"செக்ஸ் டாய்".. கஸ்டம்ஸில் சிக்கிய "பொம்மை".. ஆபீஸரிடம் சீறிய பெண்.. தாங்கி பிடித்த திலகவதி.. சபாஷ்
பெண்களுக்கான சுதந்திரங்களை அவர்களே போராடி பெற்றுக்கொள்ளவும் துவங்கிவிட்டது வரவேற்பை பெற்று வருகிறது
சென்னை: "நம்ம Sexual Choicesகூட, நம்மல Emotionally Mentally damage பண்ணிதான் Pleasure-ஐ குடுப்பேன் என்றால், போங்கடா... அப்படிப்பட்ட Pleasure-ஐ, ஒரு பொம்ம கிட்டயே வாங்கிக்கிறேன் என ஒரு பொண்ணு முடிவு பண்றது தப்பே இல்ல என்கிறார் வழக்கறிஞர் திலகவதி...!!
கடந்த சில வருடங்களாகவே, கூகுளில் அதிக அளவில் தேடப்பட்டு வரும் வார்த்தைகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.. வெளிநாடுகளில் மட்டுமே புழங்கப்பட்டு வந்த இந்த சொல்லாடல், இந்தியாவிலும் எதிரொலிக்க துவங்கி உள்ளது.
குறிப்பாக மும்பை, பெங்களூரு, சென்னை நகரங்களில் இருந்து செக்ஸ் பொம்மைகளை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

செக்ஸ் பொம்மைகள்
ஆனால், இந்தியாவில் செக்ஸ் பொம்மைகளை வெளிப்படையாக விற்பதற்கு சட்டப்படி தடை இருப்பதால், ஆன்லைனில் இதற்கு ஏகப்பட்ட கிராக்கிகள் இருப்பதாக தெரிகிறது.. செக்ஸுக்குத் துணைபுரியக்கூடியவை இந்த பொருட்கள்.. ஆண்கள், பெண்கள் இரு தரப்புக்குமே தங்களின் உடல் தேவைகளை தீர்த்துக்கொள்வதற்காக உருவாக்கப்பட்டவை.. அந்த காலத்தில், ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிக காலங்களில் இருந்தே இதுபோன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வந்ததற்கான சான்றுகளும் உள்ளதாக சொல்கிறார்கள்...

கண்டனங்கள்
தற்போது, இந்த பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், அதன் பயன்பாடுகளும், தேவைகளும் அதிகரித்துள்ளன.. பாலியல் தொற்று உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளிலிருந்து பாதுகாத்து கொள்ள, இதுபோன்ற பொருட்கள் பலருக்கு வடிகாலாக அமைந்து வருகின்றன... அதேபோல, பெண்களும் பல்வேறு காரணங்களுக்காக இந்த பொம்மைகளை பயன்படுத்துகிறார்கள்.. அவ்வளவு ஏன், தம்பதிகளும்கூட, இவைகளை பயன்படுத்துகிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில் சென்னையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஒரு பெண் ஆன்லைனில் இந்த பொம்மையை ஆர்டர் செய்துள்ளார்..

திலகவதி
ஆனால், விமான நிலையத்தில் அந்த பொருளை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.. இந்த விவகாரம் கோர்ட், கேஸ் வரையும் சென்றுள்ளது. இந்த வழக்கில் நேரடியாக சம்பந்தப்பட்டு, அந்த பெண்ணுக்காக குரல் கொடுத்தவர் வழக்கறிஞர் திலகவதி. இதை பற்றி பேஸ்புக்கில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவு இதுதான்: "ஒரு பெண் Sex toy Online ல Order பண்ணி இருந்தாங்க.. வெளிநாட்ல இருந்து வந்த அந்த Product அ Airport ல Customs ல Seize பண்ணிட்டாங்க "against public morality" னு. இந்த பெண்ணுக்கு "Show Cause Notice" ம் அனுப்பி இதுக்கு நீங்க Explanation குடுக்களனா உங்க மேல Action எடுப்போம்னு சொல்றாங்க.

