ரயில் ஒரு கிமீ தூரம் செல்ல எவ்வளவு செலவு ஆகும்? எத்தனை யூனிட் தேவைப்படும்? இதோ விவரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் பலருக்கும் ரயில் பயணத்தை அனுபவித்துக்கொண்டு இருக்கும் நேரத்தில் மனதில் சில கேள்விகள் எழும். முழுக்க மின்சாரத்தில் ஓடுகிறது.. அதிலும் இத்தனை பெட்டிகளை இழுத்து செல்கிறது. இந்த ரயில் ஒரு கிலோ மீட்டர் ஓட வேண்டும் என்றால் எவ்வளவு மின்சாரம் இழுக்கும் என நினைத்து இருப்போம்.. நம் மனதில் எழும் சந்தேகங்களுக்கு இங்கு விடை காணலாம்.

ரயில் ஒரு கிலோ மீட்டர் இயங்குவதற்கு எவ்வளவு யூனிட் கரண்ட் தேவைப்படும். எவ்வளவு செலவு ஆகும்? என்பது குறித்தும், டீசல் என்ஜின் என்றால் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு எவ்வளவு டீசல் குடிக்கும் என்ற விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.

Train diesel engine travel trending


மின்சார என்ஜின், டீசல் என்ஜின்

இந்தியாவில் ஓடக்கூடிய ரயில்கள் பெரும்பாலானாவை தற்பொது மின்சார லோகோ என்ஜின்களாக மாற்றப்பட்டு மின்சாரத்தில் இயக்கப்படுகின்றன. அடந்த வனப்பகுதிகள், தொலைதூர பகுதிகள் சிலவற்றில்தான் இன்னமும் டீசலில் இயங்கும் என்ஜின்களை கொண்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பல வழித்தடங்களிலும் மின்சார ரயில் வழித்தடமாக மாற்றும் பணிகளை ரயில்வே மேற்கொண்டு வருகிறது.

சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நெல்லை செல்லும் போது 2015-க்கு முன்பாக செல்லும் பொது பயணிகள் கவனித்து இருக்க வாய்ப்பு உள்ளது. திருச்சி வரை எலக்ட்ரிக் லோகோவுடன் செல்லும் ரயில்கள் திருச்சியில் டீசல் லோகோவாக மாற்றப்பட்டு அங்கிருந்து இயக்கப்படும். 2015 ஆம் ஆண்டு முதல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி, திருவனந்தபுரம் வரையிலும் மின்சார என்ஜின்களை கொண்டே ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஒரு கிமீ செல்ல எத்தனை யூனிட்ஸ் தேவை

சரி இங்கே விஷயத்திற்கு வருவோம். மின்சார என்ஜின்களை கொண்ட ரயில்களை பொறுத்தவரை ஒரு கிலோ மீட்டர் செல்ல 20 யூனிட்ஸ்கள் தேவைப்படுகிறதாம். கடந்த ஆண்டு நிலவரப்படி, ஆஜ்மீர் டிவிஷன் ரயில்வேயில் ரயில்களுக்கு விநியோகிக்கப்படும் மின்சாரம் ஒரு யூனிட்டின் விலை ரூ.6.50 ஆக இருந்துள்ளது.

இதன்படி பார்த்தால் ரயில்கள் ஒரு கிலோ மீட்டர் செல்ல வேண்டும் என்றால் 130 ரூபாய் செலவு ஆகும். தற்போதைய நிலவரப்படி இந்த தொகை சற்று கூட இருக்கலாம். தோராயமாக ஒரு கிலோ மீட்டர் ரயில் இயங்க 150 ரூபாய் ஆகும் என கருதலாம். இது வெறும் மின்சார செலவு ஆகும். அதுபோக இதர செலவுகளும் உள்ளன. அவற்றை சேர்த்தால் இந்த தொகை இன்னும் கொஞ்சம் கூடுதால இருக்கும்.

டீசல் ரயிலுக்கு எவ்வளவு செலவு ஆகும்?

மின்சார ரயிலுக்கு ஒகே, டீசல் ரயில்கள் என்றால் எவ்வளவு மைலேஜ் தரும் என நினைக்கலாம். டீசல் ரயில்களை பொறுத்தவரை ஒரு கிலோ மீட்டர் இயங்க 3.5 லிட்டர் முதல் 4 லிட்டர் வரை தேவைப்படும். இதன்விலை ரூ.350 முதல் 450 வரை ஆகும். டீசல் ரயில்களை விட மின்சார ரயில்கள் தான் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள்ளது. இதனாலேயே தற்போது பெரும்பாலான ரயில்கள் மின்சாரத்தின் மூலமாக இயங்கும் ரயில்களாக மாற்றப்படுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+