அதிகாரத்தை காட்ட மக்கள்? எப்படி நடத்தனும்னு பயிற்சி தேவை! போலீசுக்கு உத்தரவிட்ட மனித உரிமைகள் ஆணையம்
சென்னை : மாற்றுத் திறனாளிகள் மற்றும் மனநிலை சரியில்லாதவர்களை கையாளும் வகையில் காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே மனநலம் பாதிக்கப்பட்டவரான பென்டிங் ஜான் என்பவரை 2014 ஜூன் 22ம் தேதி காவல்துறையினர் வீடு புகுந்து தாக்கி நித்திரவிளை காவல் நிலையதிற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த பெண்டிங் ஜான் பாளையம்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஜூன் 27 ம் தேதி உயிரிழந்தார்.

மனித உரிமை ஆணையம்
கணவரின் மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனக்கு உரிய நீதி கிடைக்க உத்தரவிட வேண்டுமென மாநில மனித உரிமை ஆணையத்தில் அவரது மனைவி சுவர்ணா பாய் புகார் அளித்திருந்தார்.இந்த புகாரினை மனித உரிமைகள் ஆணைய உறுப்பினரான சித்தரஞ்சன் மோகன்தாஸ் விசாரித்தார்.

காவல்துறை
இந்நிலையில், காவல்துறை என்பது பலத்தையும் அதிகாரத்தையும் முன்னிலைபடுத்தும் நபர்களாகவே பொதுமக்களுக்கு தெரிவதாக குறிப்பிட்டுள்ள அவர், குற்றம்சாட்டப்பட்ட நபர் நிரபராதி அல்லது குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை அவர் குற்றமற்றவர் என்று கருதும் விதத்தில் நடத்தப்பட வேண்டுமென்ற மனநிலை அனைத்து காவல்துறையினரின் மனதில் கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

முறையான பயிற்சி
இந்த அணுகுமுறை காவல்துறையின் மனித உரிமை மீறல்களின் எண்ணிக்கை குறையும் என்றும் தெரிவித்துள்ளார். சட்டத்தைக் காப்பவர்கள் தேவையற்றவர்களாக காணப்படுவது கவலை அளிப்பதாகவும், காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவதில் மக்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து காவல்துறைக்கு முறையான பயிற்சி அளிக்கும்படியும் வலியுறுத்தி உள்ளார்.

காவலர்களுக்கு பயிற்சி
மாற்றுத் திறனாளிகள் மற்றும் மனநிலை சரியில்லாதவர்களை கையாளும் வகையில் காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், அவர்களை கண்டறியும் வகையிலும், அவர்கள் பயப்படாதா வகையிலும் செயல்பட காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளார். மேலும், உயிரிழந்த பென்டிங் ஜான் குடும்பத்திற்கு 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டதுடன், குற்றம்சாட்டப்பட்டுள்ள காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி












Click it and Unblock the Notifications