சென்னை.. போன வருஷம் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகள் இப்போ தப்பியது எப்படி? ஏரியா வாரியாக லைவ் தகவல்கள்!
சென்னை: அட! நம்ம சென்னையா இது? என மக்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது தமிழக அரசு. கடந்த ஆண்டு பெய்த மழையில் மூழ்கித் தவித்த சென்னையின் பல பகுதிகள், இன்று மழைநீரே தேங்காத நிலமாக மாற்றம் அடைந்துள்ளன.
Recommended Video
குறிப்பாகக் கடந்த ஆண்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கொளத்தூர் தொகுதியில் தேங்கி நின்ற முழங்கால் அளவு மழைநீரில் படகு சவாரி செய்து பத்திரிகையாளர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க முயன்றார். ஆனால் இது நாடகம் என பிற கட்சியினர் விமர்சனம் செய்தனர்.
அண்ணாமலை வெளியிட்ட புகைப்படத்தில் அவரது படகை ஒட்டி மிகச் சாதாரணமாக சில மக்கள் நடந்து சென்ற காட்சியை வட்டம் போட்டுக் காட்டி நெட்டிசன்கள் பலரும் அவரை கலாய்த்திருந்தனர். பிறகு அந்தப் படகு சவாரி குறித்து விளக்கம் அளித்தார் அண்ணாமலை. ஆனாலும் அவரது விளக்கத்தை ஏற்காத பலர் மேலும் அவரை ட்ரோல் செய்தனர்.

அண்ணாமலை படகு சவாரி பகுதி
கடந்த ஆண்டு கொளத்தூரில் அண்ணாமலை படகு சவாரி செய்த பகுதியில் ஒரு சொட்டுகூட மழைநீர் இந்த ஆண்டு தேங்கவில்லை என்று ஒரு தனியார் தொலைக்காட்சி வீடியோ வெளியிட்டு அவரை கலாய்த்துள்ளது. இந்த அதிரடி மாற்றம் குறித்து அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். 'ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். திருபுகழ் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் சென்னையில் மட்டும் 4500 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் 95 சதவீத பணிகள் நிறைவை எட்டியுள்ளன" என்று கூறியிருக்கிறார். மேலும், ஏறக்குறைய 950 கிமீட்டர் தூரத்திற்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் இன்னும் 10 நாள் கழித்து மழை பெய்திருந்தால் மொத்த பணியுமே முடிவடைந்திருக்கும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்தத் திட்டப்பணிகள் மிகச் சிறப்பாகவே செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதற்கு பல்வேறு ஆதாரங்களை இன்று வெளியாகி உள்ள செய்திகள் மூலம் அறிய முடிகிறது. செய்தி சானல்கள் தவிர்த்துப் பல தனி நபர்கள் கூட சென்னை மாநகராட்சியின் தரமான பணியைப் பாராட்டி வருகின்றனர்.

முதல் காட்சி:
திநகரில் உள்ள ஜி.என்.செட்டி சாலை, திருமலை சாலை ஆகியவை கடந்த ஆண்டு மழையின்போது வெள்ளம் சூழ்ந்த பகுதியாகக் காட்சி அளித்தது. ஆனால் இந்த மழையின் போது ஒருதுளி கூட நீர் தேங்கவில்லை என அப்பகுதி மக்கள் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். அதேபோல் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை பகுதி சின்ன மழைக்குக்கூடத் தாங்காது. முழங்கால் அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். ஆனால் இந்த மழைக்கு இந்தப் பகுதி மழையா? வெள்ளமா? என வேடிக்கை பார்க்கக்கூட வாய்ப்பை வைக்கவில்லை. சாலை முழுவதும் மழைபெய்த சுவடே இல்லாமல் காய்ந்து போய் உள்ளது. இதே நிலைதான் வேப்பேரி ஜோதி வெங்கடேஷ்வரா சாலை நிலையும். வடிகால்கள் முறையாகச் சீர் செய்யப்பட்டுள்ளதால் இந்த மழையால் கொஞ்சம் கூட போக்குவரத்து பாதிப்பு அடையவில்லை என ‘தந்தி தொலைக்காட்சி' செய்தி வெளியிட்டு ஆச்சரியத்தை வெளிப்படுத்தி உள்ளது.

