Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வில்லியம்சன் செய்த அவமரியாதை.. விடுவாரா தோனி.. மொத்தமா கொடுத்த பதிலடி.. கிளம்பிய ஹெலிகாப்டர் சிக்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான நேற்றைய ஐபிஎல் போட்டியை தோனி ரசிகர்கள் எளிதாக மறந்துவிட முடியாது.

Dhoni finishes it off in style என்ற அந்த புகழ்பெற்ற வார்த்தை மீண்டும் மீண்டும் நேற்று அவர்கள் காதுகளில் எதிரொலித்தது. இதற்கு காரணம் வின்டேஜ் தோனி போல, வெற்றிக்கான ரன்னை இமாலய சிக்சர் அடித்து எட்ட வைத்தார் பினிஷர் தோனி.

சார்ஜாவில் நடந்த அந்த போட்டியில், முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது.

பந்து வீச்சு சூப்பர்

பந்து வீச்சு சூப்பர்

சிஎஸ்கே அணி சார்பில் அசல் ஹசில்வுட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிராவோ இரண்டு விக்கெட்டுகள், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட், எடுத்தனர். சார்ஜா மைதானத்தில் பந்துகள் சற்று மெதுவாக வந்ததால் ரன் குவிப்பது சிரமமாக இருந்தது. அதையும் மீறி சிஎஸ்கே துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வார்ட் மற்றும் டுபிளசிஸ் சிறப்பான துவக்கம் கொடுத்தனர்.

விறுவிறுப்பு

விறுவிறுப்பு

இரண்டு பேரும் தலா 40 ரன்களுக்கு மேல் எடுத்து அவுட் ஆகினர். இருப்பினும் மொயின் அலி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது. 17வது ஓவர் முடிவில், 18 பந்துகளில் 22 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை இருந்தது. அம்பத்தி ராயுடு வை தொடர்ந்து கேப்டன் மகேந்திர சிங் தோனி களத்துக்கு வந்திருந்தார். கடந்த சில சீசன்களில் தோனி பழைய ஆட்ட திறனுடன் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். நடப்பு ஐபிஎல் சீசனில் தோனி மிக மிகக் குறைவாகத்தான் ரன்களை எடுத்தார். 10 போட்டிகளில் 50க்கும் மேற்பட்ட ரன்களை மட்டும்தான் அவர் எடுத்திருந்தார்.

தோனிக்கு கொடுத்த நெருக்கடி

தோனிக்கு கொடுத்த நெருக்கடி

இதையெல்லாம் மனதில் வைத்து தானோ என்னவோ தெரியவில்லை, சித்தார்த் கவுல் வீசிய 18வது ஓவரில் அதிக பீஃல்டர்களை முதல் ரிங்கிற்கு உள்ளே வைத்தார் கேப்டன் வில்லியம்சன். அவரும் மிதமான வேகத்தில் சரியான அளவில் பந்தை வீசினார். இதனால் தோனி ரன் எடுக்க முடியவில்லை. 2வது பந்து, 3வது பந்துகள் டாட் ஆகின. 4வது பந்தை தட்டி விட்டு ஓட முயன்றபோது ஜேசன் ராய் கைகளில் பட்டு மிஸ் கேட்ச் ஆனது. அதில் சிங்கிள் கிடைத்தது.

உள்ளே ஃபீல்டர்கள்

உள்ளே ஃபீல்டர்கள்

தோனி பேட்டிங் ஆரம்பித்ததுமே சிங்கிள் ஓடி மறுமுனையில் இருக்கும் அம்பத்தி ராயுடு வுக்கு பேட்டிங் வாய்ப்பு வழங்குவது திட்டமாக இருந்தது. இதை ஹைதராபாத் அணி கேப்டனும் சரியாகப் புரிந்துகொண்டு ரன்கள் ஓட விடாமல் உள்ளே பீஃல்டர்களை நிறுத்தினார். உலகின் தலைசிறந்த அதிரடி ஆட்டக்காரராக ஒரு காலகட்டத்தில் விளங்கிய தோனிக்கு சிங்கிள் ஓடுவதை தடுக்க ஃபீல்டர்களை நிறுத்துவது ஒருவகையில் அவமரியாதை தான். ஆனால் தோனி இப்போது இருக்கும் ஃபார்முக்கு, இது போதும் என்று நினைத்து சிங்கிள் ஓட விடாமல் தடுத்தது அம்பத்தி ராயுடுவை இந்த பக்கம் வர விடாமல் பார்ப்பது மட்டுமே கேப்டனாக வில்லியம்சன் மனதில் ஓடியுள்ளது.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

இவ்வாறு பீஃல்டர்கள் செட் செய்யப்பட்டது சிஎஸ்கே ரசிகர்களுக்கு சற்று வருத்தம் தான். ஆனால் அதே சித்தார்த் கவுல்தான் 20வது ஓவரை வீசுவதற்கு வந்தார். கடைசி ஓவரில் மூன்று ரன்கள் தேவை என்ற பரபரப்பான நிலைமை அப்போது இருந்தது. சித்தார்த் வீசிய முதல் பந்தை அம்பத்தி ராயுடு எதிர்கொண்டார். அதில் ரன் வரவில்லை. இரண்டாவது பந்தை ஆப் சைட் அடித்தார் ராயுடு. ஒரு ரன் கிடைத்தது. இதனால் 4 பந்துகளில் 2 ரன் அடிக்க வேண்டிய நிலைமை சிஎஸ்கே அணிக்கு ஏற்பட்டது.

தி கிங் இஸ் பேக்

தி கிங் இஸ் பேக்

மூன்றாவது பந்தை தோனி சந்தித்தார். ஆனால் மிட் விக்கெட் திசையில் அவர் அடித்த பந்து சென்று ஒரு ரன்னும் ஓட முடியாமல் போனது. தோனி இப்படியே பந்துகளை சந்தித்து ரன் அடிக்க முடியாமல் சிஎஸ்கே அணி தோற்கும் என்று ஹைதராபாத் அணி வீரர்கள் உற்சாகமாக இருந்தனர். ஆனால் ஓவர் தி விகெட் ஓடி வந்து பந்து போட்டு வந்த சித்தார்த் கவுல், ரவுண்ட் தி விக்கெட்டாக ஓடி வந்து தோனி கால்களுக்கு அருகே.. கிட்டத்தட்ட யார்க்கர் மாதிரி ஒரு பந்தை வீசினார். அவ்வளவுதான் தோனி பேட்டிலிருந்து விருட்டென்று புறப்பட்டது அந்த இமாலய சிக்சர். லாங் ஆன் திசையில் பறந்த அந்த பந்து கூட்டத்துக்கு நடுவே சென்று விழுந்தது. மொத்த மைதானமும் ஆர்ப்பரித்தது. தோனி மனைவி, மகள், என அத்தனை பேரும் எழுந்து நின்று உற்சாகத்தில் துள்ளி குதித்து ஆடினர். தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களும் கூட.. சிங்கம் களமிறங்கிடுச்சிடோய்.. என்று கூறி ஆட்டம் போட்டனர். எந்த பந்துவீச்சாளரின் ஓவரில் ஃபீல்டர்களை உள்ளே வைத்து ரன் ஓட முடியாமல் தடுக்கப்பட்டாரோ, அதே பந்துவீச்சாளர்கள் ஓவரில் தனது பழைய பாணியிலான இமாலய சிக்சரை பறக்க விட்டு பதிலடி கொடுத்தார் தோனி என்று ரசிகர்கள் ஆரவாரமாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிந்தனர். தோனி அடித்த அந்த ஒற்றை சிக்ஸர், அணியின் துவக்க வீரர்கள் கெய்வார்ட், டுப்ளசிஸ் ஆகியோரின் ஆட்டத்தை கூட ஒரு நிமிடத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் மறக்கடித்து விட்டது. அந்த அளவுக்கு கண் கொள்ளாகாட்சியாக இருந்தது அந்த ஷாட். இதுதான் தோனி.. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.. எதிரணிகளே நாங்கள் வந்து விட்டோம்.. உங்கள் வாலை சுருட்டி கொள்ளுங்கள்.. தி கிங் இஸ் பேக்.. என்று ஆரவாரிக்கிறார்கள் சென்னை சூப்பர் சிங்கங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+