விஜய்க்கு அடித்த ஜாக்பாட்! நாம் தமிழர் - பாஜக - அதிமுக கூட்டணி அமைந்தால்.. தவெகவிற்குத்தான் சாதகம்?
சென்னை: அதிமுக - பாஜக - நாம் தமிழர் கூட்டணி அமையும் பட்சத்தில் அது நாம் தமிழர் கட்சிக்கு பெரிய அளவில் சாதகமாக மாறும் என்று அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழக அரசியலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மொத்தமாக தனித்துவிடப்பட்டு உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் - அதிமுக இடையே நடந்த ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. விஜய் அரசியலுக்கு புதிது என்பதால் அதிமுக கூட்டணி வந்த போதே அதை ஏற்காமல் மிஸ் செய்துள்ளார். அதிமுகவிற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கோரிக்கைகள் ஏற்றதாக இல்லை.. அதிமுகவிற்கு தகுந்ததாக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்திலேயே முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி அதிமுக வட்டாரத்தில் கூறுகையில், தமிழக வெற்றிக்கழகம் அதிமுகவிற்கு வேலைக்கு ஆகாது. தமிழக வெற்றிக் கழக கோரிக்கைகளை அதிமுக ஏற்க முடியாது. தமிழக வெற்றிக் கழகம் சில கோரிக்கைகளை வைக்கிறது.. அதெல்லாம் அதிமுகவிற்கு தகுந்ததாக இருக்காது. 117 இடங்களை தமிழக வெற்றிக் கழகம் கேட்கிறது. பாதிக்கு பாதி இடங்கள் கேட்கிறார்கள். இரண்டரை வருடங்கள் நாங்கள் ஆட்சி.. அதன்பின் இரண்டரை வருடங்கள் நீங்கள் ஆட்சி என்று அதிமுகவிடம் தமிழக வெற்றிக் கழகம் பேசி உள்ளது என்று கூறியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

கூட்டணி உருவாகவில்லை
இந்த நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சர்வே எடுத்ததாக கூறப்படுகிறது. விஜய் தரப்பு எடப்பாடி தரப்பிடம் பேசுகையில், எங்களுக்கு பெரிய பலம் உள்ளது. முக்கியமாக 15 சதவிகிதத்திற்கும் மேல் வாக்கு வங்கி உள்ளதாக எங்கள் சர்வே சொல்கிறது. அதனால் 117 இடங்கள் எங்களுக்கு தேவை, என்று விஜய் தரப்பி பேசி இருக்கிறதாம். இதை எடப்பாடி ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் கூட்டணி சேரவில்லை. இதனால் விஜய் தனித்து விடப்படும் நிலை ஏற்படலாம். அதிமுக - பாஜக கூட்டணி சேர்ந்துள்ளதால் அந்த வாக்குகள் அப்படியே அவர்களுக்கு போகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
நாம் தமிழர் கூட்டணியால் விஜய்க்கு சாதகம்
இப்படிப்பட்ட நிலையில் அதிமுக - பாஜக - நாம் தமிழர் கூட்டணி அமையும் பட்சத்தில் அது நாம் தமிழர் கட்சிக்கு பெரிய அளவில் சாதகமாக மாறும் என்று அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும். மாறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்ததற்கு கடந்த காலங்களில் நிறைய உதாரணங்கள் உள்ளன என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார்.
தேமுதிக, பாமக, புதிய தமிழகம் தொடங்கி இன்னும் சில உதிரி கட்சிகள் என்று பெரிய கூட்டணி லிஸ்ட் அமித் ஷா கையில் உள்ளதாம். இந்த லிஸ்டில் நாம் தமிழர் பெயரும் உள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இவர்களுடன் நாம் கூட்டணியை உறுதி செய்ய வேண்டும். அதற்கான பணிகளை நாங்கள் செய்கிறோம். இவர்கள் யாருடனும் மோதல் மட்டும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று அமித் ஷா கூறி உள்ளதாக தெரிகிறது. பொதுவாக சீமானுக்கு வாக்களிப்பவர்கள்.. அதிமுக, திமுகவிற்கு மாற்று என்று கருதுபவர்கள் . அதோடு தேசிய கட்சிகளை விரும்பாத தமிழ் தேசியம் பேசக்கூடியவர்கள். இதனால் இவர்கள் அப்படியே பாஜக கூட்டணிக்கு செல்வது சரியாக இருக்காது. அதற்கு வாய்ப்பும் இல்லை. இதனால் 8 சதவிகிதம் அப்படியே பாஜக கூட்டணிக்கு செல்லாது .
இதனால் பயன் அடைய போகும் முதல் கட்சி தமிழக வெற்றிக் கழகம் சீமான் ஒருவேளை பாஜக கூட்டணிக்கு வந்தால் சீமானை மாற்று என்று நினைத்தவர்கள் விஜய் பக்கம் செல்வார்கள். பாஜகவுடன் சீமான் கூட்டணி வைக்க போனால்.. மக்கள் விஜய் பக்கம் போகும் வாய்ப்புகள் உள்ளன. தமிழக அரசியலில் திடீரென சீமான் இடத்தை விஜய் பிடிக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications