சரியாக இன்று பள்ளிகள் திறக்கும் முன்.. நேற்று இரவு சென்னையில் நடந்த பரபரப்பு.. ஆ மூச்சே திணறிடுச்சே
சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் சிறப்பு பேருந்துகள் விடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவும், இன்று அதிகாலையும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் பள்ளிகள் இன்று திறக்க உள்ள நிலையில் கடந்த வாரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. அதன்படி பல்வேறு பகுதிகளுக்கு இடையில் சிறப்பு பேருந்து சேவை வழங்கப்பட்டது. கடந்த 5-6 தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, வேதாரண்யம், காரைக்குடி, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம் பகுதியில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது.

அதேபோல் சென்னையில் இருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, வேதாரண்யம், காரைக்குடி, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கு திருச்சியில் இருந்தும்.. இதே பகுதிகளில் இருந்து திருச்சிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. 4 மற்றும் 5ஆம் தேதி இந்த பேருந்துகள் இயக்கப்பட்டன.
கடந்த 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கருதி இப்படி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் அன்று பள்ளிகள் திறக்கப்படாமல் இன்று திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கோடை விடுமுறைக்கு சென்ற மாணவ, மாணவியர் வீடு திரும்பும் வகையில் நேற்றில் இருந்து இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்றும், இன்றும் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
முக்கியமாக பெற்றோர்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக இருக்கும் என்பதால் இன்றில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இறுதி நாட்களில் சென்னைக்கு 650 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சென்னைக்கு கோவை, மதுரை, பெங்களூரு, நெல்லை, திருச்சி, சேலம் பகுதிகளில் இருந்து 850 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் சென்னையில் இருந்து இதே நகரங்களுக்கு எதிர் திசையில் 850 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் 1,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
போக்குவரத்து நெரிசல்: இதனால் சென்னைக்கு வெளியே உள்ள சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக நேற்று இரவும், இன்று அதிகாலையும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு பரனூர் ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் டிராபிக் ஏற்பட்டது.
சென்னை புறநகர் பகுதிகளில் நீண்ட தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மூச்சு விட முடியாத அளவிற்கு நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் வரிசைகட்டி நின்றன. மக்கள் பலரும் சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பியதால் அதிக அளவில் வாகனங்கள் வந்தன.

கூடுதல் வாகனங்கள் வரத்து காரணமாக அங்கே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. முதல்வர் ஸ்டாலின் நடத்திய ஆலோசனையில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிலபஸ் முடிக்க வேண்டும். அதனால் கொஞ்சம் முன்கூட்டியே திறக்க வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளார்.
அதனால் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதி திறக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார். அதே சமயம் சிறு குழந்தைகள் வெயிலில் பள்ளிக்கு செல்ல முடியாது என்பதால் அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் தாமதமாக திறக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் , 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications