சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊட்டி, கொடைக்கானல் போன்ற "வெப்ப பிரதேசங்களில்" வசிப்போர் சென்னைக்கு ஓடியாங்க.. ஆத்தீ என்னா குளிரு!

Google Oneindia Tamil News

சென்னை: ஊட்டி, கொடைக்கானல், பெங்களூர் உள்ளிட்ட குளிர் பிரதேசங்களை வெப்ப பிரதேசம் என சொல்லும் அளவுக்கு சென்னையில் குளிர் வாட்டி வதைக்கிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. ஆனால் எதிர்பார்த்தபடி மழையில்லை என்றும் சொல்ல முடியாது, மழை பெய்தது என்றும் சொல்ல முடியாது. சில சமயங்களில் குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்தது.

இதனால் குளிரும் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் வடதமிழகத்திற்கு அந்த அளவுக்கு மழையில்லாமல் இருந்தது. ஆனால் தென் தமிழகத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. தற்போது தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழையும் உள்மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

2 நாட்களுக்கு

2 நாட்களுக்கு

இதையடுத்து நாகை, தஞ்சை, திருவாரூர், புதுகை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு தென்தமிழகம், புதுவையில் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

லேசான மழை

லேசான மழை

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இன்று சென்னையில் லேசான மழை பெய்தது.

வெப்பநிலை

வெப்பநிலை

முகப்பேர், வளசரவாக்கம், போரூர், குரோம்பேட்டை, கோயம்பேடு, அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனால் காலை முதல் ஜில்லென்ற சூழல் நிலவி வருகிறது. சென்னையில் வெப்பநிலையும் 25 டிகிரி உள்ளது.

மார்கழி குளிர்

மார்கழி குளிர்

பொதுவாக சென்னையில் வெயில் இருந்தால் அதை தணித்து கொள்ள ஊட்டி, கொடைக்கானல், பெங்களூர் உள்ளிட்ட குளிர்ச்சியான பிரதேசங்களுக்கு மக்கள் செல்வது வழக்கம். ஆனால் சென்னையில் குளிர்ச்சியான சூழல் உருவாகி பேன், ஏசி எல்லாம் ஆஃப் மோடில் இருப்பதால் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்டவற்றை விட சென்னையில் குளிர் அதிகமாக இருப்பதால் அந்த ஊர்களை வெப்ப பிரதேசம் என சொல்லும் அளவுக்கு மார்கழி மாதத்தினாலும், மழையாலும் குளிர் நிலவுகிறது.

English summary
Heavy chill climate in Chennai as light rain hits. Fans and ACs are in off mode.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X