சுப்புலட்சுமி ஜெகதீசன் இடத்தில் பூங்கோதை ஆலடி அருணா! ஸ்டாலின் தீவிர பரிசீலனை! திமுகவில் விறு விறு!
சென்னை: திமுகவில் துணை பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலுக்கு முழுக்கு போட்டுள்ளதால், அவர் வகித்த பதவிக்கு பூங்கோதை ஆலடி அருணாவின் பெயர் பரிசீலனையில் இருக்கிறது.
முன்னாள் அமைச்சர், மகப்பேறு மருத்துவர், பாரம்பரிய அரசியல் பின்னணியை சேர்ந்த குடும்பம், எல்லாவற்றுக்கும் மேலாக முதல்வர் ஸ்டாலின் மீதான அதீத விசுவாசம் பூங்கோதைக்கு ப்ளஸ் பாயிண்ட்களாக பார்க்கப்படுகின்றன.
இதனால் சற்குணப் பாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் வரிசையில் பூங்கோதையும் திமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவியை அலங்கரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக தலைமை
திமுகவை பொறுத்தவரை தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர் ஆகிய பதவிகளுக்கு அடுத்தபடியாக துணைப் பொதுச்செயலாளர் பதவி மிக முக்கியமானது. பொதுக்குழு, செயற்குழு, மாநாடு, உள்ளிட்ட கட்சி சார்ந்த அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் தலைவரோடு ஒரே வரிசையில் மேடையில் அமரும் வாய்ப்பு துணை பொதுச்செயலாளர்களுக்கு கிடைக்கும்.

துணை பொதுச்செயலாளர்
அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி திமுக துணை பொதுச்செயலாளர்களாக ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, பொன்முடி, ஆகியோர் இருக்கின்றனர். இதனிடையே சற்குணபாண்டியன் உயிருடன் இருந்தபோது அவர் வகித்து வந்த துணைப் பொதுச்செயலாளர் பதவியை கனிமொழிக்கு கொடுக்குமாறு ராஜினாமா செய்து அதை கருணாநிதி ஏற்க மறுத்தது தனிக்கதை. சற்குணபாண்டியன் மறைவை அடுத்து மகளிர் கோட்டாவில் அந்த இடத்திற்கு பரிசீலிக்கப்பட்டவர் பூங்கோதை ஆலடி அருணா.

சுப்புலட்சுமி ஜெகதீசன்
ஆனால் பூங்கோதை ஆலடி அருணா ஜூனியர் எனக்கூறி இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர் அப்போது ஆட்சேபனை தெரிவித்ததால் மீண்டும் சுப்புலட்சுமி ஜெகதீசன் 2015-ம் ஆண்டு திமுக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். தற்போது அரசியலில் இருந்தே விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவித்துள்ளதால், அவர் வகித்து வரும் துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு பூங்கோதை ஆலடி அருணா பெயர் மீண்டும் பரிசீலனையில் உள்ளது.

திறமை
சுப்புலட்சுமி ஜெகதீசனிடம் முடிந்த வரை துரைமுருகன் சமாதானம் செய்தும் அவர் அதை ஏற்க மறுத்ததால் அவரது இடத்திற்கு புதிதாக பெண் ஒருவரை நியமிக்க வேண்டிய பொறுப்பு திமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் முதல்வர் ஸ்டாலினிடம் அதீத விசுவாசத்தோடு இருக்கும் பூங்கோதை ஆலடி அருணாவுக்கு ஜாக்பாட் அடித்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லையாம்.
-
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன்












Click it and Unblock the Notifications