வாட்ச் விலை கேட்டால்.. நமக்கு டைம் சரியில்லையென அர்த்தம்.. சொல்கிறார் இயக்குநர் பேரரசு!
சென்னை: வாட்சில் டைம் என்ன என்று கேட்டால் நமக்கு நல்ல நேரம் என்று அர்த்தம். ஆனால் வாட்சின் விலை என்ன என்று கேட்டால், நமக்கு நேரம் சரியில்லை என்று அர்த்தம் என இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ரபேஃல் வாட்ச் விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன் என்று பல்வேறு மேடைகளில் தொடர்ந்து அண்ணாமலை பேசி வந்தார்.
ஆனால் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்த அண்ணாமலை, ரூ.4.40 லட்சம் மதிப்பு கொண்ட ரபேஃல் எடிஷன் பெல் அண்ட் ராஸ் வாட்சை வாங்கியது எப்படி என்ற கேள்வியை ஆளும் திமுக தரப்பு எழுப்பி உள்ளது.

அண்ணாமலை விளக்கம்
இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, ரபேஃல் விமானங்களை இந்தியா ஆர்டர் செய்தபோது, அந்த விமானத்தின் பாகங்களை வைத்து 500 வாட்ச்கள் செய்யப்பட்டன. அது ஒரு செலெக்டட் எடிஷன், ஸ்பெஷல் எடிஷன். இந்த வாட்சின் பெயரே, ரபேஃல் ஸ்பெஷல் எடிஷன் என விளக்கம் அளித்தார்.

காவி ஆடை சர்ச்சை
ரபேஃல் வாட்ச் விவகாரம் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாஜக நிர்வாகியும், இயக்குநருமான பேரரசு செய்தியாளர்களை சந்தித்த போது, நடிகை தீபிகா படுகோனே ஆடை சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பேரரசு, திரைப்படத்தில் நடிகை காவி உடை அணிந்து நடித்ததால் பாஜக விமர்சனம் வைக்கிறது என சொல்கிறார்கள். காவி என்பது அதை யார் அணிகிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான். அதேபோல் தமிழ்ப்படங்களிலும் காவி உடைகள் அணிந்து காட்சிகள் உள்ளன.

அரசியல் பார்வை
இதற்கு முன்னால் காவியை ஒரு நிறமாகப் பார்த்தோம். திரைப்படங்களைப் படங்களாகப் பார்த்தோம். அப்பொழுதெல்லாம் பிரச்சனை இல்லை. இப்பொழுது அரசியல் பார்வையுடன் பார்த்தால் தப்பாக தோன்றும். அதைத் தூக்கி எறிந்துவிட்டு கலைத்தன்மையுடன் பார்த்தால் தவறாகத் தெரியாது என்று தெரிவித்தார்.

நேரம் சரியில்லை
தொடர்ந்து அண்ணாமலையின் ரபேஃல் வாட்ச் விவகாரம் பற்றிய கேள்விக்கு, வாட்ச் டைம் கேட்டால் நமக்கு நல்ல நேரம் என்று அர்த்தம். ஆனால் நாம் கட்டியுள்ள வாட்ச் விலை என்ன என்று கேட்டால் நமக்கு டைம் சரியில்லை என்று அர்த்தம். அண்ணாமலை மற்றும் பிற பாஜக தலைவர்கள் திமுக தலைவர்களின் வாட்ச் மற்றும் அதன் விலையைப் போட்டுள்ளார்கள். அதற்கான ரசீதை திமுகவினர் காட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.
-
"மாற்றத்தை விரும்பும் மக்கள் ஒன்னா சேருவோம்" மக்கள் மேடை இயக்கம் குறித்து லதா ரஜினிகாந்த் விளக்கம்! -
60,370 வேட்பாளர்கள்.. சக்ரவியூகம்.. அடித்து தூக்கிய அண்ணாமலை.. இதெல்லாம் எதிர்பார்க்காத வேகம் -
அண்ணாமலையுடன் இணையும் மாஜி டிஜிபி.. சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏகே விஸ்வநாதன் யார்? -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
அடிச்சு ஆடும் அண்ணாமலை! 3 கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் செக்! உள்ளாட்சி தேர்தலுக்கு பக்கா ப்ளான்! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்!












Click it and Unblock the Notifications