காட்சி இரண்டு
கடந்த ஆண்டு ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் காலனியில் மழை வெள்ளம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குக் கரைபுரண்டு ஓடியது. மழை நின்று சில நாட்கள் ஆகியும் கூட இப்பகுதிகளில் முழங்காலுக்கு மேல் மழைநீர் தேங்கிக் கிடந்தது. அதே பகுதியில் நேற்று இரவு பெய்த மழைநீரை விடியற்காலையில் பார்க்கவே முடியவில்லை. வாய்க்கால் வழியே வடிந்து சாலை முழுக்க தரமாகக் காட்சி தந்தது. இந்தப் பகுதியில் வாட்ச் மேனாக பணிபுரியும் ஒருவர், கொடுத்துள்ள தொலைக்காட்சி பேட்டியில் கடந்த ஆண்டு அனுபவித்த இன்னல்களை மிகத் தெளிவாக ஒப்பிட்டுப் பேசி உள்ளார். இந்தக் காட்சி ஒன்றே போதும் சென்னை மாநகராட்சி எந்தளவுக்குச் சிறப்பாக நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை நிரூபிப்பதற்கு என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

காட்சி மூன்று
சென்னையிலுள்ள கே.கே.நகர்ப் பகுதி வெள்ளநீருக்கு எந்தளவுக்குப் பிரபலமானது என்பதைச் சொல்லவேண்டாம். கடந்த ஆண்டு மழைக்குச் சாலைகள் முழுக்க ஏரிபோல் காட்சி அளித்ததை அந்தப் பகுதி மக்கள் எளிதில் மறந்திருக்கவே முடியாது. ஆனால் நேற்று இந்தப் பகுதியில் உண்மையில் மழை பெய்ததா? எனச் சந்தேகப்படும் அளவு பளபளப்பாக உள்ளது சாலை. இந்தப் பகுதி கடந்த ஆண்டு எப்படி மழையால் பாதிக்கப்பட்டு இருந்தது, இப்போது எப்படி சாலை காய்ந்துபோய் உள்ளது என ஒரு தனியார் தொலைக்காட்சி ஒரு பதிவை வெளியிட்டு, அதில் வேறுபாட்டை உணர்த்தி செய்தி போட்டு உள்ளது. குறிப்பாக ராஜமன்னார் சாலைவாசி ஒருவர் கடந்த ஆண்டு மழைக்கு தங்கள் பகுதி எந்த அளவுக்குச் சிரமத்திற்கு உள்ளானது என்பதை அந்தச் செய்தி பதிவில் விளக்கம் அளித்து சுட்டிக்காட்டி உள்ளார்.

காட்சி நான்கு
அதேபோல் ‘இந்த வருஷம் இப்படி ஒரு அதிசயமா?' என்று மாநகராட்சியை தெற்கு ரயில்வே பாட்டி உள்ளது. சென்னை கோட்ட மேலாளர் அவரது ட்விட்டர் பக்கத்தில், "சென்னை மாநகராட்சியுடன் நாங்கள் சேர்ந்து எடுத்த கூட்டு முயற்சியால் இந்த ஆண்டு பெரிய பலன் கிடைத்துள்ளது. எந்த இடத்தில் தண்ணீர் தேங்கவில்லை. மழைநீர் தேங்காததால் வழக்கமாக இயக்கப்படும் வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காகச் சென்னை மாநகராட்சிக்கு நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதர ரயில் நிலையங்களிலும் இதுபோன்ற பணி மேற்கொள்ளப்படும் என நம்புகிறோம்" என்று கூறியுள்ளார்.

காட்சி ஐந்து
சென்னை மந்தைவெளி பகுதி வார்டு எண் 126 இல் வசித்து வரும் சஞ்சய் என்பவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் கடந்த ஆண்டு இப்பகுதிவாசிகள் எப்படி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டார்கள் என்பதற்காகக் காட்சிகள் பதிவாகி உள்ளன. அவரது பதிவில், " கடந்த 48 மணிநேரத்தில் 20 செமீட்டருக்கு மேலாக மழை பெய்துள்ளது. ஆனாலும் எங்கள் தெருக்களில் மழைநீர் தேங்கவில்லை. கடந்த 2021 பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ளச் சேதத்திற்கும் இப்போது உள்ள நிலைக்கும் பெரிய மாற்றம் உள்ளது. இதனைச் செயல்படுத்திய சென்னை மாநகராட்சிக்கு நன்றி" என்று கூறியுள்ளார்.

