Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

”நான் இயேசு அல்ல, அடித்தால் திருப்பி அடிப்பேன்.." ஆக்ரோஷத்தில் பொங்கிய அண்ணாமலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜகவின் ஆக்ரோஷ அரசியல் தொடரும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 307வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை கூறுகையில், முதல்முதலாக கிழக்கிந்திய கம்பெனிக்கு வரி செலுத்த மாட்டேன் என்ற பெருமை பூலித்தேவனையே சாரும். நெல் மணியை கூட வரியாக செலுத்த மாட்டேன் என்று அவர் கூறிய வார்த்தைதான், இன்று நெற்கட்டான்சேவல் என்று ஊர் பெயராக மருவி இருக்கிறது என்று தெரிவித்தார்.

விநாயகர் சதுர்த்தி விடுமுறை

விநாயகர் சதுர்த்தி விடுமுறை

தொடர்ந்து அண்ணாமலை கூறுகையில், தமிழகத்தில் முதல்முதலாக விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை அறிவித்த அரசு திமுக தான். அன்றைய முதலமைச்சர் அண்ணா தான். இன்று அண்ணா வகுத்த பாதையில் இருந்து எந்த அளவுக்கு மாறியுள்ளது என்பதற்கு, முதலமைச்சர் வாழ்த்து கூறாததன் மூலம் அறிய முடியும்.

அண்ணாமலை பேட்டி

அண்ணாமலை பேட்டி

அறநிலையத்துறை சார்பாக விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறுவதில் எந்த தவறும் இல்லை. பாஜக அனைத்து மத பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கும். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், திமுக எம்பி-க்களும் பேசியுள்ளனர். பாஜக மத அரசியல் செய்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அனைத்து மதத்தினருக்கும் வாழ்த்து கூறிவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாஜகவை விமர்சிக்கட்டும் என்று தெரிவித்தார்.

பிடிஆர் பற்றி விமர்சனம்

பிடிஆர் பற்றி விமர்சனம்

தொடர்ந்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுடனான மோதல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறித்து நான் பதிவிட்டதில் எந்த தவறும் இல்ல. காரணம், நான் மரியாதையாக விமர்சித்திருந்தேன். டிஆர் பழனிவேல் தியாகராஜன் எப்போதும் தாத்தா, தந்தை அடையாளத்தை வைத்து அரசியல் செய்கிறார். அதனால் தான் இனிஷியலை எடுத்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பினேன்.

விமர்சிக்க தகுதியில்லை

விமர்சிக்க தகுதியில்லை

பொருளாதாரம் பற்றி பேசும் திமுக, மற்ற மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் அரசியலுக்கு சாபக்கேடு என்று என்னை விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை. கிழக்கிந்திய கம்பெனியுடன் கொஞ்சிக் குலாவிய நீதிக்கட்சியின் வழியில் வந்தவர்கள் என்னை விமர்சிக்க என்ன அருகதை இருக்கிறது.

ஆவேசம் தொடரும்

ஆவேசம் தொடரும்

திமுக மிரட்டும் பாணியில் அரசியல் செய்தால், என் பதில் ஆவேசமாக இருக்கும். என்னால் அரசியலில் இருந்து விலகி, என் தோட்டத்தில் விவசாயம் செய்து பிழைத்துக் கொள்வேன். ஆனால் திமுக அமைச்சர்களால் முடியுமா என்று கேள்வி எழுப்பினார். மேலும், ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டுவதற்கு நான் ஒன்றும் இயேசு கிறிஸ்து அல்ல. அடித்தால், திருப்பி அடிப்பேன் என்று ஆவேசமாக பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+