தீவிரமான இதய நோய்! உயிருக்கு போராடும் 2 வயது குழந்தை.. காப்பாற்ற உடனே உதவுங்கள்!
சென்னை: தீவிரமான இதய நோயால் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் 2 வயது குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவுங்கள். நீங்கள் செய்யும் சிறு உதவி கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
திருவள்ளூர் மாவட்டம் கண்ணகிபேரை சேர்ந்தவர் நாகராஜ். ஒரு காலத்தில் ஆசிரியராக பணியாற்றியவர் சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வேலையை விட வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.

இருப்பினும் இவருக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை குழந்தை கேப்ரியல்தான். குழந்தைக்கு 2 வயதாகிறது. ஆனால், பிறந்தது முதல் குழந்தை வழக்கத்துக்கு மாறான உடல்நல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக குழந்தையின் உடல்நல பிரச்சினை தீவிரமடைந்தது. குழந்தை சுவாசிப்பதிலும் உணவை எடுத்துக் கொள்வதிலும் பெரும் சிரமம் இருந்ததை கண்டுபிடித்த தந்தை நாகராஜ், உடனடியாக மியாட் மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்தார்.

அப்போதுதான் குழந்தைக்கு தீவிரமான இதய பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. Tetralogy of fallot (டெட்ராலஜி ஆஃப் ஃபாலோட்) என மருத்துவர்கள் இதை குறிப்பிடுகிறார்கள்.
இந்த பிரச்சனைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும். அறுவை சிகிச்சை செய்வதற்கும் அதற்கு தேவையான மருந்துகளுக்கும் சேர்த்து ரூபாய் மூன்று லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் பெட்டிக்கடையை வைத்து மாதம் ஏழாயிரம் ரூபாய் மட்டுமே வருமானம் ஈட்டி கொண்டிருக்கும் நாகராஜால் தனியாக இந்த தொகையை திரட்ட முடியாது. எனவே குழந்தையை காப்பாற்ற உங்களால் முடிந்த சிறு உதவியை செய்யுங்கள்.

நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் குழந்தையும் உயிருக்கு ஆபத்து. முடிந்தவரை.. முடிந்த உதவியை விரைவாக செய்வதன் மூலம் இரண்டு வயது குழந்தை கேப்ரியலை நம்மால் காப்பாற்ற முடியும். உடனே உதவுங்கள்.
-
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications