சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பல்ஸ் ஆக்சி மீட்டரை பயன்படுத்தும் முறை... தமிழக அரசு வெளியிட்ட ஏழு விஷயங்கள்

Google Oneindia Tamil News

சென்னை: பல்ஸ் ஆக்சி மீட்டரை பயன்படுத்தும் முறை குறித்து தமிழக அரசு தகவல்களை வெளியிட்டுள்ளது. அவற்றை இப்போது பார்ப்போம்.

வீட்டுத்தனிமையில் (ஹோம் குவாரண்டைனில்) உள்ள கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு பல்ஸ் ஆக்சி மீட்டர் மிகவும் முக்கியம். அதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து தமிழக அரசு முக்கியமான 8 விஷயங்களை வெளியிட்டுள்ளது.10 நிமிடம் நிதானமாக அமர்ந்த பின் உங்கள் ஆக்சிஜன் அளவை சரி பார்க்கவும்.

How to use Pulse Oximeter: Step-by-step guide In Tamil

கருவியை பயன்படுத்துவத்ற்கு முன் விரல்களை கிருமிநாசினியால் நன்றாக சுததம் செய்யவும்.

ஆள்காட்டி விரல் அல்லது நடுவிரலில் பொருத்தவும்

கருவியில் தெரியும் ஆக்சிஸன் அளவும், நாடி துடிப்பும் சீராக தெரியும் வரை காத்திருக்கவும்.

சில வினாடிகளுக்கு பிறகு ஆக்சிஜன் அளவையும், நாடி துடிப்பையும் குறித்து கொள்ளவும்.

விரல்களில் மருதாணி, நகபூச்சு, ஈரம் மற்றும் குறுமை ஆக்சிஜன் அளவை தவறாக காட்ட கூடும்..

ஆக்சிஜன் அளவு 94 சதவீதத்திற்கு கீழ் இருந்தால் மற்ற கையில் உள்ள விரல்களில் பார்க்கவும்.

தொடர்ந்து 94 சதவீதத்திற்கு கீழ் இருந்தால் மருத்துவ உதவியை நாடவும்.

மேலும் மருத்துவ உதவிக்கு இலவச சேவை உதவி மையம் 104யை அணுகவும்.

English summary
The pulse oximeter is very important for those who suffer from corona in the home (home quarantine) and those with corona symptoms. The Government of Tamil Nadu has published 8 important things on how to use it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X