Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்றே என்னை மாற்றலாம்.. பதவி கேட்டு யார் வீட்டு வாசலையும் மிதிக்கமாட்டேன்! பரபரப்பை கிளப்பிய அழகிரி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : இன்று மாலையே கூட நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து மாற்றப்படலாம். அப்படி மாற்றினால் புதிய தலைவரை அந்த இருக்கையில் அமர வைத்துவிட்டு திருப்தியோடுதான் செல்வேன் எனப் பேசியுள்ளார் கே.எஸ்.அழகிரி. இன்று நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பழைய சம்பவங்களையெல்லாம் குறிப்பிட்டு உருக்கமாகப் பேசியுள்ளார் கே.எஸ்.அழகிரி.

கே.எஸ்.அழகிரி தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட இருப்பதாக கடந்த சில வாரங்களாகவே காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், இன்று நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் உருக்கமாகப் பேசியுள்ளார் கே.எஸ்.அழகிரி.

கே.எஸ்.அழகிரி மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் கணிசமான இடங்களைப் பிடித்தது காங்கிரஸ் கட்சி. இந்நிலையில், ராஜ்யசபா சீட் அவருக்கு கிடைக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், ப.சிதம்பரம் அந்த சீட்டை பெற்றார். இந்நிலையில், அந்த சீட் தொடர்பாகவும் பேசியுள்ளார் அழகிரி.

காங்கிரஸ் ஆலோசனை

காங்கிரஸ் ஆலோசனை

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்தி வருகிறார். இந்த நடைபயணம் சமீபத்தில் டெல்லியை எட்டியது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக தற்போது யாத்திரைக்கு இடைவெளி விடப்பட்டு மீண்டும் வரும் ஜனவரி 3ஆம் தேதி தொடங்குகிறது. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் தொடர்ச்சியாக 'அரசியலமைப்பை பாதுகாப்போம்' மற்றும் 'கையோடு கை கோர்ப்போம்' ஆகிய மாபெரும் பிரசாரத்தை முன்னெடுப்பது தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம் தமிழக காங்கிரஸ் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது.

 சிரிவல்ல பிரசாத்

சிரிவல்ல பிரசாத்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவல்ல பிரசாத், செயல் தலைவர் விஷ்ணு பிரசாத் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கு அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவல்ல பிரசாத் ஆலோசனை வழங்கினார். ராகுல் காந்தியின் பாத யாத்திரையின் நோக்கத்தை மக்களிடம் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்று எடுத்துக் கூறினார்.

கேஎஸ் அழகிரி உருக்கம்

கேஎஸ் அழகிரி உருக்கம்

இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, "நான் தலைவராக இருக்கும் இந்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக உண்மையாக கடுமையாக உழைத்து வருகிறேன். தேர்தல்களில் கூட்டணி கசப்புகளை வெற்றிகரமாக கடந்திருக்கிறோம். ஜெயலலிதா காலத்தில் காங்கிரஸ் தரப்பில் கூட்டணி பேசச் சென்றார்கள். அப்போது தன்னிடம் கூட்டணி பேச வந்த நான்கு பேருக்கும் தேர்தல் சீட் இல்லை என்று மறுத்தார் ஜெயலலிதா. கூட்டணி பேச சென்றவர்களுக்கே சீட் இல்லை என்ற நிலையையும் கூட்டணி கட்சிகள் ஏற்படுத்தின.

 சோனியாவே சந்திக்க தயங்கினார்

சோனியாவே சந்திக்க தயங்கினார்

கடந்த முறை ராஜ்யசபா எம்.பி சீட்டை திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு அளித்தபோது எனக்கு அந்த வாய்ப்பை எடுத்துக் கொள்ளும் உரிமை இருந்தது. ஆனால் ப.சிதம்பரத்துக்கு வாய்ப்பு இருப்பதாக அறிந்தவுடன் நான் அந்த பதவிக்கு முயற்சி செய்யவே இல்லை. அந்தப் பக்கம் நான் திரும்பக் கூட இல்லை. அப்போது நான் மாநில தலைவர் என்ற முறையில் அகில இந்திய தலைவர் சோனியா காந்தியை சந்திக்க நேரம் கேட்டேன். நான் ராஜ்யசபா கேட்டுதான் சந்திக்க முயற்சி செய்வதாக கருதி சோனியா காந்தி கூட என்னை சந்திக்க தயங்கினார்.

என் பதவியை பறிக்க

என் பதவியை பறிக்க

ஆனால் ஒரு மாநில தலைவரை சந்திக்காமல் இருக்க முடியாது என்பதால் என்னை சந்தித்தார். அப்போது அவரிடம், கூட்டணியில் ராஜ்யசபா சீட் தருவதாக சொல்கிறார்கள். யாருக்கு தரலாம் என்று நான் கேட்டதும் என்னை ஆச்சரியமாக பார்த்தார் சோனியா. நான் எந்த பதவிக்கும் எப்போதும் ஆசைப்பட்டதில்லை. பலர் தங்களுக்குப் பதவி கேட்டும் எனது பதவியை பறிக்க கோரியும் டெல்லிக்கு போய் வருகிறார்கள். ஆனால் நான் மாநில தலைவராக இருக்கும் காலத்தில் பதவி கேட்டு டெல்லிக்குப் போனதில்லை. ஐந்தாறு முறைதான் நான் டெல்லிக்கே போயிருக்கிறேன். பதவி கேட்டு யார் வீட்டு வாசல்படியையும் மிதிக்கும் பழக்கம் எனக்கு இல்லை." எனத் தெரிவித்தார்.

இன்று மாலையே என்னை மாற்றலாம்

இன்று மாலையே என்னை மாற்றலாம்

மேலும் பேசிய கேஎஸ் அழகிரி, எல்லாமே மாற்றத்துக்கு உட்பட்டதுதான். எனது இருக்கையும் மாற்றத்துக்கு உட்பட்டதுதான் என்பது எனக்குத் தெரியும். இப்போது கூட நான் பேச எழுந்து வந்தவுடன் எனது இருக்கையில் தம்பி விஜய் வசந்த் அமர்ந்துகொண்டார் எனப் பேசினார். கே.எஸ்.அழகிரி பேச எழுந்தவுடன், சிரிவல்ல பிரசாத்துடன் பேசுவதற்காக அவரது நாற்காலியில் அமர்ந்தார் விஜய் வசந்த். அதைக் குறிப்பிட்டே கே.எஸ்.அழகிரி கிண்டலாகப் பேசினார். மேலும், இன்று மாலையே கூட மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நான் மாற்றப்படலாம். அப்படி மாற்றினால் புதிய தலைவரை அந்த இருக்கையில் அமர வைத்துவிட்டு திருப்தியோடுதான் செல்வேன் என உருக்கமாகப் பேசியுள்ளார் கே.எஸ்.அழகிரி.

கோஷ்டி பூசல்

கோஷ்டி பூசல்

சென்னை சத்தியமூர்த்தி பவனில் இரு கோஷ்டிகளைச் சேர்ந்தவர்களுக்கு இடையே கடந்த நவம்பர் 15-ஆம் தேதி கைகலப்பு ஏற்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல்கள் மீண்டும் கடுமையாக கிளம்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக பலரும் போர்க்கொடி தூக்கினர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

கேஎஸ் அழகிரி vs காங். தலைவர்கள்

கேஎஸ் அழகிரி vs காங். தலைவர்கள்

சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மாநில தலைவர்கள் திருநாவுக்கரசர், இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் டெல்லிக்கே சென்று அழகிரியை மாற்றுமாறு கோரிக்கை வைத்தனர். அதற்கு பதிலடியாக கேஎஸ் அழகிரி தரப்பினரும், அழகிரியை மாற்றக்கூடாது என்று கூறி செல்வப்பெருந்தகை, ரூபி மனோகரனுக்கு எதிராக புகார்களை அடுக்கினர். இந்நிலையில், கே.எஸ். அழகிரி தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்படலாம் என்று கடந்த சில வாரங்களாகவே பேச்சுகள் அடிபட்டு வருகின்றன.

 காங்கிரஸ் தலைமை முடிவு

காங்கிரஸ் தலைமை முடிவு

கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சி 2019 லோக்சபா தேர்தலில் 10ல் போட்டியிட்டு 9 இடங்களிலும், 2021 மாநில சட்டமன்றத் தேர்தலில் 25 தொகுதியில் போட்டியிட்டு 18 இடங்களிலும் குறிப்பிடத்தக்க வகையில் வெற்றியைப் பெற்றதால், அவர் மீது காங்கிரஸ் தலைமை நல்ல அபிப்ராயத்தையே வைத்திருக்கிறது. எனினும், தமிழ்நாட்டில் இருந்து கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாலும், கே.எஸ்.அழகிரி தலைவராக நியமிக்கப்பட்டு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆவதாலும், அவரை மாற்ற தலைமை முடிவெடுத்து விட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் தான் கே.எஸ்.அழகிரி தான் இன்று மாலையே கூட மாற்றப்படலாம் என கட்சிக் கூட்டத்தில் பேசியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+