புதுசு
இவங்களுக்கு என்ன பண்றதுனு புரியல..இதுல Legal அ வெளில சொல்லி Help கேக்குற அளவுக்கு நம்ம சமூகம் புரிஞ்சிக்கவும் இல்ல, அதுக்கான வெளியும் தரல.. சட்டம் படிச்சிருந்தாலும் ஒரு பொண்ணு இப்டி இத Order பண்ணிருக்காங்கனு Advocates ம் Judge பண்ணுவாங்க எப்டி எடுத்துப்பாங்கனு தெரியலனு யோசிச்சிட்டு இருந்தப்ப... இந்த Issue வ Understand பண்ணிக்கிற judge பண்ணாத ஒரு Advocate வேணும்னு அவங்க தேட, என்னோட Facebook Friend ஒருத்தர் என்கிட்ட அவங்கள பேச வச்சாரு... எனக்கும் இந்த Issue புதுசு.. ஆனா ஒரு பொண்ணோட Sexual Privacy க்கும் Public Morality க்கும் Customs க்கும் என்ன சம்மந்தம் னு கோவம் தான் வந்தது.. கண்டிப்பா இத கைல எடுக்கனும்னு முடிவு பண்ணி..

வழக்கறிஞர்
நானும் வழக்கறிஞர் Rajasingaravelan S R னும் சேந்து reply Notice அனுப்புனோம்... அதுல "#Customs #Act,1982 ல Public Morality ல Sex toys வரும்னு சொல்லல.. அதோட #RightToPrivacy பத்தி "K.S Puttaswamy Vs Union Of India" போன்ற தீர்ப்புகள அடிக்கோட்டிட்டு Reply குடுத்தோம். Hearing க்கு வர சொன்னாங்க.. அங்கயும் அந்த பெண்ணோட போயி அதுல "ஒரு பொண்ணோட Sexual Privacy, Public Morality" ல வராது னு Explanation குடுத்துட்டு வந்தேன். இன்னைக்கு Order வந்திருக்கு...❤Sex toy Obscene இல்ல னும்.. அது Right To Sexual privacy னும், அவங்களுக்கு எதிரான நடவடிக்கையை கைவிடுரோம்னும்...சொல்லி Product ஐ யும் Delivery பண்ணிட்டாங்க..❤

தப்பே இல்லை
இதுல, உறுதியா கடைசிவர யார் என்ன நெனப்பாங்க என்ற கருத்தை உடைச்சி நின்ன, அந்த பெண்ணுக்கும் வாழ்த்துகள் 😍 So, Sexual privacy Is our Right... We Have right to Pleasure... இதுல Guilty ஆக ஒன்னுமே இல்ல.. நம்ம Sexual Choices உம், நம்மல Emotionally Mentally damage பண்ணி தான் Pleasure அ குடுப்பேன் அப்டின்னா, போங்கடா... அப்படிப்பட்ட Pleasure அ ஒரு பொம்ம கிட்டயே வாங்கிக்கிறேன்னு ஒரு பொண்ணு முடிவு பண்றதும் தப்பே இல்ல...❤ " என்று அந்த பதிவில் திலகவதி பதிவிட்டுள்ளார்.

கொடுப்பவள்
உண்மையை சொல்லப்போனால், காதல், காமம் குறித்து பொது தளத்திலோ அல்லது குறைந்தபட்சம் தன்னுடைய துணையுடனோகூட பேச பெண்களுக்கு அனுமதி இல்லை.. காரணம், பாலியல் தேவைகள் பற்றி பேசும் பெண்கள், தவறான பெண்கள் என்று சித்திரிக்கப்பட்டுள்ளதுதான். படுக்கையறை பிண்டமாக "கொடுப்பவளாக" மட்டுமே பெண் கிடக்க என்பதே எழுதப்படாத விதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள சூழலில், ஒரு பெண்ணின் தனிப்பட்ட தேவையையும், அவளுக்கான நியாயமான உரிமையையும், வாதாடி பெற்று தந்திருக்கிறார் வழக்கறிஞர் திலகவதி..

பலன்கள் என்ன
இப்படி ஒரு நடத்த வேண்டுமானால் துணிச்சலுடன்கூடிய, சமூக அக்கறையும் இருக்க வேண்டும்.. அந்தவகையில், ஒன் இந்தியா தமிழ் சார்பாக திலகவதியை தொடர்பு கொண்டு நாம் பேசினோம்.. இதுவரை நடைமுறையில் கேள்விப்படாத ஒரு வழக்கை எடுத்து நடத்த வேண்டும் என்று எப்படி தோன்றியது? இதுபோன்ற தீர்ப்புகள் மூலம் கிடைக்ககூடிய பெண்கள் பெறக்கூடிய பலன்கள் என்ன? என்பன போன்ற கேள்விகளை முன்வைத்தோம்.. நம்மிடம் திலகவதி பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்தான் இவை:

