ஜெயலலிதா இறக்கும் முன் 2 அமைச்சர்களுடன் நேரில் சென்று பார்த்ததாக ஓபிஎஸ் பரபரப்பு வாக்குமூலம்
ஜெயலலிதா மரணமடையும் முன்பாக அவரை நானும் மூன்று அமைச்சர்களும் நேரில் பார்த்தோம் என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா இறப்பதற்கு முன் டிசம்பர் 5ஆம் தேதி அவரை நான் உள்பட 3 அமைச்சர்கள் பார்த்தோம் என ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார். முதல் நாள் விசாரணையின் போது ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்று கூறியிருந்த ஓபிஎஸ் நேரில் பார்த்ததாக இன்று கூறியுள்ளார்.
Recommended Video
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆணையத்தில் இரண்டாவது நாளாக ஓ.பன்னீர் செல்வம் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
இன்றைய தினம் சில கேள்விகளுக்கு தெரியும் என்றும் பல கேள்விகளுக்கு தெரியாது, நினைவில்லை என்றும் கூறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். அவரது வாக்கு மூலத்தை வைத்து பலரும் கிண்டலடித்து வரும் நிலையில் இன்றைய தினம் எனக்குத் தெரியும் என்று கூறி பதிலளித்து வருகிறார்.

எக்மோ கருவி
டிசம்பர் 4ஆம் தேதி ஜெயலலிதாவிற்கு இதயபாதிப்பு ஏற்பட்டதாகவும் அவருக்கு எக்மோ சிகிச்சை கருவி பொறுத்தப்பட்டு குறித்து டிசம்பர் 4ஆம் தேதி விஜயபாஸ்கர் என்னிடம் கூறியதாகவும் தெரிவித்தார். அதே நேரத்தில் சிபிஆர் சிகிச்சை கொடுத்தது எனக்குத் தெரியாது என்றும் கூறினார்.

ஆளுநர் சந்தித்தது நினைவில்லை
டிசம்பர் 4ம் தேதி ஆளுநர் அப்போலோ மருத்துவமனை வந்திருந்தும் ஜெயலலிதாவை சந்திக்காமல், அப்போலோ குழும தலைவர் பிரதாப் ரெட்டியை மட்டும் சந்தித்தது குறித்து தனக்கு நினைவில்லை என்றும் ஓ.பி.எஸ். வாக்குமூலம் அளித்துள்ளார்.

இறப்பதற்கு முன் பார்த்தோம்
ஜெயலலிதா உயிரிழக்கும் முன்பாக டிசம்பர் 5ஆம் தேதி தானும் இரண்டு அமைச்சர்களும் ஜெயலலிதாவை நேரில் பார்த்ததாக கூறியுள்ளார். நேற்றைய தினம் வாக்குமூலம் அளித்த போது செப்டம்பர் 22ஆம் தேதி மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவைத் தவிர வேறு எப்போதும் பார்க்கவில்லை என்று கூறியிருந்தார் ஓ.பன்னீர் செல்வம்.

யார் அந்த அமைச்சர்கள்
ஜெயலலிதாவின் உடல் ஆரோக்கியம் பற்றி அவ்வப்போது ஓ.பன்னீர் செல்வத்திடம் கூறியவர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்தான். நேற்றைய தினம் வெளிநாடு சிகிச்சைக்கு அழைத்து செல்வது பற்றி விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணியிடம் பேசியதாகவும் கூறினார் ஓ.பன்னீர் செல்வம். இன்றைய தினம் யாருடன் போய் ஜெயலலிதாவை சந்தித்தோம் என்று கூறவில்லை. அந்த அமைச்சர்கள் யார் என்று தெரிந்தால் அவர்களிடமும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications