வராத விஜய்.. மாட்டிய ஆதவ் அர்ஜுனா.. தென் மாவட்டத்தில் பவர் சென்டராகும் நிர்மல்குமார்.. பின்னணி என்ன?
மதுரை: முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்திக்கு முதல்வர் விஜய் பசும்பொன் வராதது அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாருக்கு சாதகமாக மாறி இருக்கிறது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுன் தேவரின் முழுப் பெயரை சொல்லாமல் பதிவு செய்திருந்தார். இதனால் முக்குலத்தோர் சமூக அமைப்புகள் சிடிஆர் நிர்மல்குமாரை மட்டுமே அணுக வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த முறை முதல்வர் விஜய் பசும்பொன்னுக்கு நேரில் வர உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அரசியல் சூழல் காரணமாக விஜய் பசும்பொன் வராமல் தவிர்த்தார். அதற்கு பதிலாக சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

தவெக சார்பாக அமைச்சர் நிர்மல்குமார் பசுன்பொன்னுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார். தவெக எம்எல்ஏ-க்கள், மாவட்டச் செயலாளர் என்று பலரும் பசுன்பொன் சென்றிருந்தாலும், அங்கு சிடிஆர் நிர்மல்குமாரின் பயணம் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றது. விஜய் வராததோடு, அன்றைய நாளில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் ஒரு பதிவை எழுதி சர்ச்சையில் சிக்கினார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் முழுப் பெயரை பதிவு செய்யாமல் பசும்பொன் முத்திராமலிங்க பெருமகனார் என்று பதிவிட்டார். இது தேவர் சமூக அமைப்புகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தங்களின் தலித் வாக்கு வங்கியை காப்பாற்ற ஆதவ் அர்ஜுனா தேவரின் பெயரை கூட சொல்லாமல் புறக்கணிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் விஜய்யின் கடைசி நேர மாற்றமும், அமைச்ச ஆதவ் அர்ஜுனாவின் சர்ச்சை பதிவும் சிடிஆர் நிர்மல்குமாருக்கு சாதகமாக மாறி இருக்கிறது. தவெக ஆட்சியில் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்களில் சிடிஆர் நிர்மல்குமார், பிரபு உள்ளிட்ட 3 பேர் தான் இருக்கின்றனர். இதில் பிரபு தேவர் ஜெயந்தி விழாவிலேயே பங்கேற்கவில்லை.
இதனால் தேவர் சமூக அமைப்புகள் வேறு வழியின்றி அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாரிடம் சாஃப்ட் டோன் எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. இதன் மூலமாக தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் சமூக அமைப்புகளுடன் நிர்மல்குமாரும் நெருக்கம் காட்ட தொடங்கி இருக்கிறார். இதன் வாயிலாக தென் மாவட்டத்தின் முக்கிய பவர் செண்டராகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.



Click it and Unblock the Notifications
