நிறையப் படிக்கணும் அங்கிள், ஆர்மியில் சேரணும்.. விஸ்வநாத்துக்கு உதவுங்களேன்!
சென்னை: சிரித்த முகம்.. மனசு நிறைய ஆசைகள்.. தந்தையை இழந்த வருத்தம் மனதுக்குள்.. ஆனாலும் வைராக்கியம் மட்டும் வலுவாகவே இருக்கிறது இந்த பையனிடம்.
இவன் விஸ்வநாத் சுந்தர். 10 வது வகுப்பை வெற்றிகரமாக முடித்து விட்டு 11க்குள் கால் எடுத்து வைத்துள்ள, கலாம் கனவு கண்ட வருங்கால இளைஞர்களில் ஒருவன்.

" நிறையப் படிக்கணும் அங்கிள். வரைமுறை எல்லாம் இல்லை. நிறையப் படிக்கணும். ராணுவத்தில் சேரணும்.. அதுதான் ஆம்பிஷன். ஹெல்ப் கிடைச்சா போதும். நல்லா படிப்பேன்" கனவுகளை குரலில் தேக்கியபடி புன்னகை மாறாத முகத்துடன் கூறுகிறான்.
நிரந்தர வேலை கிடைக்காமல் சிரமப்படும் தாயார், அண்ணன் என சின்னக் குடும்பத்தைச் சேர்ந்தவன் விஸ்வநாத். ஒவ்வொரு வருடத்தையும் பெரும் சிரமம் கொண்டே தாண்டி வந்துள்ள விஸ்வநாத் இப்போது பிளஸ் ஒன் வந்துள்ளான். சென்னை சிட்லபாக்கத்தில் உள்ள விவேகானந்தா வித்யாலாயா பள்ளியில் காமர்ஸ் குரூப் எடுத்துள்ள விஸ்வநாத் தனது படிப்பும், கனவும் தடையின்றி தொடர நல்ல உள்ளங்களின் ஆதரவை வேண்டி நம்மிடம் வந்துள்ளான்.
விஸ்வநாத்தின் இப்போதைய தேவை கல்விக் கட்டணமான ரூ. 25,000. சின்னத் தொகைதான்.. ஆனால் அது கிடைப்பதில்தான் மிகப் பெரிய போராட்டம் விஸ்வநாத்திற்கு. தாராளமாக உதவுங்கள். விஸ்வநாத்துக்கு நீங்கள் செய்யப் போவது சிறு உதவிதான். ஆனால் அந்த சிறுவனுக்கு இது மிகப் பெரிய படிக்கல்லாக அமையும்.
உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 0-8754275115
வங்கிக் கணக்கு விவரம்:
Name: A.Thilagavathy
Bank: Vijaya Bank
Branch: Saidapet, Chennai
AC no: 301201141001028
IFSC code: VIJB003012
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications