என்ன பெரிய குஜராத் மாடல்? ‘திராவிட மாடல்’ தெரியுமா?.. இப்பதான் இதுவே.. அன்றே அசத்திய திமுக, அதிமுக!
சென்னை : குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி கொடுத்திருக்கும் வாக்குறுதிகள் பல, ஏற்கனவே தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் திட்டங்கள். குஜராத் மாடல் என்ற கோஷம் பாஜகவால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், திராவிடக் கட்சிகள் பல ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைப்படுத்திய திட்டங்கள் தான் இப்போது அங்கு தேர்தல் வாக்குறுதிகளிலேயே இடம்பெற்றிருக்கின்றன.
குஜராத் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அதிரடியாக 10 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே.
காங்கிரஸ் அளித்துள்ள 10 வாக்குறுதிகளில் சில ஏற்கனவே நம் தமிழ்நாட்டில் திட்டங்களாக நடைமுறையில் இருந்து வருகின்றன. குஜராத் மாடலை திராவிட மாடல் எவ்வளவு முன்னோக்கி இருக்கிறது என்பதற்கு இதுவே சான்று என கருத்துகள் எழுந்து வருகின்றன.

குஜராத் தேர்தல் - மும்முனை மோதல்
182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 என இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. குஜராத் தேர்தலில் பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் தொடர்ச்சியாக 5 முறை ஆட்சியில் இருந்து வரும் பாஜக, ஆறாவது முறையாகஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது. பாஜக கோட்டையாக இருந்து வரும் குஜராத்தில் அக்கட்சியை ஆட்டம் காணச் செய்ய வேண்டும் என களமிறங்கியுள்ளது காங்கிரஸ். இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சியும் குஜராத்தை குறிவைத்துள்ளது.

காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகள்
குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தால், 500 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும், 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். அனைவருக்கும் மருத்துவம் கிடைக்க ரூ.10 லட்சம் மானியம் வழங்கப்படும், 3 லட்சம் ரூபாய் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும், கொரோனாவால் உயிரிழந்த 3 லட்சம் பேருக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும், கூட்டுறவு பால் பண்ணைகளில் பால் ஒரு லிட்டருக்கு ரூ. 5 மானியம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே.

தமிழ்நாட்டில் ஏற்கனவே
2022 குஜராத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் அறிவித்துள்ள வாக்குறுதிகளில் பல தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்றன. அதிலும் விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட திட்டங்கள் 2006ஆம் ஆண்டே தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டவை. 100 யூனிட் வரை இலவச மின்சாரம் என்ற திட்டம் இங்கு 2016ஆம் ஆண்டு முதலே நடைமுறையில் இருந்து வருகிறது. அனைவருக்கும் மருத்துவம் அளிக்க மானியம் திட்டம் இங்கு, மருத்துவக் காப்பீட்டு திட்டமாக 2009 முதல் தற்போதும் தொடர்ந்து வருகிறது.

இலவச மின்சாரம்
2016 சட்டப்பேரவை தேர்தலின்போது, வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா அறிவித்திருந்தார். தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் முதல்வராக பதவியேற்ற அன்றே, 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டத்தை செயல்படுத்துவதற்கான கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார். அந்தத் திட்டம் உடனடியாக செயல்பாட்டுக்கு வந்தது. கடந்த ஆண்டு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகும் இந்த 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் தொடர்கிறது.

விவசாய கடன் தள்ளுபடி
2006ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார் திமுக தலைவர் கருணாநிதி. அதன்படி வெற்றி பெற்று ஆட்சி அமைந்ததுமே, சுமார் 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தார். இதன்மூலம் பல லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெற்றனர். கடந்த ஆண்டு ஸ்டாலின் முதல்வரான பிறகு கூட்டுறவு நகைக்கடன்கள் 5 சவரன் வரை வைத்து பெற்றவர்களின் கடன் ரத்து செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மருத்துவ மானியம்
அதேபோல, குஜராத்தில் மருத்துவ சிகிச்சைக்கு மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது போலவே, தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தனியார் மருத்துவமனைகளிலும் கட்டணமில்லாமல் உயர் மருத்துவ சிகிச்சை வழங்கும் வகையில் 2009ஆம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர், அதிமுக ஆட்சியில் இந்தத் திட்டம், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் என்று மாற்றப்பட்டு, தற்போதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி ஆண்டு வருமானம் ரூ. 1.20 லட்சம் வரை உள்ள குடும்பத்தினர் ரூ. 5 லட்சம் வரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.

இப்போதுதான் வாக்குறுதி
கடந்த ஆண்டு திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் ஆவின் பாலின் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்ற ஆணையில் கையெழுத்திட்டார். உடனே பால் விலை குறைப்பு அமலுக்கு வந்தது. அதே போலவே, குஜராத்தில் காங்கிரஸ் கட்சி பால் விலை ரூ. 5 மானியத்தில் வழங்கப்படும் என தற்போது அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திராவிட மாடல்
இவ்வாறாக 17 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டமெல்லாம் இப்போதுதான் குஜராத்தில் வாக்குறுதி எனும் நிலைக்கே வந்திருக்கிறது. இதுதான் திமுக சொல்லும் திராவிட மாடலை விட பாஜக கோஷமிடும் குஜராத் மாடல் எவ்வளவு பின்தங்கி இருக்கிறது என்பதற்கான சான்று என்று திமுகவினர் பேசத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே மருத்துவ வசதிகள், சுகாதாரக் கட்டமைப்புகள், கல்வி வளர்ச்சி ஆகியவற்றை ஒப்பிட்டு குஜராத்தை திமுகவினர் விமர்சித்து வரும் நிலையில், குஜராத் தேர்தல் இன்னும் சூட்டைக் கிளப்பியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications