மனைவியின் தலையை மடியில் வைத்துக்கொண்டு காளி கோயிலில் அமர்ந்த கணவர்.. பக்கத்தில் என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு, அவரது தலையை கையில் எடுத்துக்கொண்டு காளி கோயிலுக்கு சென்றாராம் கணவர்.. அங்கே என்ன நடந்தது தெரியுமா? மனைவியின் தலையை தன்னுடைய மடியில் வைத்து கொண்டாராம்.. பக்கத்தியே அவர்களது 2 குழந்தைகளும் உட்கார்ந்திருந்தார்களாம். இந்த கோலத்தை பார்த்து மொத்த உறவினர்கள் ஆடிப்போய் விட்டார்கள்.. என்ன நடந்தது?

மேற்கு வங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டம் கங்காராம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட நாராயண்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரிண்டு சர்க்கார் (46). இவருக்கும் சீமா கோஷ் சர்க்கார் (42) என்பவருக்கும் திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்களில் ஒரு குழந்தைக்கு 5 வயதும், இன்னொரு குழந்தைக்கு சுமார் 12 வயதும் ஆகிறது.

West Bengal Husband Crime

தம்பதிக்குள் தகராறு

இந்நிலையில், கடந்த புதன்கிழமை அதிகாலை கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது உச்சக்கட்ட கோபத்துக்கு போன ரிண்டு, தனது மனைவியை கத்தியால் கத்தி கொன்று விட்டர்.. அப்போதும் ஆவேசம் அடங்காமல், மனைவியின் தலையை துண்டித்தும் உள்ளார். உடனே அந்த தலையை எடுத்துக்கொண்டு வீட்டின் அருகிலுள்ள காளி கோயிலுக்குச் சென்றுள்ளார்.

காலையில் சுமார் 7 மணியளவில் கோயிலுக்குள் மனைவியின் தலையுடன் நுழைந்துள்ளார். அப்போது கோயிலில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. ஆனால், ரிண்டு, அங்கே ஓரிடத்தில் போய் உட்கார்ந்துவிட்டார்.. அவரது மடியில் மனைவியின் துண்டிக்கப்பட்ட தலை இருந்துள்ளது.. கையில் ரத்தக்கறை படிந்த கத்தியும் இருந்துள்ளது..
அப்போது ரிண்டுவின் இரண்டு குழந்தைகளும் அவருக்கு அருகிலேயே அமைதியாக உட்கார்ந்திருந்தார்களாம். இதைப் பார்த்து வெலவெலத்து போன அக்கம்பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அத்துடன், குழந்தைகளை மட்டும் அங்கிருந்து அழைத்து சென்றுள்ளனர்.

West Bengal Husband Crime

சடலம் - கதாரி

தகவலறிந்து கங்காராம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரிண்டுவைக் கைது செய்தனர். வீட்டில் இருந்த சீமாவின் உடலையும் மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்... நிலத்தில் வேலை செய்ய பயன்படுத்தப்படும் கதாரி எனப்படும் கூர்மையான கத்தியை பயன்படுத்தி மனைவியின் தலையை வெட்டியதாக போலீசாரிடம் சொல்லி உள்ளார் ரிண்டு.. பிறகு சம்பவ இடத்தில் தடயவியல் ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.

ரிண்டு குறித்து அவரது உறவினர்கள் பல்வேறு தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அதாவது , வடக்கு வங்காள மாநில போக்குவரத்துக் கழகத்தில் (NBSTC) பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். சுமார் 3 வருடங்களுக்கு முன்பு ஒழுங்கு நடவடிக்கை காரணமாக அவர் பணியிலிருந்து ரிண்டு நீக்கப்பட்டு விட்டாராம்.

பறிபோன வேலை

வேலை போனதுமே குடும்பத்தை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பூக்கள், வெல்லம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்தும், சின்ன சின்ன தொழில்களில் ஈடுபட்டும் வருமானம் ஈட்டவும் முயன்றுள்ளார் ரிண்டு.. ஆனால் அப்போதும் நிலையான வருமானம் கிடைக்கவில்லையாம்.

இதனால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு வந்துள்ளது . அப்படித்தான் சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட்டு, அது கொலை வரை சென்றிருக்கலாம் என்கிறார்கள்..

அதேபோல ரிண்டுவின் நடவடிக்கைகளிலும் சமீபகாலமாக வித்தியாசமான மாற்றங்கள் ஏற்பட்டதாம். அசைவ உணவுகளை சாப்பிட்டு வந்த ரிண்டு, திடீரென அசைவ உணவுகளைத் தவிர்த்து சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட ஆரம்பித்தாராம்.. திடீரென தாந்திரீக நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற செயல்களையும் செய்திருக்கிறார்.. சில சமயம், மந்திரவாதி போல டிரஸ் அணிந்து கொள்வாராம்.. வேலை இழந்த பிறகுதான் இந்த மாற்றங்கள் அவரிடம் காணப்பட்டதாக உறவினர்கள் சொல்கிறார்கள்.

இறுதியில் ரிண்டுவை கைது செய்து போலீசார் ஜீப்பில் அழைத்து சென்றுள்ளனர்.. அப்போது ரிண்டு, "எனக்கு வேலை போய்விட்டது. அதன்பிறகு போலீஸ் ஸ்டேஷனுக்கும் போக வேண்டிய நிலைமை வந்துவிட்டது.. நான் சைக்கோவாக மாறிட்டு வர்றேன் போல" என்று பேசி கொண்டே சென்றாராம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+