அதுமட்டும் நடந்துவிட கூடாது.. ருத்துராஜூக்கு வேண்டுமென்றே ஸ்டிரைக் தர மறுத்தாரா ஜடேஜா? என்ன பின்னணி?
சென்னை: நேற்று சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் வீரர் ருத்துராஜ் 90 ரன்களை கடந்து ஆடிக்கொண்டு இருந்த போது அவருக்கு ஜடேஜா ஸ்டிரைக் கொடுக்க மறுத்ததாக இணையத்தில் கடும் விவாதம் எழுந்துள்ளது. இந்த சம்பவம் சர்ச்சையான நிலையில் இது தொடர்பான உண்மையான விவரம் வெளியாகி இருக்கிறது.
Recommended Video
நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. நேற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே ருத்துராஜ் சதம் காரணமாக 189 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடியது.
ஜெய்ஷ்வால், லீவிஸ், துபே என்று களமிறங்கிய வீரர்கள் எல்லோருமே ராஜஸ்தான் அணியில் சிறப்பாக ஆடினார். இதனால் ராஜஸ்தான் எளிதாக 17.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. சிஎஸ்கேவும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டதால் நேற்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

என்ன நடந்தது
நேற்று போட்டியில் சிஎஸ்கே வீரர் ருத்துராஜ் முதல் 50 ரன்களை மிக மெதுவாக கடந்தார். ஆனால் அதன்பின் இரண்டாவது 50 ஓவர்களை எடுக்க 18 பந்துகள் மட்டுமே எடுத்துக்கொண்டார். இந்த நிலையில் கடைசி மூன்று ஓவர் இருந்த போது ருத்துராஜ் 93 ரன்கள் எடுத்து நான் ஸ்டிரைக் எண்டில் இருந்தார். ஜடேஜா பேட்டிங் செய்து கொண்டு இருந்தார்.

ருத்துராஜ்
ருத்துராஜ் நல்ல பார்மில் இருந்ததால் ஜடேஜா அவருக்கு ஸ்டிரைக் கொடுத்து, அதோடு செஞ்சுரி அடிக்கவும் வழி ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த ஓவர் முழுக்க ஜடேஜா ஸ்டிரைக் எடுத்தார். பல இடங்களில் கஷ்டப்பட்டு இரண்டு ரன்கள் ஓடினார்கள். எங்குமே ஜடேஜா ஒரு ரன் ஓடவில்லை. இதனால் அந்த ஓவரில் ருத்துராஜ் பேட்டிங் செய்யவில்லை.

மீண்டும்
அதன்பின் மீண்டும் 19வது ஓவரில் இதேபோல் ஜடேஜாதான் 5வது பந்து வரை ஸ்டிரைக் எடுத்தார். 6வது பந்தில்தான் ருத்துராஜ் 2 ரன்கள் அடித்து 95 ரன்கள் எடுத்தார். இதன்பின் கடைசி ஓவரில் ருத்துராஜ் 5 ரன்கள் எடுத்தால் சதம் என்று இருந்தது. ஆனால் ஜடேஜாவோ சிக்ஸ், பவுண்டரி என்று விளாசிக்கொண்டு இருந்தார். தனிப்பட்ட ஸ்கோர் தேவையில்லை, டீம் ஸ்கோர்தான் தேவை என்று ஜடேஜா விளாசிக்கொண்டு இருந்தார்.

ஜடேஜா
இதனால் ருத்துராஜ் எங்கே சதம் அடிக்க முடியாமல் போய் விடுமோ என்ற அச்சம் நிலவியது. ஆனால் கடைசியில் ஒரு வழியாக 5வது பந்திற்கு ருத்துராஜ் ஸ்டிரைக் எடுத்தார். பின்னர் 6வது பந்தில் சிக்ஸ் அடித்து ருத்துராஜ் சதம் அடித்தார். ருத்துராஜ் 90 ரன்களை கடந்து ஆடிக்கொண்டு இருந்த போது அவருக்கு ஜடேஜா ஸ்டிரைக் கொடுக்க மறுத்ததாக இணையத்தில் கடும் விவாதம் எழுந்துள்ளது. இதில் உண்மையில் என்ன நடந்தது என்ற விவரம் வெளியாகி உள்ளது.

அழைத்தது யார்?
அதன்படி 90 ரன்களை கடந்த பின் ருத்துராஜ்தான் ஜடேஜாவை இரண்டு ரன் ஓட அழைத்தார் என்று கூறப்படுகிறது. ஜடேஜா மட்டும் இரண்டு ரன்களை ஓடி ஸ்டிரைக் எடுக்கவில்லை. மாறாக ருத்துராஜூம் விருப்பப்பட்ட இரண்டு ரன் ஓடினார். சதம் எடுப்பது முக்கியம் கிடையாது என்பதால்தான் அவர் இப்படி ஓடினார். ஜடேஜா ருத்துராஜை வேண்டும் என்றே இரண்டு ரன் ஓட அழைக்கவில்லை. இரண்டு பேரும் சேர்ந்துதான் ஒரு ரன் ஓட கூடிய சூழ்நிலையிலும் இரண்டு ரன் ஓடினார்கள் என்று கூறப்படுகிறது.

பெருந்தன்மை!
அதாவது ஜடேஜா வேண்டும் என்றே எதையும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. கடைசி இரண்டு ஓவரை உன்னிப்பாக கவனித்தவர்கள், ருத்துராஜ்தான் பல இடங்களில் இரண்டு ரன் ஓட அழைத்தார் என்பதை எளிதாக கூறிவிட முடியும். 170 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என்பதால் இப்படி இரண்டு பேருமே மாறி மாறி அதிரடி காட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சீசனில் ராஜஸ்தானிடம் சிஎஸ்கே இதேபோன்ற போட்டி ஒன்றில் தோல்வி அடைந்தது. அப்போது ரியான் பராக் சேஸிங்கில் சிஎஸ்கேவிற்கு எதிராக அதிரடி காட்டினார்.

அப்படி நடக்க கூடாது?
அப்படி மட்டும் மீண்டும் நடந்து விட கூடாது என்பதால் இந்த முறை சிஎஸ்கே அதிக ரன்களை அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அதோடு பிட்ச் பேட்டிங் செய்ய சாதமாக இருந்தது. இதனால் அதிக ஸ்கோர் செய்ய வேண்டும் என்பதில் சிஎஸ்கே கவனமாக இருந்தது. இதனால்தான் நேற்று ருத்துராஜ் ஜடேஜா இருவருமே கடைசி கட்டத்தில் அணியின் ரன்களை உயர்த்துவதில் கவனம் செலுத்தினார்கள். இதைத்தான் ருத்துராஜ் பேட்டியிலும் குறிப்பிட்டு இருந்தார்.

போதவில்லை
எனக்கு 90 ரன்களை கடந்த பின் 100 அடிப்பேனா என்ற டென்சன் இல்லை. ஏனென்றால் எனக்கு அணி ரன்கள்தான் முக்கியம். தனிப்பட்ட ரன்கள் முக்கியம் இல்லை. 160 எதிர்பார்த்தோம், பின்னர் 180 எதிர்பார்த்தோம், 190 வரை எடுத்தது மகிழ்ச்சி என்று ருத்துராஜ் பெருந்தன்மையாக சொல்லி இருந்தார்.

பேட்டிங் பிட்ச்
பேட்டிங் பிட்ச் என்பதால் அணியின் ஸ்கோரை உயர்த்தவே இருவரும் அதிரடியாக கடைசியில் ஆடினார்கள். இதனால் ஜடேஜா மீது தவறு இல்லை என்றே கூறப்படுகிறது. ஆனால் நேற்று பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்ததால் 189 ரன்களும் கூட சிஎஸ்கேவிற்கு டிபன்ட செய்ய போதுமானதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications