தாறுமாறாக வந்த ஆம்னி பேருந்து! ஹை வேஸில் அலறல்.. சென்னை-மார்த்தாண்டம் சாலையில் விபத்து.. 2 பேர் பலி
தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகள் தாறுமாறு வேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
சென்னை: சென்னை-மார்த்தாண்டம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து- லாரி மீது மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் 2 பேர் பலியானார்கள்.
தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகள் தாறுமாறு வேகத்தில் செல்வதாக கடுமையான புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக சென்னையில் இருந்தும், சென்னை நோக்கியும் செல்லும் பேருந்துகள் சாலையில் தாறுமாறு வேகத்தில் செல்கின்றன.

சாலை விதிகளை மதிக்காமல் செல்வது, இரவு நேரத்தில் அசுர வேகத்தில் செல்வது, ஹை பீம் வைத்து செல்வது என்று ஆம்னி பேருந்துகளின் அட்டூழியம் அதிகரித்து உள்ளது.
சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக இவர்கள் இவ்வளவு வேகமாக வாகனங்களை இயக்குகிறார்கள். இது சாலை விபத்திற்கு காரணமாகிவிடுகிறது. தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகள் தாறுமாறு வேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இப்படி அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில்தான் சென்னை-மார்த்தாண்டம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து- லாரி மீது மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் 2 பேர் பலியானார்கள்.
சென்னை-மார்த்தாண்டம் நோக்கி சென்ற அந்த ஆம்னி பேருந்து தாறுமாறு வேகத்தில் சென்றுள்ளது. அப்போது உளுந்தூர்பேட்டை அருகே அந்த பேருந்து விபத்தில் சிக்கியது. சாலை ஓரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் பேருந்தில் பயணித்தவர்களில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பலியான இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தும் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. படுகாயம் அடைந்தவர்களை அந்த பகுதியில் இருந்த மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேருந்தை தாறுமாறாக இயக்கி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர், நடத்துனர் இருவரும் சம்பவ இடத்தில் இருந்து ஓடிப்போய் காடு வழியாக தப்பித்து சென்றுவிட்டனர்.
போலீஸ் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க இவர்கள் சம்பவ இடத்தில் இருந்து ஓடிவிட்டனர். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நேற்றுதான் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. வேகமாக சென்ற அரசு பேருந்து மீது, முன்னால் நிறுத்தப்பட்டு இருந்த லாரி ஒன்று மோதியது. இதில் பஸ் ஒரு பக்கமாக திரும்பி சாலையை அடைத்தது. அதோடு பேருந்தின் முன் பக்கத்திலும் கடுமையான சேதம் ஏற்பட்டது.
லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு ஓட்டுனர் தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அதிகாலை 5 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது. வேகமாக வந்த பேருந்து நிறுத்தப்பட்டு இருந்த லாரியை பார்க்காமல் அதில் வேகமாக மோதி உள்ளார். இதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த விபத்தில் லாரியில் இருந்தவர்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. பேருந்து ஒட்டுனர் மட்டும் லேசான காயம் அடைந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக யாரும் இந்த விபத்தில் பலியாகவில்லை. இந்த விபத்தை தொடர்ந்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 10 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 10 கிலோமீட்டர் தூரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications