை அலட்சியம் ஏன் என்பதுதான் கேள்வி.
|
தமிழ் நல்லாவே இருக்கும்
இவர்கள் என்னதான் கோமாளித்தனம் செய்தாலும் தமிழும் சாகாது, தமிழர்களும் அழிய மாட்டார்கள் என்று சோசியல் மீடியாவில் இந்த மொழிக் குழப்பத்திற்குக் காரணமானவர்களை போட்டு தாக்கி வருகிறார்கள் மக்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications