மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் நம்பரை இணைப்பது கட்டாயம்.. உங்களது சந்தேகங்களுக்கு முழு விளக்கம் இதோ!
சென்னை: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் நம்பரை இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவுறுத்தியதோடு அதற்காக சிறப்பு முகாம்களையும் அமைத்துள்ளது. எனினும் இது தொடர்பாக பலருக்கும் பல்வேறு சந்தேகங்கள் எழுகிறது. இதற்கான முழு தகவல்களை கீழே பார்க்கலாம்.
தமிழகத்தில் மின் இணைப்புடன், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன.

சிறப்பு முகாம்கள்
மின்சார எண்னுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக இன்று முதல் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் இதில் நுகர்வோர்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம் என்றும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. பண்டிகை நாட்கள் தவிர ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?
காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம்களில் ஆதார் எண்ணை இணைக்கலாம். தமிழகம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்து 811 மின்வாரிய மையங்களிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பு முகாம்களில் நுகர்வோர்கள் பலரும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். ஆன்லைனில் ஆதார் எண்ணை இணைக்க மின்சார வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. ஆன்லைனில் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? யாரெல்லாம் இணைக்க வேண்டும் என்பதற்கான முழு விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அதன் விவரத்தை காணலாம்.

நடைமுறைகள் என்னென்ன
ஆதார் எண்ணை ஆன்லைனில் இணைக்க வேண்டும் என்று விரும்புவர்கள் முதலில் https://nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற வெப்சைட்டிற்குள் செல்ல வேண்டும். அந்தப் பக்கத்தில் சென்றவுடன் உங்கள் மின் இணைப்பு எண்ணை பதிவு செய்யவேண்டும். அதன் பிறகு நமது மின் இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும் அந்த ஓடிபியை பதிவிட்ட பிறகு ஆதார் எண் என்று கேட்கப்பட்டிருக்கும் அதில் ஆதார் எண்ணை பதிவிட வெண்டும்.. அடுத்த கட்டத்தில் ஆதார் கார்டின் நகலை இமேஜ் வடிவத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வளவு தான். உங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டதாக குறுந்தகவல் வரும்.

அனைவரும் இணைக்க வேண்டுமா?
வீட்டு மின் இணைப்பு, விவசாயம், குடிசை வீட்டு மின் நுகர்வோர்கள், விசைத்தறி, கைத்தறி, நுகர்வோர்கள் என மானியம் பெறுபவர்கள் அனைவரும் கண்டிப்பாக இணைக்க வேண்டும். தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் இணைப்பது கட்டாயம் இல்லை. பிறகு, நீங்கள்தான் வீட்டின் உரிமையாளரா.. அல்லது வாடகைக்கு இருக்கிறீர்களா.. மின் இணைப்பு யார் பெயரில் உள்ளது என்ற விவரங்கள் கேட்கும். அதில் உங்களுக்கு பொருத்தமான விவரங்களை அளிக்க வேண்டும். அதன்பிறகு மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்ததற்கான ஒரு மெசேஜ் தோன்றும்.

வாடகை வீட்டில் இருப்பவர்கள் ஆதார் எண் இணைத்தால்...
வாடகை வீட்டில் இருப்பவர்கள் தங்கள் இருக்கும் வாடகை வீட்டில் உள்ள மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தால் எந்த மாற்றமும் ஏற்படாது. மின் நுகர்வோர் யார் என்ற விவரத்திற்காக மட்டுமே இந்த விவரம் பெறப்படும். வீட்டின் உரிமையாளர் பெயரில் மட்டுமே மின் இணைப்பு இருக்கும். மின் இணைப்பு எண்ணின் பெயரை வீட்டு உரிமையாளர் மட்டுமே மாற்றம் செய்ய முடியும். வாடகைக்கு வசித்தவர் வேறு வீட்டிற்கு குடி பெயர்ந்து விட்டால் , புதிதாக வருபவர்கள் ஆதார் எண் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருந்தால்...
எத்தனை இணைப்புகள் இருந்தாலும் ஒரே ஆதார் எண்ணை கொடுக்கலாம். இதனால், 100 யூனிட் இலவச மின்சாரம் போன்ற எந்த மானிய சலுகைகளும் நிறுத்தப்படாது. மானியம் பெறுபவர்கள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவுறுத்தியிருக்கிறது. இறந்தவர்களின் பெயரில் இருந்தால் மின் இணைப்பு இருந்தால், மின் இணைப்பு எண்ணை யார் பெயரில் மாற்றம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்களோ..அவர்களது ஆதார் எண்ணை இணைக்கலாம்.

கட்டணத்தை செலுத்த முடியாதா?
ஆதார் எண் இணைக்காவிட்டாலும் மின் கட்டணத்தை செலுத்தலாம் என்று மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், ஆன்லைனில் கட்ட வேண்டும் என்றால் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டு இணைப்பதன் மூலம் விவசாயிகளுக்கான இலவச மின்சார வினியோகத்தில் எந்த பாதிப்பும் கிடையாது. அதுபோக விசைத்தறி, கைத்தறி இணைப்புகளுக்கான இலவச மின்சாரமும் தொடரும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications