அசைந்தது கோட்டை.. "தூக்கியடிச்சிருவோம்".. திடீரென உளவுத்துறைக்கு பறந்த உத்தரவு.. தமிழக அரசின் அதிரடி
சென்னை: அரசு அதிகாரிகளில் எத்தனையோ நேர்மையானவர்கள் இருந்தாலும், சில இடங்களில் ஊழலும், லஞ்சமும் தலைவிரித்தாடி கொண்டேயிருக்கிறது. இதற்குதான் தமிழக அரசு சாட்டையை சுழற்றியிருக்கிறது.
அரசு துறையில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்தபடியே வருகிறது. ,இதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் ஊழல் வழக்கு தொடர்பாக சென்னை ஹைகோர்ட், கடுமையான கண்டனம் தெரிவித்து காட்டமும் வெளிப்படுத்தியிருந்தது..

அரசு அதிகாரிகள்: "அரசுத் துறைகளில் லஞ்ச, லாவண்யம் மலிந்துவிட்டது. அரசுத் துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள், அலுவலர்களுக்கு எதிராக அதிக அளவில் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளபோதும், போதிய நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அரசுத் துறைகளில் பணிபுரிவோருக்கு சட்டத்தின் பயத்தை காட்டினால் மட்டுமே ஊழலை கட்டுப்படுத்த முடியும். ஊழல் புரியும் அரசு அதிகாரிகளின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகளை வகுக்க வேண்டும். இதற்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ வழக்கறிஞர் ஆர்.சிங்காரவேலனை நியமிப்பதாகவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இதனிடையே, தமிழக அரசும் அடுத்தடுத்த அதிரடிகளை கையில் எடுத்துள்ளது.. அந்தவகையில், அரசு அலுவலகங்களில் அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என்று உளவுத்துறை போலீசாருக்கு அறிவுறுத்தியிருக்கிறதாம்..
முற்றுப்புள்ளி: காரணம், அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவது குறிப்பாக விஏஓ, ஆர்ஐ, தாசில்தார், யூனியன் நகராட்சி அலுவலகங்களில் இப்படியான லஞ்சம் லாவண்யங்கள் மலிந்து வருகிறது.. கவனிப்புகள் இல்லாமல் காரியங்கள் பெரும்பாலும் நடப்பதில்லை என்ற நடைமுறை சிக்கலும் உள்ளது.. அதனால்தான், தமிழக அரசு இதையெல்லாம் களைவதற்காகவும், லஞ்ச லாவண்யத்துக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைப்பதற்காகவும், சாட்டையை கையில் எடுத்துள்ளது.
அதன்படி, அரசு அலுவலகங்களில் அதிகாரிகளின் செயல்பாட்டை கண்காணித்து, பிரத்யேக அறிக்கை அனுப்புமாறு உளவுத்துறை போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம்..
முக்கிய அறிவிப்பு: தமிழக சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி, இதற்காகவே அறிவிப்பு ஒன்றையும் விடுத்துள்ளார்.. அனைத்து சிறைத்துறை சிறைத்துறை அதிகாரிகளுக்கும் அவர் அனுப்பியுள்ள அறிக்கையில் சொல்லி உள்ளதாவது:
"சிறைத்துறையில் தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டு, தங்களை திருத்திக் கொள்ள மறுக்கும் சிறைத்துறை பணியாளர்களை பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்... இதை அனைத்து அதிகாரிகளும், தங்களுக்கு கீழ் பணியாற்றும் அனைத்து சிறைத்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும்" என்று அந்த அறிக்கையில் சிறைத்துறை டிஜிபி கேட்டுக் கொண்டுள்ளார். தமிழக அரசின் இந்த அதிரடியால், ஊழல் புழக்கங்கள், கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றும் உறுதியாக நம்பப்படுகிறது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications