குறுக்கே வந்து ஆட்டத்தை கலைக்கும் சீமான்.. 4ம் இடத்துக்கு போன அதிமுக? எடப்பாடியை அதிர வைத்த கணிப்பு
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் சீமான் 3ம் இடத்திற்கு வருவார்.. அதிமுக நான்காம் இடத்திற்கு தள்ளப்படும் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கண்டித்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் பாமக, தேமுதிக இரண்டு கட்சிகளும் பாஜக கூட்டணிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதிமுக கூட்டணிக்கு வர முடிவு செய்துள்ளன என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கூட்டணி உறுதி: அதன்படி பாமக 6 சீட். தேமுதிக 3 சீட் என்று இறங்கி வர முடிவு செய்துள்ளன. இரண்டு ராஜ்யசபா இடங்கள் இரண்டு கட்சிக்கும் தலா 1 என்று பிரித்து கொடுக்கப்பட உள்ளன. இது போக பணம் கேட்டதில் நான்கில் ஒரு பகுதி பிரித்து கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதாம்.
இப்படிப்பட்ட நிலையில்தான் அவர் அளித்துள்ள பேட்டியில், அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ள சரிவால் சீமான் வேகமாக முன்னேறி வருகிறார். சீமான் தொடர்ந்து தனியாக நிற்கிறார். வெற்றியோ தோல்வியோ அவர் தனியாக நிற்கிறார். அவரின் அரசியல் வெல்வதால்தான் 3 சதவிகித வாக்கு வைத்து இருந்தவர் தற்போது 7 சதவிகித வாக்குகளை பெறும் அளவிற்கு முன்னேறி உள்ளார். வன்னியர் இடங்களில் கூட சீமானுக்கு சாதகமான நிலை உள்ளது.
அதிமுக - பாமக கூட்டணியில் பாமக இல்லாத இடங்களில் சீமான் வருவார். அங்கே வன்னியர் வாக்குகளை நாம் தமிழர் பலம் அடையும். இடம் கொடுக்கும் பேர அரசியலுக்கு சீமான் ஆப்பு வைக்க போகிறார். ஏற்கனவே அவர் இப்படி செய்து இருக்கிறார். நாமக்கல், திருப்பூர் போன்ற இடங்களில் வன்னியர் வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலம் சீமான் பல இடங்களை எடுப்பார்.
சீமான் தானே தனித்து நிற்கிறார். அவர்தானே தொடர்ந்து பேசுகிறார். அவருக்கு ஆதரவு கொடுப்போம் என்று நினைப்பார்கள். பாமக நிற்கும் இடங்களில் கூட சீமான் நாம் தமிழர் வாக்குகளை பிரிக்கும். கொங்கு மண்டலத்தில் கூட அதிமுக பெரிதாக இருக்காது. அதிமுகவின் சில வாக்குகள் கடந்த முறை போல அதிமுகவிற்கு கூட செல்லும் வாய்ப்புகள் உள்ளன.
பாமக இல்லாமல் அதிமுகவால் 3ம் இடத்திற்கு கூட வருவது கஷ்டம். பாமகவிற்கு 10 சீட் கொடுக்கவேண்டும். இல்லையென்றால் 3ம் இடத்திற்கு கூட வர முடியாது. நாம் தமிழர் ஏற்கனவே வன்னியர் வாக்குகளை பிரிக்கும். அதனால் அதிமுகவால் 3ம் இடத்திற்கு கூட வருவது கஷ்டம்.
வன்னியர்கள் காரணமாக எடப்பாடிக்கு வாக்குகள் சரியும் வாய்ப்புகள் உள்ளன. பாமக அதிக இடங்களை கேட்க வேண்டும். கேட்கும். அவர்களுக்கு தொடர்ந்து வாக்கு சதவிகிதம் உள்ளது என்று நிரூபித்துள்ளனர். இந்த சதவிகிதங்களை வைத்து இடங்களை கேட்க வேண்டும் என்று பாமக திட்டமிடுகிறது.
பாமக இனிமேல் தமிழ்நாட்டில் வெற்றி கூட்டணியை முடிவு செய்யும் கட்சி அல்ல. அது இரண்டாவது இடத்தை முடிவு செய்யும் கட்சி . 2009 வரைதான் பாமக பலமாக இருந்தது. 2004, 2009 வரை எல்லாம் பாமக வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது. இப்போது வடமாவட்டங்களில் பாமக வெறுமனே இரண்டாம் இடத்தை பிடிப்பதை தீர்மானிக்கும் சக்தியாக மாறி உள்ளது. இதனால் 2024 லோக்சபா தேர்தலில் சீமான் 3ம் இடத்திற்கு வருவார்.. அதிமுக நான்காம் இடத்திற்கு தள்ளப்படும் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கண்டித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications