அரியர் மாணவர்களுக்கு அசத்தல் செய்தி.. ஆன்லைனிலேயே அரியர் தேர்வுகள்.. அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
சென்னை : வழக்கமான தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வுகள் நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெற்றன. மேலும் தேர்வுகளும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பொறியியல் தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் கலை கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியாக பிப்ரவரி 1 முதல் 20 தேதி வரை நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

கொரோனா பரவல்
தற்போது கொரோனா பரவல் ஓமிக்ரான் என்ற பெயரில் 3வது அலையில் பாதிப்புகள் அதிகரித்து வருகின்ற காரணத்தால் உயர்கல்வித்துறை முதலில் அறிவித்திருந்த அறிவிப்புகளில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்ததாகவும் இதனை தொடர்ந்து முதல்வரின் உத்தரவின் பேரில் கல்வித்துறை செயலர் கல்வி துறை இயக்குநர்கள் துணை வேந்தர்கள் மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் கல்லூரி ஆசிரியர்களும் கலந்து பேசியதன் அடிப்படையில் தேர்வுகள் ஆஃப்லைன் முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆன்லைனில் கல்லூரி தேர்வு
இந்தநிலையில் தற்போதைய சூழ்நிலையில் அதற்கு சாத்தியக்கூறுகள் குறைவாக இருக்கின்ற காரணத்தால் ஆஃப்லைன் முறையில் தேர்வு நடத்தினால் நாட்கள் தள்ளிப் போகும் என்ற காரணத்தாலும் செமஸ்டர் தேர்வுகளில் மட்டும் பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கி ஆன்லைன் முறையிலேயே நடத்துவது என்று முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே அமைச்சர் கூறியிருந்தார். இந்தநிலையில் வழக்கமான கல்லூரித் தேர்வுகள் போலவே பல்கலைக் கழக தேர்வுகளும் ஆன்லைனிலேயே தேர்வுகள் நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
கொரோனா தொற்றை குறைக்கும் நோக்கில் ஆன்லைன் தேர்வுகள் நடத்துவது குறித்த மாணவர் சங்க பிரதிநிதிகளுடன் உயர்கல்வித் துறை சார்பில் ஆலோசனைக் நடைபெற்றது. இந்த ஆலோசனையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாணவர் அமைப்பு பிரதிநிதிகள், உயர்கல்வித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் . இதற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி பிப்ரவரி 1ஆம் முதல் 20ஆம் தேதி வரை அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெறும் எனவும் இறுதி செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் நேரடித் தேர்தல் நடைபெறும் என ஜனவரி 21-ஆம் தேதியே கூறி இருப்பதை சுட்டிக்காட்டினார்.

ஆன்லைனில் அரியர் தேர்வு
இந்நிலையில் தற்போது அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருப்பதாகக் கூறிய அமைச்சர், ஆன்லைன் மூலம் நடைபெறுவதால் 12.94 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கும், 1.90 லட்சம் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும், பல்கலைகழகங்களில் படித்து வரும் 52,301 மாணவர்களும், 4.5 லட்சம் பொறியியல் மாணவர்கள் பயனடைவார்கள் என விளக்கம் அளித்தார். மேலும் 20 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர் எனவும், இறுதி செமஸ்டர் தேர்வு கட்டாயம் நேரடியாகவே நடக்கும் எனவும் அமைச்சர் பொன்முடி உறுதிபடக் கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications