சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சின்னத்திரை நடிகை சித்ரா கொலையில் "டிவி பிரபலத்திற்கு" தொடர்பு.. ஹேமந்த் திடுக் குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா கொலை வழக்கில் விஜே ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக ஹேமந்த் கூறியிருப்பது சின்னத்திரைப் பிரபலங்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. சித்ரா மரணமடைந்த நேரத்தில் யார் யாருக்கு தொடர்பு இருக்கின்றது என்று கசிந்ததோ அவர்கள் தான் அந்த பிரமுகர்கள் என ஹேமந்த் வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்.

சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். மர்ம சீரியல் போல பரபரப்பாக போய் கொண்டிருக்கிறது மரண வழக்கு. சித்ராவின் தற்கொலையில் பல்வேறு மர்ம முடிச்சுகள் உள்ளதாக அவரது தோழிகள் கூறியுள்ளனர். சித்ரா தற்கொலை செய்துகொண்டபோது ஹேம்நாத் அந்த விடுதிக்கு வெளியே அமர்ந்திருந்ததாகவும், குளிக்க வேண்டும் சொல்லி தன்னை சித்ரா வெளியே அனுப்பியதாகவும் சித்ராவின் கணவர் ஹேமந்த் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேமந்த்திற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

நடிகை சித்ரா மார்பில் காயம்.. என்னை மிரட்டறாங்க.. பகீரை கிளப்பின ரோஹித்.. ஹைகோர்ட் மேஜர் உத்தரவுநடிகை சித்ரா மார்பில் காயம்.. என்னை மிரட்டறாங்க.. பகீரை கிளப்பின ரோஹித்.. ஹைகோர்ட் மேஜர் உத்தரவு

ஹேம்நாத்துக்கு எதிராக திரும்பிய நண்பர்

ஹேம்நாத்துக்கு எதிராக திரும்பிய நண்பர்

ஹேம்நாத்தின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி அவரது நண்பர் சையத் ரோஹித் என்பவர் உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் ஹேம்நாத் தனது நீண்டகால நண்பர் எனவும் அவர் மூலம் சித்ராவை தமக்கு நன்றாக தெரியும் எனவும் சித்ராவிற்கு ஹேம்நாத் அளித்த தொல்லைகள் குறித்து காவல்துறை விசாரணையின் போது சாட்சியம் அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

கொலை மிரட்டல்

கொலை மிரட்டல்

ஹேம்நாத்தின் மற்ற நண்பர்கள் சாட்சியம் அளிக்க மறுத்த நிலையில் தாம் மட்டுமே சாட்சியம் அளித்ததாகவும் இதற்காக ஹேம்நாத் தம்மை கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும் சையத் ரோஹித் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.ஹேம்நாத்தால் தம்முடைய குடும்பத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் ஹேம்நாத் தன்னுடைய பணம் மற்றும் அடி ஆட்களின் பலத்துடன் சாட்சிகளை மிரட்டி வருவதாகவும் அவரை வெளியே சுதந்தரமாக நடமாட விட்டால் சாட்சிகளை கலைப்பார் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 ஜாமீனை ரத்து செய்யுங்கள்

ஜாமீனை ரத்து செய்யுங்கள்

உயர் நீதிமன்ற ஜாமீன் நிபந்தனைகளை மீறி ஹேம்நாத் செயல்பட்டு வருவதால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹேம்நாத் தனது நண்பர் சையத் ரோஹித்தை மிரட்டியாதாக கொடுக்கப்பட்ட புகாரை விசாரித்தில் அது உண்மை இல்லை என தெரிய வந்ததால், புகார் முடித்து வைக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதேபோல், சையத் ரோகித்தை மிரட்ட மாட்டேன் என ஹேம்நாத் தரப்பிலும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, ஹேம்நாத்துக்கு எதிரான வழக்கை செப்டம்பர் மாதம் முடித்து வைத்து உத்தரவிட்டார்.

யார் யாருக்கு தொடர்பு

யார் யாருக்கு தொடர்பு


இந்த நிலையில் சித்ரா மரண வழக்கு குறித்து மறுபடியும் வாய் திறந்துள்ளார் ஹேம்நாத். சித்ராவின் மரணத்திற்கு காரணமானவர்களைப் பற்றி விரைவில் வெளிப்படுத்துவேன் என்று கூறியுள்ளார் ஹேம்நாத்.
மெஸ் ஒன்றின் உரிமையாளர், விஜய் டிவி விஜே ஒருவர் ஆகிய இருவரும் சித்ராவிற்கு பல வழிகளில் தொந்தரவு கொடுத்தனர். இதற்கான ஆதாரங்கள் எல்லாம் ரோஹித்திடம் உள்ளன என்று கூறியுள்ளார் ஹேம்நாத்.
இவ்ளோ வந்துட்டேன் அதைப்பற்றி மீண்டும் வெளிப்படுத்துவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

பல ஆதாரங்கள்

பல ஆதாரங்கள்

தான் சிறையில் இருந்து வெளியே வந்த உடன் தன்னிடம் பல தகவல்களை ரோஹித்திடம் பகிர்ந்து கொண்டனர். சட்ட ரீதியாக வழக்கு நடந்து கொண்டுள்ளது. சித்ராவின் மரணத்திற்குக் காரணமாக பல ஆதாரங்கள் ரோஹித்திடம் இருப்பதாகவும் கூறியுள்ளார் ஹேம்நாத்.

யார் அந்த விஐபிக்கள்

யார் அந்த விஐபிக்கள்


அதாவது சிறையில் இருந்து வெளியே வந்து பேட்டி கொடுத்து வரும் ஹேமந்தினால் சில பிரபலங்களின் பெயர்களுக்கு களங்கம் ஏற்படக்கூடும் என்பதால் தான் ஜாமீன் மனுவை ரத்து செய்யுமாறு ரோஹித் கூறியிருந்தார் என்று கூறும் ஹேமந்த் வழக்கறிஞர், ரோஹித் மனுவில் குறிப்பிட்ட அந்த பிரபலங்கள் யார் எனக் கேள்வி எழுப்பிய ஹேமந்தின் வழக்கறிஞர், அவர்கள் தான் ரோஹித்தின் பின்னணியில் இருந்து இயக்கக்கூடும் எனக் கூறினார்.

தீர்த்துக்கட்ட சதி?

தீர்த்துக்கட்ட சதி?

அதுமட்டுமல்லாது ஹேமந்தை மீண்டும் சிறைக்கு அனுப்பி அங்கு வைத்து தீர்த்திக்கட்டவே ரோஹித் மனுதாக்கல் செய்திருந்ததாகவும் கூறியிருக்கின்றார். மேலும் சித்ரா மரணமடைந்த நேரத்தில் யார் யாருக்கு தொடர்பு இருக்கின்றது என்று கசிந்ததோ அவர்கள் தான் அந்த பிரமுகர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். சித்ரா தற்கொலை ழக்கில் விஜய் டிவியைச் சேர்ந்த பிரபல விஜேவிற்கு தொடர்பு இருப்பதாக ஹேமந்த் கூறியிருப்பது சின்னத்திரைப் பிரபலங்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

English summary
Hemanth has said that Vijay TV Anchor is involved in the case of small screen actress Chitra's murder, which has shocked many small screen celebrities. At the time of Chitra's death, Hemnaths lawyer alleged that it was those personalities who leaked who was related to whom.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X