‘நாடகம் ஆடுறீங்களா.. அய்யாவுக்கு ஏதாவது ஆச்சுனா தொலைச்சுடுவேன்’ – அன்புமணி ஆவேச பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமக வில் தந்தை மகன் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் ராமதாஸ், அன்புமணி இருவரும் தனித்தனி டிராக்கில் பயணித்து வருவது அந்தக் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக்குறைவால் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அன்புமணி மருத்துவமனை சென்றும் அவரை சந்திக்க முடியவில்லை. இந்நிலையில் அய்யாவுக்கு ஏதாவது என்றால் தொலைத்து போடுவேன். நான் ரொம்ப கோபத்தில் இருக்கிறேன் என்று அன்புமணி ஆவேசமாக பேசியுள்ளார்.

பாமகவில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே கருத்து வேறுபாடு, மோதல் உச்சத்தில் இருந்து வருகிறது. இதனால் பாமகவில் விரிசல் ஏற்பட்டு தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். தந்தை மகனான ராமதாஸ், அன்புமணி இருவரும் தனித்தனியாக பொதுக்குழு, மாநாடு, பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார்கள். அன்புமணி மீது நேரடியாக ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

Anbumani Ramadoss

மருத்துவனையிலும் பிரச்சனை

இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக ராமதாஸ், கடந்த 5 ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும் தமிழகத்தின் பல அரசியல் கட்சி தலைவர்கள் மருத்துவமனை சென்று ராமதாஸை நேரில் சந்தித்தனர்.

ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுனே அன்புமணியும் அப்பலோ மருத்துவமனை சென்றார். ஆனால் ராமதாஸ் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால், அவரை சந்திக்க முடியவில்லை என்று ராமதாஸ் கூறியிருந்தார். மற்ற தலைவர்கள் ராமதாஸை சந்தித்த நிலையில், அன்புமணியை வேண்டுமென்றே சந்திக்காமல் தவிர்த்துவிட்டதாக விமர்சனம் எழுந்தது. இது பாமகவில் நிலவும் பிரச்சனையின் தொடர்ச்சியாகவே பார்க்கப்பட்டது.

அன்புமணி எச்சரிக்கை

இந்நிலையில் பனையூர் அலுவலகத்தில் பாமக நிர்வாகிகளிடம் பேசிய அன்புமணி, "அய்யா உடல்நலத்துடன் நன்றாக இருக்கிறார். மருத்துவமனை பரிசோதனைக்காக சென்றார். இது முன்பே திட்டமிடப்பட்ட பரிசோதனை தான். ஒரு மாதத்திற்கு முன்பே சொல்லப்பட்டு, ஒரு வாரத்திற்கு முன்பு உறுதி செய்துவிட்டு போயுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்துவிட்டு நன்றாக இருக்கிறார் என கூறிவிட்டார்கள். பரிசோதனைக்கு சென்றதற்கெல்லாம் சிலர் அய்யாவுக்கு உடம்பு சரியில்லை வந்து பார் என்கிறார்கள்.

இது அசிங்கமாக உள்ளது. யார் யாரோ கூப்பிடுகிறார்கள். அய்யாவுக்கு தற்போது 87 வயது. இப்படி ஒரு பரிசோதனைக்கு சென்றுள்ளனர். இன்ஃபெக்ஸன் ஆகிவிடக் கூடாது என்பதற்காக ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. யார் யாரோ வந்து உள்ளே சென்று பார்க்கிறார்கள். அது என்ன பொருட்காட்சியா. அய்யாவுடைய உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். அய்யா நம்முடைய பாதுகாப்பு. நான் இருக்கும்போது காரிடரை கூட தாண்ட மாட்டார்கள். நான் விட மாட்டேன். இல்லையென்றால் அய்யாவை தூங்க விட மாட்டார்கள்.

தொலைச்சுடுவேன்

அய்யாவுக்கு கழிப்பறையில் கூட போன் வருகிறது. என்னய்யா பண்ணிட்டு இருக்கீங்க அய்யாவை வெச்சுட்டு. அய்யாவுக்கு ஏதாவுது ஆச்சு என்றால் தொலைச்சு போடுவேன். சும்மா இருக்க மாட்டேன். என்ன.. வேடிக்கை பார்க்கறேன் என நினைச்சுட்டு இருக்காங்க. மனசுல அவ்வளவு கோபம் இருக்கும். அய்யாவை வெச்சு டிராமா பண்ணி நாடகம் ஆடிட்டு இருக்காங்க. துப்பு இல்லாதவர்கள்." என்று கோபமாக பேசினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+