ஃபேஷன் டெக்னாலஜி துறையில் ஆர்வமா.. சிறந்த கல்லூரிகள் எவை? வேலைவாய்ப்பு எப்படி?
சென்னை: 12ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் அடுத்த கட்டமாக தங்களுக்கு பிடித்த படிப்புகளில் இணைய ஆர்வத்துடன் தேடி வருகின்றனர். அந்த வகையில் பொறியியல், மருத்துவம் மட்டுமல்லாமல் இளைஞர்கள் மத்தியில் ஃபேஷன் டெக்னாலஜி படிப்பில் இணைய அதிக ஆர்வம் இருந்து வருகிறது. ஃபேஷன் டெக்னாலஜிக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது.
ஃபேஷன் டெக்னாலஜிக்கு இந்தியாவில் மிகப்பெரிய சந்தை மதிப்பு உள்ளது. தேசிய அளவில் குறைந்த அளவிலான கல்லூரிகளில் தான் ஃபேஷன் டெக்னாலஜி படிப்பு கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில மற்றும் தனியார் கல்லூரிகள் இருக்கின்றன. இதில் தமிழக அரசின் கல்லூரிகளில் ஃபேஷன் டெக்னாலஜி பட்டப்படிப்புக்கு ரூ.3 ஆயிரம் மட்டுமே கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கல்வி நிறுவனமான தேசிய ஃபேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் ஃபேஷன் சார்ந்த படிப்புகள் ஏராளமானவை கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த படிப்புகளில் சேர்வதற்கு தேசிய தேர்வு முகமை மூலமாக NIFTEE என்று சொல்லப்படும் நுழைவுத் தேர்வினை எழுத வேண்டும். மாநில அரசுக் கல்லூரிகளில் சேர்வதற்கு எந்த நுழைவுத் தேர்வும் கிடையாது. 12அம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே சேர முடியும்.
அதேபோல் ஆடை வடிவமைப்பு துறையில் சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கும் ஆடை வடிவமைப்பு மற்றும் ஃபேஷன் பட்டப்படிப்பை தேர்வு செய்யலாம். தமிழக அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் https://www.tngasa.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பெறப்படுகிறது. மாணவர்கள் எந்த கல்லூரி, எந்த படிப்பு என்பதை தேர்வு செய்து விண்ணப்பித்திருக்க வேண்டும்.
தேசிய பல்கலைக்கழகத்தில் பி.எஃப் டெக் 4 ஆண்டுகால படிப்பிற்கு மட்டும் ரூ.12 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை கட்டணமாக இருக்கும். அதேபோல் மும்பை, டெல்லி, பெங்களூர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய மாநிலங்களில் பியர்ல் அகாடமி கல்லூரியில் படிக்கலாம். இந்த படிப்பை முடித்தவர்களுக்கு கார்மண்ட்ஸ் தயாரிப்பு, டெக்ஸ்டைல் டெக்னாலஜி, டிஜிட்டல் டிசைன் உள்ளிட்ட ஏராளமான துறைகளில் வேலைவாய்ப்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications