ஜனவரி 16ல் ரேசன் கடைகளுக்கு லீவு..தமிழக அரசு சொன்ன காரணம் இதுதான்!
சென்னை: பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவதற்காக ரேஷன் கடைகளுக்கு இன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டதற்கு ஈடாக வரும் 16ஆம் தேதி திங்கட்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 27ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் நிர்வாக காரணங்களுக்காக 16 ஆம் தேதி திங்கட்கிழமை விடுமுறை நாளாக மாற்றி தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் தற்போது பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதனையடுத்து, கடந்த ஜனவரி 9ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் அனைவரையும் சென்று சேர இன்றைய தினம் ரேஷன் கடைகளை வேலை நாளாக மாற்றப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் 2வது வெள்ளிக் கிழமை விடுமுறை விடப்படும். ஆனால், தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது காரணமாக வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளுக்கு இன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டதற்கு ஈடாக 16ம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் ஜனவரி 27 ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ஜனவரி 16 விடுமுறை நாளாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
தற்போது ரேஷன் கடைகளில் 2.19 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு தலா 1000 ரூபாய் ரொக்கம் மற்றும் 1 கிலோ பச்சரிசி, சக்கரை மற்றும் கரும்பு ஆகியவை அடங்கிய தொகுப்புகள் கடந்த 9ஆம் தேதி முதல் தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கடைகளில் பொருட்களை வழங்கும் போது, பயோமெட்ரிக் வேலை செய்யாவிடில் குடும்ப அட்டைதாரரின் கண்களை ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் பரிசோதனை முயற்சியாக நகர்புறம், கிராமப்புறங்களில் தலா ஒரு ரேஷன் கடைகளில் அமல்படுத்தப்படும் என தமிழக சட்டசபையில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்
நியாய விலைக் கடைகளில் நடைபெறும் திருட்டை தடுக்கவும், பயனாளர்களுக்கு பொருட்களை கொண்டு சேர்ப்பதை உறுதி செய்யவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக மாநிலம் முழுவதும் பயோ மெட்ரிக் மூலமாக தற்போது ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
சில நேரங்களில் பயோமெட்ரிக் செய்யாமல் போனால் மக்கள் ரேஷன் பொருட்களை வாங்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதையடுத்து இன்று சட்டசபையில் பேசிய, அமைச்சர் சக்கரபாணி சோதனை முயற்சியாக கருவிழியை ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இதன் மூலமாக ரேஷன் கடைகளுக்கு குடும்ப அட்டையை எடுத்து செல்ல தேவையில்லை என்ற சூழல் உருவாகும். தற்போது நியாயவிலை கடைகளில் 98.3 சதவிகிதம் பேர் பயோ மெட்ரிக் முறையில் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications