சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

14 மாவட்டங்களில்.. திடீர்ன்னு மழை பெய்யும்.. வேகமாக காற்று வீசும்.. வானிலை மையம் கணிப்பு.. எங்கு?

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    16 மணிநேரம் வெள்ளத்தில் சிக்கியிருந்தவரை MI 17-விமானம் மூலம் உயிருடன் மீட்ட IAF

    தென் மேற்குப்பருவமழை முடிந்த நிலையிலும் தமிழகத்தில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. இந்த முறை பருவமழை இதுவரை வழக்கமாக பெய்யும் பருவமழையை விட மிக அதிகமாக இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

    அதன்படி வழக்கமாக 200 மிமீக்கும் கீழ் மழை பெய்யும். இந்த முறை, 210மிமீ க்கும் அதிகமாக தமிழகத்தில் பருவமழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் கடலோர மாவட்டங்களில் இந்த முறை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மழை பெய்தது.

    தென்மேற்குப் பருவக்காற்றால் இந்த 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் - வானிலை மையம் தென்மேற்குப் பருவக்காற்றால் இந்த 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் - வானிலை மையம்

    மீண்டும் மழை

    மீண்டும் மழை

    இன்னும் இரண்டொரு நாட்களில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ள நிலையில் மீண்டும் தமிழகத்தில் மழை பெய்ய தொடங்கி உள்ளது. ஆனால் இந்த தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்பில்லை . அதன்படி அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பெய்யும். கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    எங்கு பெய்யும்

    எங்கு பெய்யும்

    சென்னை, திருவள்ளூர், , தஞ்சை, திருவாரூர், நாகை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பகல் முழுக்க வெயில் நிலவும். மாலைக்கு பிறகு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வும் மையம் கூறியுள்ளது.

    கடல் எப்படி

    கடல் எப்படி

    கடல் லேசான கொந்தளிப்புடன் காணப்படும். கடல் பகுதியில் காற்றின் வேகம் 50 கிமீ வரை இருக்கும். வங்கக்கடலில் மீனவர்கள் கவனமாக மீன் பிடிக்க செல்ல வேண்டும். கடல் கொந்தளிப்பாக காணப்படும் இடங்களில் மீன் பிடிக்க செல்ல கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    வேறு மாநிலங்கள்

    வேறு மாநிலங்கள்

    இன்னொரு பக்கம் இன்று காலையில் இருந்து டெல்லி, மும்பை, உத்தர பிரதேசம் ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது. பீகாரில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா, ஹரியானா மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது. ஹரியானாவில் வெள்ளம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    English summary
    Heavy rain will pour in 14 districts of Tamilnadu says Weather Department today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X