'அவங்க வந்தாலும்' வருவாங்க.. அலர்ட்டான சென்னை காவல்துறை! அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட பரபரப்பு.!
சென்னை : அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ள நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த மோதல்கள், பிரச்சினைகள், ஆலோசனைகள், சட்டபோராட்டங்களுக்கு பிறகு அடுத்த கட்ட நிலைக்கு செல்வது யார் என்ற தீர்ப்பு இன்னும் வெளியாக இருக்கிறது.
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்தார்.

அதிமுக பொதுக்குழு
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது எனவும் ஜூன் 23ஆம் தேதிக்கு முன் இருந்த நிலையே தொடரும் என உத்தரவிட்டார். இதையடுத்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் தொடரும் நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி திறப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தற்போது தீர்ப்பை ஒத்தி வைத்தார். இந்நிலையில் நண்பகல் அளவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக தலைமை அலுவலகம்
இந்த நிலையில் தான் அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கடந்த முறை பொதுக்குழு கூட்டம் நடந்தபோது அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்ற ஓபிஎஸ் தரப்பு கதவை உடைத்து உள்ளே புகுந்ததோடு அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றிச் சென்றதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு குற்றம் சாட்டி வருகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு சிபிசிஐடி தரப்பில் விசாரணை அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று தீர்ப்பு வெளியாக இருக்கும் நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு
இந்த நிலையில் எப்படி இருந்தாலும் இரு தரப்பில் ஒரு தரப்பினர் நிச்சயம் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல முயற்சிப்பார்கள் என்பதாலும் மற்றொரு தரப்பினர் அங்கு திரண்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சென்னை போலீசாருக்கு கிடைத்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வழக்கமாக அங்கு ஐந்து ஆயுதப்படை காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்.

80 காவலர்கள்
இந்த நிலையில் தற்போது தொண்டர்கள் திரள வாய்ப்பு இருப்பதால் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு சட்டம் ஒழுங்கு போலீசார் ரோந்து போலீசார் குற்றப்பிரிவு போலீசார் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் என சுமார் 80 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ராயப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாதாரண இடங்களில்கூட உளவுத்துறை போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீர்ப்பு வெளிவந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அதிமுக நிர்வாகிகள் என்ன முடிவெடுப்பார்கள் என்பது பொருத்தே பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்தும் விலக்கிக் கொள்வது குறித்தும் முடிவெடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. சென்னையில் 2 நாளைக்கு விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் எச்சரிக்கை -
Low Pressure Trough: நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பாதை.. 15-ம் தேதி வரை மழை விடாது! சென்னையில் இன்று மழை வெளுக்கும் -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
சென்னை RK நகரில் அதிமுக வேட்பாளருக்கு.. அஜித் ரசிகர்கள் கொடுத்த ஷாக்! இது நல்லா இருக்கே! -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு -
"கவுண்டர்" தான் ஆளப்போகிறார்.. எடப்பாடியின் ஜாதியை சொல்லி வாக்கு கேட்ட திண்டுக்கல் சீனிவாசன்! சர்ச்சை -
எடப்பாடி பழனிசாமிக்கு 'செக்' வைக்கும் விஜய்! களமிறங்கும் ரகசிய வேட்பாளர்.. அதிர்ச்சியில் அதிமுக -
திடீரென எகிறிய கிரேஸ்.. வன்னியர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் அதிமுக? லிஸ்டை கவனிச்சீங்களா? -
விந்தியா பேசும்போதே குறுக்கே நபர்.. மைக் ரிப்பேர்.. திமுகவையும் திட்டணும்.. கடலூரில் செம டென்ஷன் -
சமையல் கேஸ் சிலிண்டர் 10 நாள் ஆகியும் வரல.. சென்னையில் இல்லத்தரசிகள் கடும் அவதி.. புக் செய்துமா? -
கண்டுகொள்ளாத அதிமுக 2ம் கட்ட நிர்வாகிகள்.. கலக்கத்தில் ராம ஸ்ரீனிவாசன்.. கொடி பிடிக்க கூட வரலையாம்! -
CRPF Job: மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! 69 ஆயிரம் சம்பளம்











Click it and Unblock the Notifications