தேவைகள்
"நான் ஒரு பெண் என்பதால், பெண்களுக்கான தேவைகள், உரிமைகள் குறித்து இயல்பாகவே சிந்திக்கக்கூடிய, பேசக்கூடிய நபர்.. ஆண்டாண்டு காலமாக, ஒரு பெண்ணை இந்த சமூகம் புரிந்து வைத்திருக்கிற முறையே தவறாக இருக்கிறது.. அனைத்து உயிர்களுக்கும் பொதுவான உணர்வுதான் செக்ஸ்.. அத்தகைய அடிப்படை தேவையை தீர்மானிப்பதும், அதற்கான நேரத்தை வகுப்பதும், அதுகுறித்த முடிவுகளை எடுப்பதும் ஆண்களாகவே இருக்கிறார்கள்.. இந்த வழக்கை பொறுத்தவரை, ஒரு பெண் தன்னுடைய தேவைக்காக "செக்ஸ் பொம்மைகளை" ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியிருக்கிறார்.. ஆனால், ஆபாசமான பொருட்களை விற்பது வாங்குவது தவறு என்று கூறி, சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பொம்மைகளை பறிமுதல் செய்துவிட்டனர்... ஆபாச பொருட்களை விற்பது அல்லது வாங்குவது தவறு பொதுப்படையான சட்டம் உள்ளன..

ஆபாச புத்தகம்
அதாவது ஆபாச புத்தகம், ஆபாச சி.டி.க்கள், போன்றவற்றை பொதுவெளியில் வாங்கவோ விற்கவோ தடை உள்ளது. அந்த வரிசையில் இந்த செக்ஸ் பொம்மைகளும் சேர்க்கப்பட்டு விட்டன. ஆனால், இதற்கான பிரத்யேக தடை சட்டம் எதுவும் இல்லை.. முக்கியமாக, இந்த பொம்மைகளை வாங்குவதும், விற்பதும் தவறு என்று எந்த சட்டமும் குறிப்பிட்டு சொல்லவில்லை.. இப்படியான பொம்மைகளை பயன்படுத்தக்கூடாது என்றும் சொல்லவில்லை.. இதை மையமாக வைத்துதான் என் வாதத்தை துவக்கினேன். அதுமட்டுமல்ல, இதுபோன்ற பொம்மைகள் ஆபாசமான பொருளே கிடையாது.. ஒரு பெண் தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்துவது அவளது உரிமை.. அதை தடுப்பது என்பது, அவளது அடிப்படை உரிமையை அபகரிப்பது போன்றது..

ஆணுறைகள்
ஆணுறைகள் விற்கப்படுவதை அரசுகளே ஊக்குவிக்குவதுபோல, இதுவும் ஒரு உரிமை சார்ந்த, உடல் சார்ந்த பொருள்தான்.. மற்றபடி இந்த பொம்மைகளால், சமூகத்துக்கோ, அல்லது வேறு ஒரு தனிப்பட்ட நபருக்கோ எந்தவிதமான பாதிப்பும், இடையூறும், தீங்கும் கிடையாது, முக்கியமாக, ஒழுக்கத்துக்கு எதிரானது இல்லை என்பதையே என்னுடைய ஆணித்தரமான வாதமாக எடுத்து வைத்தேன்.. என் வார்த்தைகளில் உள்ள உண்மையையும், உணர்வையும், சட்டரீதியாக நான் சுட்டிக்காட்டியதையும் அதிகாரிகள் புரிந்து கொண்டனர்.. அதன்பிறகே, அபகரிக்கப்பட்ட செக்ஸ் பொம்மைகளை அந்த பெண்ணிடமே திருப்பி ஒப்படைத்தும்விட்டனர்.

கண்ணோட்டம்
இனி இதுபோன்ற நிகழ்வுகளுக்கு, இந்த தீர்ப்பின் நகல் ஒரு முன்மாதிரியாக இருப்பதுடன், இந்த நகலை வைத்தே, அடுத்தடுத்த உரிமைகளை பெண்களால் எளிதாக பெற்றுக் கொள்ளவும் முடியும்.. அதேசமயம், சில சட்டங்கள் திருத்தப்பட வேண்டி உள்ளது.. தார்மீக அடிப்படையில் பார்த்தாலும் அல்லது செயலாற்றல் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இந்திய தண்டனையியல் சட்டமானது, உழைத்து உழைத்து ஓய்ந்தே விட்டது.. இப்போதைய தேவைகளுக்கும், மாற்றங்களுக்குமான சட்டங்கள் இல்லை என்பதால், அவைகளை மாற்றும் நடவடிக்கையை உடனடியாக துவங்க வேண்டி உள்ளது என்று வலிய கோரிக்கையை நம்மிடம் அழுத்தமாக பதிவு செய்தார் வழக்கறிஞர் திலகவதி..!!
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications