"பிறந்த நாள் வாழ்த்துக்கள் மை அண்ணாமலை.."குஷ்புவின் அசத்தல் வாழ்த்து.. ரஜினிக்கு!
சென்னை: வீரத்தின் உண்மையான அர்த்தத்தை வரையறுத்த ஹீரோ, ஒரு டிரெண்ட் செட்டர், எல்லாவற்றிற்கும் மேலாக கொள்கை மற்றும் கண்ணியம் கொண்ட மனிதருக்கு வாழ்த்துக்கள் என்று நடிகர் ரஜினிகாந்துக்கு நடிகை குஷ்பு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். பிறந்தநாள் வாழ்த்துக்கள் மை அண்ணாமலை என்றும் குஷ்பு வாழ்த்தியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் 73 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ரஜினிகாந்தின் பிறந்தநாளை ஒட்டி அவர் வசிக்கும் இல்லத்தின் முன்பு நள்ளிரவு 12 மணிக்கு கூடிய அவரது ரசிகர்கள் கேக் வெட்டி உற்சாகமாக அவரது பிறந்தநாளை கொண்டாடினர்.
அத்துடன் ஆங்காங்கே ரத்ததான முகாம், மருத்துவ முகாம் , அன்னதானம் என நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை அவர் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

ரஜினி பிறந்தநாள்
ரஜினிகாந்தின் பிறந்த நாளை ஒட்டி திரை பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளத்தின் மூலம் அவருக்கு தெரிவித்து வருகின்றனர். நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார், அன்பு நண்பர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இறைவன் பூரண ஆரோக்கியமும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையச் செய்ய என் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

கமல், தனுஷ் வாழ்த்து
மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் வெற்றிப் பயணம் தொடர இச்சிறந்த நாளில் வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் நடிகர் தனுஷ் ஹேப்பி பர்த் டே தலைவா என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது மனமார்ந்த வாழ்த்தினை தெரிவித்து கொண்டுள்ளார்.

குஷ்பு வாழ்த்து
ரஜினி உடன் குஷ்பு தர்மத்தின் தலைவன், மன்னன், அண்ணாமலை, பாண்டியன், உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அவர் தனது பதிவில், இந்திய சினிமாவின் தலை சிறந்த சூப்பர் ஸ்டாருக்கு, வார்த்தைகளை விட செயலே அதிகமாய் பேசும் நாயகன், வீரத்தின் உண்மையான அர்த்தத்தை வரையறுத்த ஹீரோ, ஒரு டிரெண்ட் செட்டர், எல்லாவற்றிற்கும் மேலாக கொள்கை மற்றும் கண்ணியம் கொண்ட மனிதருக்கு வாழ்த்துக்கள். ரஜினி சார் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அண்ணாமலைக்கு வாழ்த்து
பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் அண்ணாமலை என்று தனியாக தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளனர். ரஜினியும் குஷ்புவும் ஜோடியாக நடித்த அண்ணாமலை திரைப்படம் பல கோடி ரசிகர்களை கவர்ந்தது. அந்த கடவுளே.. கடவுளே..வசனம் இன்றைக்கும் பலரால் நினைவூட்டப்படுகிறது. சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த அண்ணாமலை படத்திற்குப் பிறகு குஷ்புவின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்டது. கோவில் கட்டி கும்பிட்டனர். எனவேதான் அண்ணாமலையை நினைவுபடுத்தி ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் குஷ்பு.












Click it and Unblock the Notifications