சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை...கேரளாவில் மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்

கடலோர மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உள் மாவட்டங்களில் 29 முதல் 31ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: கடலோர மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உள் மாவட்டங்களில் 29 முதல் 31ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் 31ஆம்தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெற்கு வங்கக்கடல் மத்தியில் இருந்து வந்த இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 2 நாட்களில் மேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 Heavy rain in coastal districts Orange Alert says Met office

இதனால் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடலோர மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உள் மாவட்டங்களில் 29 முதல் 31ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் இருந்து தமிழகத்தை நோக்கி நகர்வதால் சென்னையில் அதிக மழையை எதிர்பார்க்கலாம் என்று தனியார் வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னையில் கனமழையை எதிர்பார்க்கலாம். 30ஆம் தேதி தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

கேரளாவில் கனமழை

கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் 31ஆம்தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர் மழையால் மாநிலத்தில் முக்கியமான அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மழை பாதிப்பு மற்றும் நிலச்சரிவு காரணமாக இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகியுள்ளது.

இந்த புயல் சின்னம் மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. இது மேலும் தீவிரமடைந்து வருவதால் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் 31ஆம்தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், வருகிற 31ஆம் தேதி வரை திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம், திருச்சூர், எர்ணாகுளம் உள்பட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் இங்கு மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் கொடூரமாக கொல்லப்பட்ட விசிக பிரமுகர்.. வெளியான சிசிடிவி காட்சி.. 7 பேர் சிக்கினர்! சென்னையில் கொடூரமாக கொல்லப்பட்ட விசிக பிரமுகர்.. வெளியான சிசிடிவி காட்சி.. 7 பேர் சிக்கினர்!

இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

English summary
The orange alert warning has been issued as there is a possibility of heavy rain in the coastal districts. Heavy rains are expected in the inner districts from May 29 to 31. The Met Office has warned of heavy rains in various districts of Kerala till May 31.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X