வியாசர்பாடி
ஒவ்வொரு மழைக்கும் சென்னை வியாசர்பாடியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை கடுமையான வெள்ளத்தில் மூழ்கித் தவிக்கும். இது காலங்காலமாக நடக்கும். இதற்கு ஒரு விடிவு காலமே கிடையாதா என அப்பகுதி மக்கள் அழாத குறையாகக் கோரிக்கை வைத்து வந்தனர். இன்று அதிகாலை பெய்த மழையில் மழையில் கடல்போல் காட்சி அளித்த ஜீவா சுரங்கப்பாதை, தற்போது மக்கள் மிகவேகமாகப் பயணிக்கும் சாதாரண சாலையைப் போலக் காட்சி தருகிறது.
அந்தக் காட்சியைக் காணொளியாக எடுத்து ஒரு சானல் வெளியிட்டுள்ளது. அதில் மக்கள் கும்பல் கும்பலாகக் கோடைக்காலத்தில் நடந்து செல்வதைப் போலச் செல்கிறார்கள். ஒரு துளி நீர் தேங்கவில்லை என்பது மழை பெய்ததற்கான தடயமே தென்படவில்லை.

வெள்ளச்சேரியில்லை, வேளச்சேரி
சின்ன மழையைக்கூட வெள்ளச்சேரியாக காட்சி தரும் வேளச்சேரியில் இந்த மழையின் போது நீர் தேங்கவே இல்லை. அத்துடன் விடியவிடிய மழை பெய்தும் இந்தப் பகுதிகளில் வெள்ளம் தேங்கவில்லை. அந்தளவுக்கு மின்னல் வேகத்தில் வடிகால் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதன் பயனாகவே எந்த நெருக்கடியும் இல்லாமல் வாகனங்கள் சாலையில் சரசரக்கின்றன. இந்தக் காட்சிகளுக்கு எல்லாம் ஹைலைட் ஆக, இன்று மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், "அதிமுகவின் 10 ஆண்டுக்கால ஆட்சியில் சென்னை மட்டுமில்லை; கிட்டத்தட்டத் தமிழ்நாட்டு சீரழிக்கப்பட்டுவிட்டது. அதை எல்லாம் சரி செய்ய வேண்டும் என்றால் பல வருடங்கள் ஆகும். இருந்தாலும் நாங்கள் ஒன்றரை வருடத்திற்குள்ளாகவே பணிகளை முடித்துவிடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்றார். கடந்த ஆண்டைப் போல இல்லை. மழைநீர் திநகர் போன்ற பகுதிகளில் தேங்கவில்லை. ஆனால் வடசென்னை போன்ற பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளதாகச் சொல்லப்படுகிறதே? என்று செய்தியாளர் கேட்டதற்கு, " கடந்த ஆண்டைப்போல் மழைநீர் தேங்கவில்லை என்பதை நானே சொல்லிக் கொள்ளக் கூடாது. ஆனால் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். நல்லது. வடசென்னையில் மழைநீர் தேங்கியதாகத் தகவல் வந்துள்ளது. அதை உடனுக்குடன் அப்புறப்படுத்தி வருகிறோம்" என்று கூறி இருக்கிறார். இந்த மாற்றத்தைச் சென்னை மக்கள் மகிழ்ச்சியாக வரவேற்கின்றனர். இந்த மகிழ்ச்சி நிரந்தரமானதாக மாற வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பு.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
கோடைக்கு நடுவே கொட்டும் குளுகுளு மழை.. இந்த மாவட்டங்களில் ஜில் கிளைமேட் தான்.. வானிலை மையம் அலர்ட் -
கோவை, நீலகிரிக்கு பறந்த அலர்ட்.. கொட்டப்போகும் மழை! வானிலை மையம் கொடுத்த அப்டேட்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?












Click it and Unblock the Notifications