மத்திய அரசு பலமாக இருந்தால் நீதிமன்றங்கள் செயலிழக்கும் - ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் கருத்து
மத்திய அரசு பலமாக இருந்தால், நீதிமன்றங்கள் செயலிழந்துவிடும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் கூறினார்.
மத்திய அரசு பலமுடன் இருந்தால், நீதிமன்றங்கள் செயலிழக்கும். அரசை சார்ந்துதான் இயங்க வேண்டிய சூழல் உருவாகும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் கூறியுள்ளார்.
சென்னை மேடவாக்கத்தில் காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில், நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் வரலாற்று அறிஞர் இர்பான் ஹபீப் மற்றும் வேளாண் சட்டத்துக்கு எதிராகப் போராடிய சம்யுக்தா கிசான் மோர்சா அமைப்புக்கு விருதுடன், தலா ரூ.2.50 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டன.
இந்து குழும வெளியீட்டுப் பிரிவு இயக்குநர் என்.ராம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, விருதுகளை வழங்கினார்.

பொது வாழ்வில் நேர்மை
விருது வழங்கும் விழாவில் பேசிய காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளைப் பொதுச் செயலர் எம்.ஜி.தாவூத் மியாகான், அரசியல், பொதுவாழ்வில் நேர்மையுடன் செயல்படுபவர்களை, இன்றைய தலைமுறைக்கு அடையாளம் காட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

விவசாய சட்டத்திற்கு எதிரான போராட்டம்
எஸ்கேஎம் அமைப்பின் போராட்டத்தால், மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது. அதேபோல, பாசிச சக்திகளின் வரலாற்றுத் திரிபுகளை திறம்பட எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றவர் அறிஞர் இர்பான் ஹபீப். இவர்களை கவுரவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று கூறினார்.

நீதிமன்றங்கள் செயலிழக்கும்
ஓய்வுபெற்ற நீதிபதி டி.ஹரி பரந்தாமன் பேசும்போது, மத்திய அரசு பலமுடன் இருந்தால், நீதிமன்றங்கள் செயலிழக்கும். அரசை சார்ந்துதான் இயங்க வேண்டிய சூழல் உருவாகும் என்றார். மேற்கு வங்க மாநிலத்தில் கணிசமாக வசிக்கும் முஸ்லிம்கள், கல்வி, வேலைவாய்ப்புகளில் மிகவும் பின்தங்கியுள்ளனர். எனவே, அங்குள்ள மார்க்சிய அமைப்புகள், உரிய தீர்வுகாண ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் ஓய்வுபெற்ற நீதிபதி டி.ஹரி பரந்தாமன் கூறினார்.

உண்மைக்கான போராட்டம்
விழாவில் பேசிய என்.ராம், விருது பெறும் இர்பான் ஹபீப், உலக அளவில் சிறந்த வரலாற்று அறிஞர். பாட நூல்களில் வரலாற்றுத் திரிபுகளை செயல்படுத்த முனைந்தபோது, உரிய ஆவணங்களை முன்வைத்து, உண்மைக்காக சமரசமின்றிப் போராடினார் என்றார். அதேபோல, எஸ்கேஎம் அமைப்பு கடும் போராட்டத்தால், வேளாண் சட்டங்களை மத்திய அரசை திரும்பப் பெறவைத்தது.

பிரித்தாளும் முயற்சி
தற்போதைய சூழலில், நடுநிலை என்ற பெயரில் அமைதியாக இருப்பது சிறந்த செயலாக இருக்காது. காஷ்மீரில் பண்டிட்கள் மீதான தாக்குதலை ஒருபோதும் ஏற்க முடியாது. அதேநேரம், அதை முன்வைத்து படம் எடுத்து, முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை வளர்ப்பதையும் அனுமதிக்க முடியாது. பிரித்தாளும் முயற்சி நீண்டகாலத்துக்குப் பலன் தராது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications