"கை மாறிய" மனைவி.. "அது" பக்கத்திலேயே தூங்கி கொண்டிருந்த சங்கீதா.. வெறும் பிளேடுதானாம்.. கிலியில் கிண்டி

மனைவியை அபகரித்த நபரை பிளேடால் குத்தி கிழித்து கொன்றுள்ளார் முதல் கணவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தன் மனைவியை நண்பன் அபகரித்ததால், ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற கணவர் செய்த காரியம் சென்னையில் அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது.

செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்.. 30 வயதாகிறது.. மனைவி பெயர் சந்தியா.. 29 வயதாகிறது.. இவர்கள் வசதி இல்லாதவர்கள்.. குப்பை பொறுக்கும் தொழில் செய்து வருகிறார்கள்..

கிண்டி ஐந்து பர்லாங் சாலையில் உள்ள பஸ் ஸ்டாண்டில்தான், இவர்கள் சில மாதங்களாக தங்கி உள்ளனர்... அப்படித்தான், நேற்று முன்தினம் இரவு, சாப்பிட்டுவிட்டு, பஸ் ஸ்டாண்டில் ஒன்றாக தூங்கியுள்ளனர்.

 பஸ் ஸ்டாண்ட்

பஸ் ஸ்டாண்ட்

இந்நிலையில், நேற்று காலை கார்த்திக், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதைப்பார்த்து, அந்த வழியாக சென்ற பெண் ஒருவர், தூங்கிக் கொண்டு இருந்த சந்தியாவை தட்டி எழுப்பி, "அங்கே பார், உன் புருஷனை, ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறார்" என்று சொல்லி உள்ளார்.. தூக்க கலக்கத்தில் அலறி எழுந்த சந்தியா, கணவன் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி கதறினார்.. அந்த சத்தத்தை கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, கிண்டி போலீசாருக்கும் தகவல் தந்தனர்.. போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கார்த்திக் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..

 சந்தியா சந்தியா

சந்தியா சந்தியா

இதுகுறித்து, வழக்கு பதிவு செய்து, சந்தியாவிடமும் விசாரணை நடத்தினர்... அப்போதுதான், சந்தியாவுக்கு கார்த்திக் 2வது கணவர் என்பது தெரியவந்தது. முதல் கணவர் பெயர் பாண்டியன்.. 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.. சந்தியா அவருடன்தான் வாழ்ந்து வந்துள்ளார்.. பாண்டியனின் நண்பர் கார்த்திக்.. பாண்டியனை அடிக்கடி சந்தித்து பேச கார்த்திக் வந்துபோவாராம்.. அப்போதுதான், சந்தியாவுக்கு கார்த்திக்குடன் லிங்க் ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து, 3 மாதங்களுக்கு முன்பு, பாண்டியனை விட்டுவிட்டு, கார்த்திக்குடன் ஒன்றுசேர்ந்துவிட்டார் சந்தியா..

பிளேடுகள்

பிளேடுகள்

இருவரும் இந்த 3 மாத காலமாகவே ஒன்றாக குடும்பம் நடத்தி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் சந்தியாவின் முதல் கணவனான பாண்டியனை வலைவீசி தேடி வந்தனர்.. அப்போது அவர் தேனாம்பேட்டை பகுதியில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைக்கவும், விரைந்து சென்ற போலீசார், பாண்டியனை மடக்கி பிடித்து ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர்... அப்போதுதான், கார்த்திகை கொன்றதை பாண்டியன் ஒப்புக் கொண்டார்.. தன் மனைவியை கார்த்திக் அபகரித்து சென்றதால்தான், ஆத்திரத்தில் இருந்தாராம் பாண்டியன்..

 பஸ் ஸ்டாண்டு

பஸ் ஸ்டாண்டு

இவர்களை பழிவாங்குவதற்காக எங்கெங்கோ தேடி அலைந்துள்ளார்.. இந்த ஜோடிக்கு வீடு என்று எதுவும் இல்லாததால், இவர்களை தேடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கடைசியில், கிண்டி ஐந்து பர்லாங் ரோடு பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்டில் இவர்கள் தங்கியிருப்பதை கண்டுபிடித்துவிட்டார்.. அதற்கு பிறகுதான் கொலை செய்ய நேற்று முன்தினம் இரவு வந்துள்ளார்.. சந்தியாவுடன் தூங்கிக் கொண்டிருந்த கார்த்திக்கை, அங்கேயே கொடூரமாக கொன்றுவிட்டு, பிறகு தப்பிவிட்டதாக வாக்குமூலம் தந்துள்ளார் பாண்டியன்.. கைதான பாண்டியனிடம் தொடர் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

 ஒன்லி பிளேடு

ஒன்லி பிளேடு

இந்த கொலையில் பாண்டியனின் நண்பர் ஒருவர் உதவினாராம்.. அவரையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.. இவர்கள் 2 பேருமே, பஸ் ஸ்டாண்டுக்கு வந்து, வெறும் பிளாடால் கிழித்து கொன்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.. உண்மைதன்மையை போலீசார் கண்டுபிடித்து வருகிறார்கள்.. வழக்கமாக ஆத்திரத்தில், சம்பந்தப்பட்டவ்ரகளை அரிவாளால் வெட்டுவார்கள்.. இப்படி சாகும்வரை பிளேடால் மட்டுமே கிழித்துள்ளார்கள் என்றால், கார்த்திக் வலியால் அலறாமல் இருந்திருப்பாரா? அப்படியே அலறினாலும் தூங்கி கொண்டிருந்த சங்கீதாவுக்கு கேட்டிருக்காதா? என்று தெரியவில்லை.. ஆனால், நண்பனை பாண்டியன் பழிதீர்த்துவிட்டாலும், கட்டிய கணவரை விட்டு, பிரிந்து வந்த மனைவிக்கும் இந்த துரோகத்தில் பங்கு உள்ளதுதானே??

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+