பாஜகவை சேர்ந்த எந்த பெண்ணாவது பாலியல் புகார் கொடுத்துள்ளாரா? குஷ்பு கேள்வி
சென்னை: பாஜகவில் எந்த தலைவர் மீது, ஏதாவது பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளதா, அவ்வாறு கொடுக்கப்பட்டால், அந்த பெண்ணுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த கே.டி.ராகவன் தனது மொபைல் போனில் ஆபாச வீடியோ சாட்டிங் செய்ததாக ஒரு வீடியோ வெளியான நிலையில், மாநில பொதுச் செயலாளர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
மேலும், இந்த விவகாரத்தில் தன் மீது தவறு இல்லை என்றும், சட்டப்படி சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

நெட்டிசன்கள்
இந்தநிலையில் பாஜகவில் உள்ள பெண் தலைவர்களான வானதி சீனிவாசன், குஷ்பு, காயத்ரி ரகுராம் போன்றவர்கள் இந்த சர்ச்சைகள் தொடர்பாக இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என்று கூறி பிற கட்சிகளை சேர்ந்த பல நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் குரல் எழுப்புவதை பார்க்க முடிகிறது.

பெண் தலைவர்கள்
இப்படித்தான் இன்று திவ்யா என்ற பெண் ஒருவர், பாஜகவில் இருக்கும் பெண்களின் பாதுகாப்புக்கு வழி என்ன.. இப்பவாவது கருத்து சொல்வீர்களா இல்லை அரசியல் செய்துகொண்டு இருக்க போறீங்களா, என்று , வானதி சீனிவாசன், குஷ்பு மற்றும் காயத்ரி ரகுராம் ஆகியோர், டுவிட்டர் கணக்குகள் டேக் செய்து கேள்வி எழுப்பினார்.

புகழுக்காக கேள்வி
இதற்கு பதிலளித்துள்ள குஷ்பு, மோசமான திராவிட மனப்பான்மையோடு கவனத்தை ஈர்ப்பதற்கு நீங்களும் முயற்சி செய்ய வேண்டாம். போராளிகள் என்று கூறிக்கொள்பவர்கள் நேரம் இருந்தால் என்னுடைய டுவிட்டர் பதிவுகளை பார்க்கலாம். இரண்டு நிமிட புகழுக்காக எங்களை ட்விட்டரில் டேக் செய்ய வேண்டாம். ஒரு பெண் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

திமுகவினர் கேலி செய்கிறார்களாம்
இன்னொரு ட்விட்டர் பதிவில், திமுக கட்சியினர் கிண்டல் கேலி செய்து வருவதை நான் அறிந்திருக்கவில்லை. இது கவலைக்குரிய விஷயம் என்று தெரிவித்திருந்தார். சோனியா அருண்குமார் என்ற நெட்டிசன் குஷ்புவிடம் , பாஜகவில் பெண் தொண்டர்களின் நிலைமை மோசமாக இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார். அவருக்கும் பதில் அளித்துள்ளார் குஷ்பு.

புகார் சொன்னால் துணை நிற்போம்
பாஜக கட்சியை சேர்ந்த யாராவது ஒரு பெண் யார் மீதாவது பாலியல் சீண்டல் செய்ததாக புகார் சொல்லி இருக்கிறார்களா.. அப்படி பெண்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆதரவாக தான் நாங்கள் இருப்போம். இதில் கட்சி பார்க்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார் . மேலும் இது தொடர்பாக கேள்வி கேட்பவர்களை கவனத்தை ஈர்ப்பதற்காக இவ்வாறு தனக்கு கேள்விகளை முன் வைக்கிறார்கள் என்று குஷ்பு டுவிட்டரில் காட்டமாக விமர்சனம் செய்வதை கவனிக்க முடிகிறது.
-
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications