திருமாவிற்கு தெரியாமல் ஆதவ் பேச வாய்ப்பே இல்லை.. ஸ்டாலினுக்கு உதயநிதி அனுப்பிய மெசேஜ்.. பரபரப்பு
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி குறித்து விடுதலை சிறுத்தைகளின் ஆதவ் அர்ஜுன், எதிர்மறையாக பேட்டியளித்த விசயம், உதயநிதியை மிகவும் கடுபாக்கிவிட்டது. இதனால் உதயநிதி ஸ்டாலின் தரப்பு அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆக போகும் டாப்பிக்தான் தமிழக அரசியலில் ஹாட் டாப்பிக். கடந்த வாரம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆக போகிறார்.. அவரை துணை முதல்வராக அறிவிக்க போகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.

ஸ்டாலின் ஆலோசனை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்குவது தொடர்பாக மூத்த தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் ஆலோசனை நடத்தி உள்ளார். துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் பங்கேற்று உள்ளனர்.
அதன்படி.. இந்த மீட்டிங்கில் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்குவது தொடர்பாக மூத்த தலைவர்கள் எல்லோரும் சப்போர்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார். பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார்.
உதயநிதியின் துணை முதல்வர் அறிவிப்பு ஸ்டாலினின் டெல்லி பயணத்திற்கு பிறகு எந்த நேரமும் வெளியாகலாம் என்கிறார்கள். இப்படிப்பட்ட நேரத்தில்தான் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி குறித்து விடுதலை சிறுத்தைகளின் ஆதவ் அர்ஜுன், எதிர்மறையாக பேட்டியளித்த விசயம், உதயநிதியை மிகவும் கடுபாக்கிவிட்டது.
உதயநிதியின் ஆதரவு அமைச்சர்கள், நெருங்கிய மா.செ. க்கள் பலரும், இது மோசமான பேட்டி ; முளையிலேயே கிள்ளி எறியுங்கள். இல்லையெனில் உங்களின் இமேஜை கேள்விக்குறியாக்குவார்கள். இது பேட்டி என்கிற வகையில் ஆதவ் அர்ஜுன் போன்றவர்களின் கருத்தை கண்டிக்காமல் கடந்து போனால், ஆளாளுக்கு விமர்சனம் செய்வார்கள்.
இது நல்லதிற்கில்லை என்று உதயநிதியிடம் வலியுறுத்தினர். இதனையடுத்து, முதல்வர் ஸ்டாலினிடம் இதுபற்றி பேசியிருக்கிறார் உதயநிதி. அதேசமயம், உதயநிதி மீது அன்பு கொண்ட அமைச்சர்களும், ஸ்டாலினிடம் இது பற்றி விவாதித் திருக்கிறார்கள். குறிப்பாக, திருமாவளவனுக்கு தெரியாமல் அந்த பையன் (ஆதவ்) அப்படி பேட்டிக்கொடுக்க வாய்ப்பில்லை.
எப்படி பேசினார்: திருமாவளவனுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் பாலமாக இருப்பது அந்த பையன் தான் என்று விவரித்திருக்கிறார்கள். இதனையடுத்துதான், தலைமையின் உத்தரவில் ஆ.ராசா மூலம் கண்டன அறிக்கை வெளிவந்தது. தவிர, நீங்கள் இப்படியே விமர்சித்துக் கொண்டிருந்தால் கூட்டணியில் நீடிப்பது கஷ்டம். யோசித்துக் கொள்ளுங்கள் என்று திருமாவளவனுக்கும் திமுக தலைமை தகவல் தெரிவித்து விட்டது. இதனால் ஆடிப்போனார் திருமா.
விசயத்தைக் கேள்விப் பட்டு சிறுத்தைகளின் எம்.எல்.ஏ.க்களும், முக்கிய நிர்வாகிகளும் டென்சனாகி விட்டனர். ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திருமாவிடம் பேசிய அவர்கள், பொது வெளியிலும் ஆதவ்வுக்கு எதிராக பேசி வருகிறார்கள். ஆதவ் மீது நடவடிக்கை எடுங்கள் என்று திருமாவிடம் சொல்லுமளவுக்கு சிறுத்தைகள் கட்சியில் ஆதவ்வுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
பரபரப்பு தொற்றியது: இந்த நிலையில், திமுகவின் கோபத்தையும், சிறுத்தைகளின் எதிர்ப்பையும் சமாளிக்கும் யுக்தியை ஆலோசித்து வருகிறாராம் திருமா. இது குறித்து ஆதவ்விடமும் விவாதித்துள்ளார். வருத்தம் தெரிவிக்கச் சொல்லி ஆதவ்விடம் வலியுறுத்தப்படுகிறது. ஆனால், அதற்கு அவர் மறுத்து வருவதாக சிறுத்தைகள் வட்டாரத்தில் பேசப் படுகிறது. சிறுத்தைகள் கட்சி மற்றும் திருமாவின் பெரும்பாலான செலவுகளை ஆதவ் கவனித்துக்கொள்வதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் தயங்கி வருகிறது கட்சித் தலைமை என்றும் சொல்கின்றனர்.
-
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
INDIA கூட்டணி கூட்டத்தில்.. காங்கிரஸுக்கு எதிராக பேசிய விசிக! தன்னிச்சையாக செயல்படுவதாக கண்டனம் -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
தவெக ஆட்சியில்.. ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படுமா? வன்னி அரசு விளக்கம்! -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி












Click it and Unblock the Notifications