இதய சிகிச்சைக்காக போராடும் 7 வயது சிறுமி.. கிருஷ்ணகிரி ஜீவிதா உயிரை காக்க உதவுங்களேன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு ஏழைக் குடும்பத்தின் வாழ்க்கையில்.. ஒரு சிறிய மருத்துவ சோதனை மூலம் உயிருக்கு ஆபத்தான நோய் தெரிய வந்துள்ளது. இது இவ்வளவு இடியை இறக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமி ஜீவிதா, இன்று தனது உயிரைக் காக்க ஒரு மிகப்பெரிய அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கிறார். நிதியில்லாமல் போராடும் அவருக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள்!

அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வரும் ஜீவிதாவுக்கு, பிறவியிலேயே இதயக் குறைபாடு இருந்திருக்கிறது. ஆனால், ஆரம்ப ஆண்டுகளில் எந்த அறிகுறியும் தெரியாததால், அது யாருக்கும் தெரியவில்லை. சமீபத்தில் பள்ளியில் நடந்த வழக்கமான மருத்துவப் பரிசோதனையில், ஜீவிதாவின் இதயத் துடிப்பில் மாற்றம் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அதன் பிறகு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் நடந்த சிறப்பு முகாமில் பரிசோதித்தபோதுதான், அந்தப் பிஞ்சு இதயத்தில் இருக்கும் மாபெரும் சிக்கல் வெளிச்சத்திற்கு வந்தது.

Jeevitha

விரிவான பரிசோதனைக்குப் பிறகு, ஜீவிதாவுக்கு 'Unicuspid Aortic Valve with Severe Aortic Stenosis' என்ற அரிய இதய பாதிப்பு இருப்பது உறுதியானது. பொதுவாக ஒருவருக்கு இதய வாழ்வு (Aortic Valve) மூன்று இருக்கும்.. ஆனால், ஜீவிதாவுக்கு ஒன்று மட்டுமே உள்ளது. இதனால், அவரது இதயம் உடலின் மற்ற பாகங்களுக்கு ரத்தத்தை அனுப்பப் பெரும் போராட்டத்தை நடத்துகிறது. இதற்குத் தீர்வாக 'ROSS Procedure' என்ற சிக்கலான இதய அறுவை சிகிச்சை உடனடியாகச் செய்யப்பட வேண்டும். இதற்கு ஆகும் மொத்தச் செலவு 4,50,000 ரூபாய்.

ஜீவிதாவின் தந்தை சாமிநாதன் ஒரு விவசாயக் கூலித் தொழிலாளி. வேலை கிடைக்கும் நாட்களில் அவருக்குக் கிடைக்கும் வருமானம் வெறும் 600 ரூபாய் மட்டுமே. பல நாட்கள் வேலையின்றி வீடு திரும்பும் இக்கட்டான சூழலில், அன்றாடக் குடும்பச் செலவுகளுக்கே திண்டாடும் சாமிநாதனுக்கு, தன் மகளின் உயிரைக் காக்கத் தேவைப்படும் 4.5 லட்சம் ரூபாய் என்பது எட்டாத கனவாக இருக்கிறது.

சிறுமி ஜீவிதா மீண்டும் பள்ளிக்குச் செல்லவும், மற்ற குழந்தைகளைப் போலத் துள்ளி விளையாடவும் உங்களின் ஒரு சிறு உதவி ஒரு மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தங்களால் இயன்ற நிதி உதவியைச் செய்வதன் மூலம், ஒரு பிஞ்சு உயிரின் எதிர்காலத்திற்கு நீங்கள் ஒளியேற்றலாம்.

ஒரு 7 வயதுச் சிறுமிக்குத் தன் இதயத்தில் இருக்கும் சிக்கல் கூடத் தெரியாது. ஆனால், அந்த இதயத்தைத் துடிக்க வைக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. ஒரு விவசாயக் கூலியின் மகளாகப் பிறந்தது அந்தச் சிறுமியின் உயிர் இப்போது ஆபத்தில் இருக்கிறது. நாம் செய்யும் ஒரு சிறு உதவி, ஜீவிதாவின் வாழ்வில் ஒரு மறுபிறப்பை உருவாக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+