சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புள்ளி வெச்ச எடப்பாடி.. கோலத்தை "அவர்" போடறாரே.. அமித்ஷா டேபிளில் "ஃபைல்".. ஸ்டாலின் மாஸ் ஸ்ட்டேடர்ஜி

அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி பற்றின புகார்கள் அனுப்பப்பட்டுள்ளதாம்

Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக கூட்டணி குறித்த 2 முக்கிய செய்திகள் தமிழக அரசியல் களத்தில் சுற்றிக் கொண்டிருக்கின்றன.. என்ன நடக்கிறது?

பாஜக எதிர்ப்பு என்ற விஷயத்தை எடப்பாடி பழனிசாமி எந்த அளவுக்கு மேலிடத்தை சமாளிப்பார் என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது. காரணம், எடப்பாடி குறித்து நெகட்டிவ் ரிப்போர்ட்கள் மேலிடத்துக்கு பறந்து கொண்டே இருக்கிறதாம்.

ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு எடப்பாடி ஒத்துழைக்காத பட்சத்தில், அவரை கழட்டிவிட்டு, 3வது அணி அமைக்கவும் பாஜக, தயாராகிவிடும் என்ற பேச்சு உள்ள நிலையில், அவரை பற்றி டெல்லிக்கு சென்று கொண்டிருக்கும் தகவல்களால், அதிருப்திகள் மேலும் கூடபோகிறது என்கிறார்கள்.

 கேம் சேலஞ்ச்

கேம் சேலஞ்ச்

எடப்பாடி பழனிசாமி நாமக்கல் கூட்டத்தில் மெகா கூட்டணி பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.. ஆனால், அதில் பாஜக இடம்பெறாது என்று எடப்பாடி சொல்லவேயில்லை.. அந்தவகையில், பாஜகவும் அவர் தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் என்பதாகவே பொருள்பட பேசினார் என்கிறது ஒரு தரப்பு.. வழக்கமாக எந்த தேர்தல் என்றாலும், பாஜக தலைமையில்தான் கூட்டணி முடிவாகும் என்ற எழுதப்படாத நியதி நடைமுறையில் உள்ள நிலையில், தங்களை கேட்காமல், மெகா கூட்டணியை எடப்பாடி அறிவித்துவிட்டாரே, அப்படியானால் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடப்பாடி எடுக்கிறாரா? என்று கேள்வி எழுப்புகிறது இன்னொரு தரப்பு.

 பாரிவேந்தர்

பாரிவேந்தர்

எடப்பாடி சொன்ன மெகா கூட்டணி என்றால், பாஜக + அதிமுக + பாமக + தேமுதிக + அமமுக + புதிய தமிழகம், ஐஜேகே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய 7 கட்சிகளும் ஒரே அணியில் நின்று திமுகவை எதிர்க்கக்கூடும், இதைதவிர மேலும் பல அமைப்புகளும் அதிமுக + பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க தயாராக இருக்கின்றன.. இதையெல்லாம் மனதில் வைத்தே எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி என்ற வியூகத்தை வகுத்துள்ளார் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.. ஆனால், திமுக கூட்டணியில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் சலசலப்புடன் உள்ளதால், அவர்களும் அதிமுக பக்கம் வரக்கூடும் என்ற தகவலும் கசியவிடப்பட்டது.

 திருமாவளவன்

திருமாவளவன்

இப்படி தகவலை பரப்பியது எடப்பாடி பழனிசாமியின் ஐடி விங் தரப்பு என்றே இன்னொரு தகவலும் கிளம்பியது.. ஆனால், சரியான நேரத்தில் திருமாவளவன் என்ட்ரி தந்தார்.. இப்படி ஒரு யூகம் கிளம்பி வரும்நிலையில், "அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு இல்லை.. செல்வாக்கும் இல்லை, அதிமுக கரைந்து போய்விட்டது.. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி பலவீனப்பட்டு போய்விட்டார்" என்று திருமாவளவனே ஓபனாக சொல்லிவிட்டார்.. அதேசமயம், திமுகவுடன்தான் நாங்கள் இருக்கிறோம் என்பதையும் அந்த பேச்சில் அழுத்தமாக வலியுறுத்திவிட்டார். இதே கருத்தை காங்கிரஸ் அழகிரியும் தெளிவுபடுத்தியிருந்தார்.

 லட்டு சீட்டுகள்

லட்டு சீட்டுகள்

இருந்தபோதிலும், எடப்பாடி தரப்பு இதற்கு எந்தவிதமான ரியாக்‌ஷனையும் காட்டவில்லை.. எந்தவிதமான பதிலடியையும் அதற்கு தரவில்லை.. இத்தனைக்கும் சிவி சண்முகம் போன்றோர் பாஜகவை மறைமுகமாக விமர்சிப்பதில் காட்டும் ஆர்வம், விசிக, காங்கிரஸை விமர்சிப்பதில் காட்டுவதில்லை.. அந்த 2 கட்சிகளையும் காட்டமாக பேசுவதுமில்லை.. திருமாவளவன் நேரடியாக எடப்பாடியை பகிரங்கமாக விமர்சித்தும்கூட, இதுவரை யாரும் வாய் திறக்கவில்லை.. இந்த விஷயங்கள் எல்லாமே, டெல்லிக்கு ரிப்போர்ட்டாக போய் உள்ளதாம்..

 சுனில்

சுனில்

அதுமட்டுமல்ல, கடந்த முறை தேர்தல் ஆலோசகராக இருந்த சுனிலை வைத்துக்கொண்டு, காங்கிரசுடன் எடப்பாடி பழனிசாமி தரப்பு பேரம் பேசுகிறது என்ற கூடுதல் தகவலும் பறந்துள்ளது. இந்த சமயத்தில் இன்னொரு நிகழ்வும் நடந்துள்ளது.. நேற்று முன்தினம் கேஎஸ் அழகிரி பேசும்போது, "திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தால்தான் வெற்றி பெற முடியும்" என்று ஒரு பஞ்ச் வைத்துவிட்டு, தங்கள் கட்சியின் பேரத்தையும் கூட்ட ஆரம்பித்துவிட்டார்.. அழகிரி இப்படி பேசுவதற்கான காரணம் எடப்பாடி தரும் தைரியம்தான் என்ற முணுமுணுப்பும் டெல்லிக்கு போயுள்ளதாம்..

 காரணம் A

காரணம் A

இதெல்லாம் சேர்ந்து, எடப்பாடி மீதான உக்கிரம் பாஜக தலைவர்களுக்கு அதிகமாகி உள்ளதாக சொல்கிறார்கள்.. எனவேதான், தன்மீதான கோபத்தை தணிப்பற்காகவே, ஆளுநரை சென்று சந்தித்து, "சூப்பர் ஆளுநர்" என்று செய்தியாளர்களிடம் பாராட்டவும் செய்து, மறக்காமல் திமுகவையும் திட்டி பதிவுசெய்துவிட்டு போனார் எடப்பாடி என்கிறார்கள்.. இதற்கு நடுவில், திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, "வரும் தேர்தலில் திமுக, வலிமையான கூட்டணியை அமைக்கும் என்று கூறியிருந்தார்..

 காரணம் B

காரணம் B

அதாவது தற்போதுள்ள கூட்டணியே தொடரும் என்று சொல்லாமல், வலிமையான கூட்டணியை அமைக்கும் என்றால், மேலும் சில கட்சிகள்புதிதாக கூட்டணியில் இணைய போவதையே அவர் சுட்டிக் காட்டுவதாக தெரிகிறது.. கூட்டணிக்குள் கட்சிகள் அதிகமாகும்பட்சத்தில், காங்கிரசுக்கான சீட் எண்ணிக்கையும் குறையவே வாய்ப்புள்ளது.. இந்த முறை அதிக சீட்களை பெறுவோம் என்று அழகிரி, ஒரு மாதத்துக்கு முன்பேயே பீடிகையை போட ஆரம்பித்துவிட்ட நிலையில், ஸ்டாலின் பேசியது காங்கிரசுக்கு ஒரு ஜெர்க்கை நிச்சயம் தந்துள்ளதாம்.. அதனாலேயே காங்கிரஸ் இல்லாமல் திமுக ஜெயிக்காது என்ற பஞ்ச்சை அழகிரி உதிர்த்திருக்கலாம் என்கிறார்கள்..

 கேம் சேலஞ்ச்

கேம் சேலஞ்ச்

ஒருபக்கம் அதிமுக, இன்னொரு பக்கம் திமுக என 2 பக்கமும் அடித்து விளையாட அழகிரி துவங்கி உள்ள நிலையில், தமிழக அரசியல் சூடுபிடித்துள்ளது.. எடப்பாடி பழனிசாமி மீது அனுப்பப்பட்டு வரும் ரிப்போர்ட்களும், அதையொட்டி, மேலிடத்தை கூல் செய்ய எடப்பாடி பழனிசாமி கையிலெடுக்கும் "கூல்" நடவடிக்கைகளும் ஒர்க் அவுட் ஆகி உள்ளதா? எடப்பாடி மீதான கோபம், டெல்லிக்கு தணிந்தா? இல்லையா? என்பதெல்லாம் இனி அடுத்தடுத்த நடக்கப்போகும் பாஜக மூவ்களிலேயே தெரிய வாய்ப்புள்ளதாம்.. பார்ப்போம்..!!!

English summary
Have complaints about Edappadi palanisamy been forwarded to Amit Shah and What is the DMK alliance going to do
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X